சரக்கு ஏத்திட்டு போற மாதிரி ஒரு டூ-வீலர் வேணுமா? செப்டம்பர்ல அறிமுகமாக இருக்கும் இந்த வாகனம் 150 கிலோ தாங்கும்

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஜூலியோ இ-பைக்ஸ் (ZELIO Ebikes)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனம் விரைவிலேயே இந்திய மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவை அலங்கரிக்கும் விதமாக ஓர் புதுமுக விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் வருகையை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் அதன் புதுமகு எலெக்ட்ரிக் டூ-வீலரின் டீசர் படத்தை வெளியிட்டு இருக்கின்றது. விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் அந்த எலெக்ட்ரிக் இந்தியாவின் கார்கோ டூ-வீலர் பிரிவையே அலங்கரிக்கும் விதமாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

அதன் தன்மைக்கு ஏற்பவே அதன் பெயரும் சூட்டப்பட்டு இருக்கின்றது. லாஜிக்ஸ் (LOGIX) எனும் பெயரிலேயே அது விற்பனைக்கு வர இருக்கின்றது. பெயரில் மட்டுமல்ல கார்கோ பயன்பாட்டிற்கு ஏற்ப பல தனித்துவமான வசதிகளையும் இந்த வாகனம் தன்னுள் தாங்கியிருக்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

Logix cargo electric scooter teaser unveiled

மிக முக்கியமாக இது சுமையை சுமப்பதில் கில்லாடியாக இருக்கும் என கூறப்படுகின்றது. அந்தவகையில், சுமார் 150 கிலோ வரையிலன எடை உள்ள பொருட்களையும் தாங்கி செல்லும் திறன் அதற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. நிறுவனமும் அதன் தரப்பில் இ-ஸ்கூட்டரின் இந்த லோடு கெபாசிட்டியை உறுதி செய்திருக்கின்றது.

இவ்வளவு அதிக எடையைச் சுமந்தாலும் அது ஓர் முழு சார்ஜில் 90 கிமீ வரை ரேஞ்ச் தரும் என்றும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இதன் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் மணிக்கு 25 கிமீ வேகத்தில் மட்டுமே பயணிக்கும் என்பதுதான். இந்த அளவு குறைவான வேகத்தில் பயணிக்கும் காரை இயக்க லைசென்ஸ் அல்லது பதிவு சான்று போன்றவை தேவைப்படாது என்பது கவனிக்கத்தகுந்தது.

ஆகையால், அனைத்து வகையிலும் இந்த வாகனம் மிகப் பெரிய லாபத்தை வழங்கக் கூடியதாகவே இருக்கும் என தெரிகின்றது. எனவே, டெலிவரி போன்ற சேவைகளில் ஈடுபடுவோர் மத்தியில் இந்த வாகனத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. இப்போது இந்த வாகனம் வெளியீடு மட்டுமே செய்யப்பட்டு உள்ளது.

விரைவில் அது விற்பனைக்கு வந்துவிடும் என தெரிகின்றது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த வாகனம் வருகின்ற செப்டம்பர் மாதமே வெளியீடு செய்யப்பட இருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. எனவே செப்டம்பர் மாதத்தில் ஜூலியோ இபைக்ஸ் பிராண்டின் அனைத்து விற்பனையகங்கள் வாயிலாகவும் இந்த வாகனம் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நிறுவனம் இன்னும் இந்த ஸ்கூட்டரின் படங்களையும் வெளிடவில்லை என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. தற்போது இ-ஸ்கூட்டரின் நிழற்படங்களையே அது வெளியிட்டு இருக்கின்றது. இதேபோல், என்ன மாதிரியான சிறப்பம்சங்களை இது தாங்கியிருக்கும் என்பது பற்றிய விபரங்களையும் அது அறிவிக்கவில்லை. செப்டம்பர் மாத அறிமுகத்தின்போதே அதுபற்றிய விபரங்களை நிறுவனம் அறிவிக்கும் என தெரிகின்றது.

குறிப்பாக, விலையும் அன்றைய தினத்திலேயே அறிவிக்கப்பட இருக்கின்றது. ஜூலியோ இ-பைக்ஸ் பிராண்டின்கீழ் இப்போதைய நிலவரப்படி எட்டுக்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனையில் உள்ளன. அவற்றில் சமீபத்திய வெளியீடாக கிரேசி (GRACY) சீரிஸ் உள்ளது. இந்த கிரேசி ஐ (GRACYi), கிரேசி ப்ரோ (GRACY Pro) மற்றும் கிரேசி பிளஸ் (GRACY+) தேர்வுகளிலேயே இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கிறது.

இதுவும் நிறுவனத்தின் விலை குறைவான இ-ஸ்கூட்டராகவே காட்சியளிக்கின்றது. ரூ. 59 ஆயிரத்து 273 தொடங்கி ரூ. 83 ஆயிரத்து 073 வரையிலான விலையில் இது விற்கப்படுகின்றது. இந்த மாடலை போலவே வரவிருக்கும் லாஜிக்ஸ் கார்கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் குறைவான விலைக் கொண்டதாகவே இருக்கும் என நம்பப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பயணிகளுக்கான எலெக்ட்ரிக் டூ-வீலரை போலவே கார்கோ பிரிவில் பயன்படக் கூடிய மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கும் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் நோக்கிலேயே தற்போது ஜீலியோ இ-பைக்ஸ் தற்போது லாஜிக்ஸ் கார்கோ-வை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 12, 2024, 14:28 [IST]
English summary
Zelio ebikes unveils logix cargo scooter 90 km range 150 kg capacity
மேலும்... #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+