வெறும் 2 ரூபாய் செலவில் 80 கிமீ ஓட்டலாமா! விலை அதை விட ஆச்சரியமா இருக்கே! சண்முகம் வண்டிய ஷோரூமுக்கு விடு!
இந்தியாவை சேர்ந்த பிரபலமான நிறுவனங்களில் ஒன்று ஜூலியோ இபைக்ஸ் (Zelio Ebikes). இது எலெக்ட்ரிக் டூவீலர் (Electric Two-wheeler) தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த நிறுவனம் தற்போது புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு எக்ஸ் மேன் (X Men) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தம் 5 வேரியண்ட்களில் (Variants) விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை கவரும் வகையில், 5 வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டில் 60V/32AH லீட் ஆஸிட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் (Range) 55-60 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 7-8 மணி நேரம் வரை ஆகும்.

இந்த வேரியண்ட்டின் விலை 64,543 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டில் 60V/32AH லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் 80 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு வெறும் 4 மணி நேரம் மட்டுமே ஆகும்.
இந்த வேரியண்ட்டின் விலை 87,573 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். எக்ஸ் மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 1.5 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மின்சாரத்திற்கு தோராயமாக 2.25 ரூபாய் மட்டுமே செலவாகும்.

எனவே வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு இந்த எக்ஸ் மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உங்கள் செலவை குறைக்கும் என்பதுடன், பல்வேறு அதிநவீன வசதிகளையும் கொண்டுள்ளது.
இதன்படி திருடர்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை திருட முயற்சி செய்தால், அலாரம் ஒலிக்கும். இது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முக்கியமான வசதிகளில் ஒன்றாகும். இதுதவிர முன் பகுதியில் டிஸ்க் பிரேக்குகள், பின் பகுதியில் ட்ரம் பிரேக்குகள், பார்க்கிங் ஸ்விட்ச், செல்போன் சார்ஜர், முன் மற்றும் பின் பகுதியில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்கள் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் ரிவர்ஸ் கியர் ஆகிய வசதிகளும் கூட, புத்தம் புதிய எக்ஸ் மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. கருப்பு, வெள்ளை, கடல் பச்சை மற்றும் சிகப்பு ஆகிய கலர் ஆப்ஷன்களில் எக்ஸ் மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். குறிப்பாக கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு தினமும் சென்று வர வேண்டிய தேவை உள்ளவர்கள், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம். ஜூலியோ இபைக்ஸ் நிறுவனத்திற்கு நாடு முழுக்க 100க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்கள் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








