முன்னணி பிராண்டுகளுக்கே டஃப் கொடுக்கும் போலையே.. ரூ. 56,051க்கே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்குதா!

ஜீலியோ இ-பைக்ஸ் (Zelio Ebikes) நிறுவனம் ஈவா (Eeva) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் சீரிஸ் (Series) ஆகும். இந்த சீரிஸின் கீழ் மூன்று விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களையே ஜீலியோ இ-பைக்ஸ் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ஈவா (Eeva), ஈவா ஈகோ (Eeva Eco) மற்றும் ஈவா இசட்எக்ஸ் பிளஸ் (Eeva ZX+) ஆகியவையே அவை ஆகும். நகர்ப்புற பயன்பாட்டிற்கு உகந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவே இதனை ஜீலியோ இ-பைக்ஸ் தயார் செய்து இருக்கின்றது.

பன்முக பேட்டரி பேக் ஆப்ஷன்கள், அட்வான்ஸ்டு சிறப்பம்சங்கள் மற்றும் நீண்ட கால வாரண்டி திட்டம் ஆகியவற்றுடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை வாங்கிக் கொள்ள முடியும். மேலும், ரூ. 56,051 என்கிற குறைவான ஆரம்ப விலையில் இருந்தே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

Zelio introduces eeva e-scooters

ஜீலியோ இ-பைக்ஸ் ஈவா மாடல் பற்றிய விபரங்கள்: நகர்புற பயன்பாட்டிற்காக தயார் செய்யப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலே இதுவாகும். இதில் பிஎல்டிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் 60/72V ஆற்றல்மிக்கது. ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த எடையே 80 கிலோவாகும். அதேவேளையில், இதனால் 180 கிலோ வரையில் கையாள முடியும்.

இந்த மாடலில் டிரம் பிரேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன் சிறந்த இயக்க அனுபவத்திற்காக ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது கரடு-முரடான பாதையிலும் சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும். இதுதவிர, நவீன கால தொழில்நுட்ப வசதிகளையும் இந்த ஸ்கூட்டரில் மிக தாராளமாக ஜீலோ இ-பைக்ஸ் வழங்கி இருக்கின்றது.

Zelio eeva eco

அந்தவகையில், திருட்டைத் தவிர்க்கும் தொழில்நுட்பம், பார்க்கிங் ஸ்விட்ச் மற்றும் ஆட்டோ ரிப்பேர் ஸ்விட்ச் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, ரிவர்ஸ் கியர், யுஎஸ்பி சார்ஜர், டிஜிட்டல் திரை போன்ற அம்சங்களும் ஈவா மாடலில் வழங்கப்பட்டு இருக்கின்றன. நிற தேர்வை பொருத்த வரை ப்ளூ, கிரே, ஒயிட் மற்றும் பிளாக் ஆகிய ஆப்ஷன்களே இதில் வழங்கப்படுகின்றன.

இதில் ஐந்து விதமான பேட்டரி பேக் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. ஓர் முழு சார்ஜில் 55 கிமீ முதல் 60 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரக் கூடிய 60V / 32AH லீட் ஆசிட் (இதன் விலை ரூ. 56,051) மற்றும் ஓர் முழு சார்ஜில் 70 கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய 72V/32AH லீட் ஆசிட் (இதன் விலை ரூ. 58,551) ஆகிய தேர்வுகளும் இதில் வழங்கப்படுகின்றன.

Zelio eeva zx plus

இதுதவிர, ஓர் முழு சார்ஜில் 70கிமீ முதல் 75கிமீ வரையில் ரேஞ்ஜ் தரக் கூடிய 60V/38AH லீட் ஆசிட் (இதன் விலை ரூ.61,851) ஆகிய பேட்டரி, 100 கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய 72V/38AH லீட் ஆசிட் மற்றும் 80கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய 60V/30AH லித்தியம் அயன் பேட்டரி பேக் தேர்வுகளும் ஈகோ-வில் வழங்கப்படுகின்றன. இவற்றின் விலை ரூ.65,551 முதல் ரூ.79,051 வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

ஈவா ஈகோ பற்றிய விபரங்கள்: ஈகோ-வை போலவே அதிக தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக ஈவா ஈகோ காட்சியளிக்கின்றது. இதன் எடையும் 80 கிலோகிராம் மட்டுமே ஆகும். இதனால் 180 கிலோ வரை சமாளிக்க முடியும். பின் வீலில் டிரம் பிரேக்கும், முன் வீலில் டிஸ்க்கும் வழங்கப்பட்டு இருக்கும்.

எலெக்ட்ரிக் மோட்டாரை பொருத்த வரை 48/60V பிஎல்டிசி (BLDC) மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மற்றபடி தொழில்நுட்பங்கள் விஷயத்தில் இந்த ஸ்கூட்டர் ஈகோவுடன் ஒத்துப் போகும் வகையிலேயே இருக்கின்றது. டிஜிட்டல் திரை, ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர், ரிவர்ஸ் கியர், பார்க்கிங் ஸ்விட்ச், ஆட்டோ ரிப்பேர் ஸ்விட்ச் மற்றும் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதனை மூன்று விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும். 48V/32AH லீட் ஆசிட், 60V/32 AH லீட் ஆசிட் மற்றும் 60V/30 AH லித்தியம் அயன் பேட்டரி பேக் ஆகியவையே அவை ஆகும். இவை ஓர் முழு சார்ஜில் 50கிமீ முதல் 100கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும். மேலும், இவை ரூ.52 ஆயிரம், ரூ.54 ஆயிரம் மற்றும் ரூ.68 ஆயிரம் ஆகிய விலைகளிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றன.

ஈவா இசட்எக்ஸ் பிளஸ் பற்றிய விபரங்கள்: முன்னதாக பார்த்த இரண்டு மாடல்களைக் காட்டிலும் கொஞ்சம் அதிக அட்வான்ஸ்டு அம்சங்களைத் தாங்கிய மாடலாக இது காட்சியளிக்கின்றது. இதற்கு சான்றாக இதில் பன்படுத்தப்பட்டு இருக்கும் பிஎல்டிசி மோட்டார் உள்ளது. 60/72V திறன் கொண்ட மோட்டாரே ஈவா இசட்எக்ஸ் பிளஸ் மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இத்துடனேயே, திருட்டைத் தவிர்க்கும் தொழில்நுட்பம், ரிவர்ஸ் கியர், பார்க்கிங் ஸ்விட்ச், ஆட்டோ ரிப்பேர் ஸ்விட்ச், செல்போன்களுக்கான யுஎஸ்பி சார்ஜர், பல்வேறு சிறப்பு வசதிகளைத் தாங்கிய டிஜிட்டல் திரை உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பேட்டரி பேக் தேர்வையும் மிக தாராளமாகக் கொண்ட மாடலாகவே இது காட்சியளிக்கின்றது.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் முதலில் பார்த்த ஈவா-வில் வழங்கப்படும் பேட்டரி பேக் தேர்வுகள் அப்படியே ஈவா இசட்எக்ஸ் பிளஸ்ஸிலும் வழங்கப்படுகின்றது. ஆனால், இது ஓர் பிரீமியம் அம்சங்களை அதிகம் தாங்கிய வாகனம் என்பதால் இதன் ஆரம்ப விலையே ரூ. 67,500 ஆக காட்சியளிக்கின்றது. இதன் அதிகபட்ச விலையே ரூ. 90,500 ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பரந்த விரிந்த தேர்வுகளுடன் ஜீலியோ இ-பைக்ஸ் அதன் ஈவா சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்குக் களமிறக்கியிருப்பது போட்டி நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்தியாவில் இப்போது மின்சார வாகனங்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது. இந்த நிலையிலேயே வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு மலிவான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஜீலியோ இ-பைக்ஸ் களமிறக்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 28, 2024, 15:46 [IST]
English summary
Zelio launches eeva electric scooters in india prices start from inr 56051
மேலும்... #electric bike #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X