ஒரே ஆளா வந்து 5 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கிட்டு போயிட்டாங்க!.. 2024இன் பிரமாண்ட கொள்முதல்!
இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகன விற்பனையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களில் மோட்டோவோல்ட் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் (Motovolt Mobility Pvt. Ltd)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் ஓர் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் டூ- வீலர் மாடலையே ஒரே ஆளாக, ஒற்றை நிறுவனம் மிகப் பெரிய எண்ணிக்கையில் வாங்கிச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 5 ஆயிரம் யூனிட்டுகளுக்கே அந்த நிறுவனம் ஆர்டர் கொடுத்து உள்ளது. ஸெவோ (ZEVO), இந்த நிறுவனமே அதிக எண்ணிக்கையில் மோட்டோவோல்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கி உள்ளது.
அது, மோட்டோவோல்டின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான எம்7 (M7)-யே வாங்கி இருக்கின்றது. வாடகை வாகன சேவை மற்றும் டெலிவரி சேவை உள்ளிட்டவற்றை முக்கிய பணிகளாக மேற்கொண்டு வரும் நிறுவனமே ஸெவோ ஆகும். தன்னுடையே இந்த சேவையில் பயன்படுத்தும் நோக்கிலேயே அது இவ்வளவு மிகப் பெரிய எண்ணிக்கையிலான மின்சார ஸ்கூட்டர்களுக்கு ஆர்டரை வழங்கி இருக்கின்றது.

குறிப்பாக, காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கிலேயே அது எலெக்ட்ரிக் டூ-வீலர்களை மட்டும் வாங்கி இருக்கின்றது. இதற்கு பின்னால் மற்றுமொரு காரணமும் இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, நிறுவனம் விலை உயர்ந்து காணப்படும் பெட்ரோலுக்காக பணத்தை வீணழிக்காமல், மிச்சப்படுத்த வேண்டும் என்கிற நோக்கிலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கி இருக்கின்றது.
இதுதவிர, உடனடி மற்றும் விரைவான சேவையை வழங்கும் பொருட்டு அது அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கி இருக்கின்றது. எனவே வரும் நாட்களில் நிறுவனத்தின் டெலிவரி மற்றும் அர்பன் மொபிலிட்டி சேவையில் மோட்டோவோல்ட் எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே மிகப் பெரிய பங்கினை வகிக்கும் என்கிற சூழல் உருவாகி இருக்கின்றது.
மோட்டோவோல்ட் எம்7, அதிக தொழில்நுட்ப வசதிகளை தாங்கிய மற்றும் அதிக ரேஞ்ஜ் திறனை வழங்கக் கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாகக் காட்சியளிக்கின்றது. அது ஓர் முழு சார்ஜில் 166 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். டெலிவரி சேவையில் சிறந்த விளங்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய ரேஞ்ஜை அது வழங்கி இருக்கின்றது.
ஆமாங்க, டெலிவரி துறைக்காகவே தயார் செய்யப்பட்ட பிரத்யேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலே மோட்டோவோல்ட் எம்7 ஆகும். இதன் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக 3 ஆண்டுகள் அல்லது 60,000 கிமீ உத்தரவாதத்தை மோட்டோவோல்ட் வழங்குகிறது. இதன் வாயிலாக நம்பகத்தன்மையை நிறுழனம் உறுதி செய்திருக்கின்றது.
டெலிவரி சேவைக்கான வாகனமாக இருந்தாலும் அதில் நவீன கால அம்சங்கள் பல வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், ஐஓடி டிராக்கர், ரிமோட் லாக் மற்றும் அன்லாக் வசதி, திருட்டை தவிர்க்கும் விதமாக அலாரம் வசதி, செல்போனை சார்ஜ் செய்துக் கொள்ள ஏதுவாக யுஎஸ்பி சார்ஜர், டிஸ்க் பிரேக்குகள் மற்றும் எல்சிடி திரை போன்ற பலதரப்பட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
எம்7 இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்ட ஜெர்மன் பொறியியலைக் கொண்ட மின்சார ஸ்கூட்டர் ஆகும். இதில் IP67-ரேட்டட் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் லித்தியம் அயன் பாஸ்பேட் வகை பேட்டரி பேக் ஆகும். 1.5 kWh திறன் கொண்ட இரண்டு பேட்டரி பேக்கே இதில் வழங்கப்பட்டு இருக்கும்.
இது ஏஐஎஸ் 156 சான்று பெற்ற பேட்டரி பேக் ஆகும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிமீ ஆகும். இதற்காக 1.5 kW திறன் கொண்ட மின்சார மோட்டாரே எம்7இல் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 2.5 kW மற்றும் 120 என்எம் டார்க் ஆற்றலை வெளியேற்றும்.
இந்த மோட்டார் ஐபி67 தர சான்று பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய சூப்பரான வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே மொத்தமாக 5 ஆயிரம் யூனிட்டுகளை ஸெவோ வாங்கி இருக்கின்றது. ஒவ்வொரு இவை அனைத்தும் நிறுவனத்திற்கு டெலிவரி செய்யப்பட இருக்கின்றது. இது மாசு உமிழ்வைக் குறைத்து, தூய்மையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்ற மிகப் பெரிய எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுமாதிரியான சம்பவங்கள் நாட்டில் அரங்கேறி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே புதிய சம்பவமாக ஸெவோ 5 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஆர்டரை வழங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








