1980களில் பஜாஜ் ஸ்கூட்டர்களுக்கு தண்ணி காட்டிய ஸ்கூட்டர்! இத்தனை வருஷம் கழித்து மீண்டும் விற்பனையில்!

கைனெட்டிக் (Kinetic), இந்த பெயரை 1980 சமயத்தில் இருந்தே கேள்விப்படுவது போன்று சிலருக்கு தோன்றலாம். இப்போதும் வேறொரு பெயரில் மார்க்கெட்டில் செயல்பட்டாலும் கைனெட்டிக் பத்தோடு பதினென்றாகவே தற்சமயம் உள்ளது. ஆனால், 1980களில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்துக்கே ஸ்கூட்டர் (Scooter) விற்பனையில் ஓர் உள்நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமாக கைனெட்டிக் டஃப் கொடுத்துக் கொண்டிருந்தது.

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹோண்டா (Honda) நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டதினால், கைனெட்டிக் நிறுவனத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்தது. ஹோண்டா உடன் இணைந்து பல்வேறு ஸ்கூட்டர்களை அடுத்தடுத்ததாக கைனெட்டிக் களமிறக்க துவங்கியது. அவ்வாறு, கைனெட்டிக் நிறுவனத்தில் இருந்து 1980-90 காலக்கட்டத்தில் விற்பனை செய்யபட்ட ஸ்கூட்டர்களுள் ஸூம் (Zoom) ஒன்றாகும். டி.எக்ஸ் (DX) மற்றும் இசட்.எக்ஸ் (ZX) என இரு விதமான வேரியண்ட்களில் அந்த சமயத்தில் கைனெட்டிக் ஸூம் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டது.

kinetic dx zoom scooter history

இதில், ஸூம் டி.எக்ஸ் வேரியண்ட் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகிய நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் நம் இந்தியர்களின் வாயில் நுழையாததால் ஸூம் என்கிற வார்த்தை மறைந்து கைனெட்டிக் டி.எக்ஸ் ஸ்கூட்டர் என்றே அழைக்கப்பட துவங்கியது. பஜாஜ் சேத்தக் (Chetak) ஸ்கூட்டரை போன்று 1980, 90களில் கைனெட்டிக் டி.எக்ஸ் ஸ்கூட்டரும் மக்கள் மத்தியில் பிரபலமானதாக இருந்தது.

இருப்பினும், 21ஆம் நூற்றாண்டு துவங்கிய பின் வெளிநாட்டு நிறுவனங்களின் வருகை அதிகமான பிறகு கைனெட்டிக் நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய துவங்கியதை அடுத்து, டி.எக்ஸ் ஸ்கூட்டரும் மறைந்தது. மறைந்தது என கூறுவதை விட கைனெட்டிக் நிறுவனம் மஹிந்திரா (Mahindra) உடன் இணைந்து 2008இல் தனது பாதையை மாற்றிக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

kinetic dx zoom scooter history

'கைனெட்டிக் என்ஜீனியரிங்' (Kinetic Engineering) என்கிற பெயரில் இயங்கிவந்த நிறுவனத்தின் சுமார் 80% பங்குகளை வாங்கி அதனை தனது வாகனங்களுக்கான பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாற்றியது மஹிந்திரா. அதன்பின், சில வருடங்கள் கழித்து 2011இல் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவை அதிகரித்து வருவதை பார்த்து 'கைனெட்டிக் க்ரீன்' (Kinetic Green) என்கிற நிறுவனத்தை கைனெட்டிக் குழுமம் (Kinetic Group) நிறுவியது.

அதேநேரம் ஒருபக்கம் கைனெட்டிக் என்ஜீனியரிங் நிறுவனமும் ஆட்டோமொபைல் வாகனங்களுக்கான பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக தனியாக செயல்பட்டு வருகிறது. கைனெட்டிக் என்ஜீனியரிங்கில் உற்பத்தி செய்யப்படும் பாகங்கள் கைனெட்டிக் க்ரீன் நிறுவனத்திற்கும் விற்கப்படுகின்றன. தனித்தனியாக செயல்பட்டாலும் இந்த இரு கைனெட்டிக் நிறுவனங்களும் ஒரே கைனெட்டிக் குழுமத்தின் கீழ் வருகின்றன.

kinetic dx zoom scooter history

இந்த நிலையில், கைனெட்டிக் என்ஜீனியரிங் நிறுவனத்தின் கீழ் செயல்படும் கைனெட்டிக் வாட்ஸ் & வோல்ட்ஸ் (Kinetic Watts & Volts) நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதுவரையில், வாகனங்களுக்கான பாகங்களை மட்டுமே உற்பத்தி செய்துவந்த கைனெட்டிக் வாட்ஸ் & வோல்ட்ஸ் நிறுவனம் தற்போது முழுமையாக உருவாக்கப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது.

அதேநேரம், கைனெட்டிக் க்ரீன் நிறுவனத்தில் இருந்தும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், இரண்டும் வெவ்வேறு நிறுவனங்களாக செயல்பட உள்ளன. கைனெட்டிக் வாட்ஸ் & வோல்ட்ஸ் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக டி.எக்ஸ் (DX) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கைனெட்டிக் டி.எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ரூ.1,11,499 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பழைய பிரபலமான ஸ்கூட்டர்களின் பெயரில் அதேபோன்றதான கிளாசிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கொண்டுவந்து மீண்டும் மார்க்கெட்டில் கவனத்தை பெற கைனெட்டிக் குழுமம் முயற்சித்து வருகிறது. டி.எக்ஸ் ஸ்கூட்டரை காட்டிலும் 1980-90 சமயத்தில் பிரபலமாக இருந்த லூனா (Luna) என்கிற மொபெட் (Moped) வாகனத்தையும் எலக்ட்ரிக்கில் கொண்டுவர கைனெட்டிக் க்ரீன் நிறுவனம் முயற்சித்து வரும் நிலையில், எதிர்பாராத வகையில் கைனெட்டிக் என்ஜீனியரிங் நிறுவனமே அதன் துணை நிறுவனத்தின் மூலம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வணிகத்தில் இறங்கி இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, July 28, 2025, 14:59 [IST]
English summary
1980s kinetic dx zoom scooter history which launched now as kinetic green dx
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X