ரூ 1 லட்சம் கையில இருக்கா? இந்த 8 வண்டில ஒன்ன ஈஸியா வாங்கலாம்!
இந்தியாவில் கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களின் விலைகணிசமாக குறைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் 350 சிசிக்கு குறைவான திறன் கொண்ட வாகனங்களுக்கு 28 சதவீதத்திற்கு பதிலாக தற்போது 18 சதவீத வரி தான் விதிக்கப்படுகிறது. இதனால் இந்த தீபாவளிக்கு வாகனங்கள் வாங்க இதுவே சரியான தருணமாக அமைந்துள்ளது. இந்த வகையில் இந்தியாவில் ரூ1 லட்சத்திற்கு குறைவான பட்ஜெட்டில் விற்பனையாகி வரும் வாகனங்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ்
இந்தியாவின் பைக் என்றே இந்த ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கை சொல்லலாம். நீண்ட ஆண்டுகளாக சிறப்பாக விற்பனவையாகி வரும் பைக்காக இந்த பைக் இருக்கிறது. தற்போது தான் இந்த பைக் அப்டேட் செய்யப்பட்டு விற்பனவை செய்யப்படுகிறது. இந்த பைக் தற்போது ரூ88,057 முதல் ரூ89,331 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டிஇசி
ஹீரோ ஸ்பிளெண்ட்ர் பிளஸ் பைக்கில் சில முக்கிய அம்சங்கள் இணைக்கப்பட்ட பைக்காக இந்த எக்ஸ்டிஇசி பைக் இருக்கிறது. இந்த பைக்கில் டிஜிட்டல் கண்சோல், ப்ளூடூரத் அம்சங்கள், ஐ3 ஸ்டார்ட் ஸ்டாப் டெக்னாலஜி, உள்ளிட்ட அம்ங்கள் உள்ளன. இந்த பைக் ரூ92 ஆயிரம் என்ற ஆன்ரோடுவிலையில் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. இந்த பைக் 97.2 சிசி இன்ஜினை கொண்டது.
ஹீரோ எச்எஃப் டீலக்ஸ்
நீங்கள் குறைந்த விலையில் ஒரு பைக்கை தேடுகிறீர்கள் என்றால் உங்களுக்கு ஏற்ற பைக் தான். இந்தபைக் அதிக மைலேஜையும் வழங்கும் திறன் கொண்டது. இந்த பைக் ரூ 67 ஆயிரம் என்ற விலையில் ஆன்ரோடு விலையாக கிடைக்கிறது. இந்த பைக் இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் அதிகம் வாங்கப்படுகிறது.

ஹோண்டா ஷைன்
ஹோண்டா நிறுவனத்தின் ஷைன் பைக்கை பொருத்தவரை 125 சிசி செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகும் பைக்காக இருக்கிறது. தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற பைக்காக இருகு்கிறது. மறு விற்பனை மதிப்பும் சிறப்பாக இருக்கிறது. இந்த பைக் ரூ94 ஆயிரம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
டிவிஎஸ் ரேடியான்
டிவிஎஸ் ரேடியான் பைக் சொகுசான சீட், உறுதியான பில்டு குவாலிட்டி, சிறப்பான இன்ஜின் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் ஹீரோ ஸ்பிளெண்ட்ர், எச்எஃப் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. இ்நத பைக் ரூ 66 ஆயிரம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. குறைவான விலை என்பதால் அதிகம் விற்பனையாகாது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ்
டிவிஎஸ் நிறுவனம் ஸ்டார் சிட்டி பிளஎஸ் என்ற வாகனத்தை விற்பனை செய்து வருகிறது. இது குறைந்த எடை கொண்ட ஹேண்டில் செய்ய சுலபமான வாகனமாக இரக்கிறது. இந்த வாகனத்தின் விலையை பொருத்தவரை ரூ86,448 முதல் ரூ89415 என்ற விலையில் விற்பனவையாகி வருகிறது. இந்த பைக்கும் ரூ1 லட்சத்திற்குள் வாங்க நல்ல பைக் தான்.
பஜாஜ் பல்சர்
பல்சர் பைக் ஒரு ஸ்போர்ட்டியான பைக்காக அறியப்படுகிறது. இந்த பைக் 125 சிசி இன்ஜின் கொண்ட பைக்காக உருவாக்கியுள்ளது. இந்த பைக் ரூ93,913 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த பைக் பல்வேறு வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது.
டிவிஎஸ் ரைடர் 125
டிவிஎஸ் இளைஞர்கள் மத்தியில் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும் விதமாக டிவிஎஸ் ரைடர் 125 என்ற பைக்கை விற்பனவை செய்த வருகிறது. இந்த பைக் மார்கெட்டில் ரூ95,682 என்ற விலையில் விற்பனவையாகி வரகிறது. இதன் டாப் வேரியன்ட் ரூ1.10 லட்சம் வரை வரலாம். ஆனால் பேஸ் வேரியன்ட் ரூ1 லட்சத்திற்குள் வரும் என்பதால் இதை பலர் விரும்புகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரூ1 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனையாகும் பைக்குகள் அதிகமாக விற்பனையாகிறது. இந்த பைக்குகளில் ஒன்றை நீங்கள் தீபாவளிக்கு வாங்கலாம். இதில் எந்த பைக்கை நீங்கள் வாங்குவீர்கள்? கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









