கம்மியான விலையில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்... எப்படி கட்டுப்படி ஆகுது?

ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் அதன் புதிய மேம்படுத்தப்பட்ட '450' எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, 2025ஆம் ஆண்டிற்கான அப்டேட் (Update) செய்யப்பட்ட ஏத்தர் 450எஸ், 450எக்ஸ் மற்றும் 450 அபெக்ஸ் (Apex) எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை மூன்றும் எந்தெந்த வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்பதையும், அவற்றின் விலைகளை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

கடந்த 2023 ஜூன் மாதத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்வதற்கான மத்திய அரசின் மானியம் சற்று குறைக்கப்பட்டதை அடுத்து, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகள் சற்று உயர்ந்தன. ஆனால், அதற்கு முன்பே தன்னை ஒரு பிரீமியம் தரத்திலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனமாக ஏத்தர் எனர்ஜி காட்டிக் கொண்டது.

2025 ather 450 electric scooters

பெங்களூரு (Bengaluru)-ஐ சேர்ந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அறிமுகம் செய்த '450' என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சற்று பிரீமியம் தரத்திலானவைகளாக இருந்தன. அதற்கேற்ப அவை செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக விளங்கின. இதனாலேயே அனைவரும் வாங்கக்கூடிய விலையில் ரிஸ்டா (Rizta) எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏத்தர் அறிமுகம் செய்தது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய 450 ஸ்கூட்டரிலும் சில மாடல்கள் குறைந்த விலையில் கொண்டுவரப்பட்டுள்ளன.

450எஸ் (450S): 2.9kWh திறன் கொண்ட பேட்டரி உடன் கிடைக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,29,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஆனது புரோ பேக் (Pro Pack) உடனும் கிடைக்கும். கூடுதல் அலங்கரிப்பு மற்றும் தொழிற்நுட்ப வசதிகளை கொண்ட இந்த பேக்கிற்கு கூடுதலாக ரூ.14,000 செலுத்த வேண்டியிருக்கும்.

2025 ather 450 electric scooters

2.9kWh 450எக்ஸ் (450X): ஸ்கூட்டரின் பெயரை பார்த்தவுடனே தெரிந்திருக்கும், இது 2.9kWh பேட்டரி உடன் கிடைக்கும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1,46,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரையும் புரோ பேக் உடன் வாங்கலாம். இந்த பேக் உடன் ஸ்கூட்டரின் விலை ரூ.1,63,999 ஆகும்.

3.7kWh 450எக்ஸ்: புதிய ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 3.7kWh பேட்டரி ஆப்ஷனிலும் கிடைக்கும். இந்த சற்று பவர்ஃபுல்லான பேட்டரி உடன் 450எக்ஸ் ஸ்கூட்டரின் விலை ரூ.1,56,999 ஆகும். புரோ பேக் உடன் வாங்க ரூ.20,000 கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கும். 2.9kWh பேட்டரி 105கிமீ வரையிலான ரேஞ்சை வழங்கும் நிலையில், 3.7kWh பேட்டரியில் 130கிமீ ரேஞ்ச் வரையில் பெறலாம்.

2025 ather 450 electric scooters

450 அபெக்ஸ்: இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் 3.7kWh திறன் கொண்ட பேட்டரி தான் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டாரின் மூலம் சற்று கூடுதலாக 9.38 பிஎச்பி மற்றும் 26 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இதற்கேற்ப இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,99,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாங்கள் குறிப்பிட்டுள்ளவை எல்லாம் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில பத்தாயிரங்கள் அதிகமாக வரும். அதுமட்டுமின்றி, இங்கே நாங்கள் குறிப்பிட்டுள்ளவை ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அறிமுக விலைகள் ஆகும். வரும் மாதங்களில் இந்த விலைகள் அதிகரிக்கப்படலாம். புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் உங்களுக்கு பிடித்தது எது என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 4, 2025, 23:45 [IST]
English summary
2025 ather 450 electric scooters model wise prices check all details here
மேலும்... #ather energy #ather 450x #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X