ஆக்டிவா இவி எல்லாம் ஒரமா போ! ஏத்தர் கொண்டு வந்த இந்த வண்டியை பாத்தீங்களா?
ஏத்தர் நிறுவனம் தனது 450 சிரீஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்டேட் செய்து புதிய அம்சங்களுடன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிமுகம் இன்று பெங்களூருவில் நடந்தது., இந்த அப்டேட்டில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் செய்யப்பட்டுள்ளன? இதனால் வாகனம் என்ன விதமான செயல்படுகிறது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஏத்தர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மார்கெட்டில் மிகப்பெரிய மவுசு இருக்கிறது. மக்கள் மத்தியில் இந்த ஸ்கூட்டருக்கு நல்ல மதிப்பு இருக்கும் நிலையில் ஒவ்வொரு மாதமும் இந்த ஸ்கூட்டரின் விற்பனை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ஆக்டிவா இவி ஸ்கூட்டர் விரைவில் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னதாகவே ஏத்தர் தனது ஸ்கூட்டரை அப்டேட் செய்துள்ளது.

ஏத்தர் நிறுவனம் தனது அப்டேட் செய்யப்பட்ட 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல முக்கிய அம்சங்களை கொண்டு வந்துள்ளது. முக்கியமாக 2 கலர் ஆப்ஷன்களை கொண்டு வந்துள்ளது. இது மட்டுமல்லாமல் ஏத்தர் 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிதாக மேஜிக் ட்விஸ்ட் என்ற அம்சம் புதிதாக சேர்க்கப்பபட்டுள்ளது. இது ஏற்கனவே ஏத்தர் அபெஸ் ஸ்கூட்டரில் இருந்த அம்சம் தான்.
மேலும் புதிதாக இந்த ஸ்கூட்டரில் 3 விதமான டிராக்ஷன் கண்ட்ரோல் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி சாலை, மழை, மற்றும் ரேலி ஆகிய அம்சம் இருக்கிறது. இதனால் வாகனத்தில் செல்லும் போது பாதுகாப்பான ரைடிங்கை பெற முடி முடியும். இதனால் ரைடர்கள் பலர் இந்த ஸ்கூட்டரை விரும்பி வாங்க வாய்ப்புள்ளது.

இந்த ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளயிடப்பட்டது. அதில் ஏத்தர் 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் 160 சிசி பைக், மற்றும் 125 சிசி ஸ்கூட்டர் ஆகியவைற்றை வைத்து 4 விதமான ரேஸ்கள் நடத்தப்பட்டது. அதில் அதிக டிராபிக் நிறைந்த சாலைகளில் எந்த வாகனம் சிறப்பாக செயல்படுகிறது. கரடு முரடான சாலைகளில் எந்த வாகனம் சிறப்பாக செயல்படுகிறது. எந்த வாகனம் வேகமாக செல்கிறது. அதிக டார்க்கை எந்த வாகனம் பெறுகிறது என்பதை வைத்து போட்டி நடத்தப்பட்டது.
இதில் மொத்தம் உள்ள 4 போட்டிகளில் 3 போட்டிகளில் ஏத்தர் 450 ஸ்கூட்டர் தான் சிறப்பாக செயல்பட்டது. இரண்டாவது இடத்தை தான் 160 சிசி இன்ஜின் பொருத்தப்பட்ட பைக் செய்தது. இதை வைத்து பார்க்கும் போது ஏத்தர் 450 ஸ்கூட்டர் சிறப்பாக செயல்படுவது நமக்கு நன்றாக தெரியும்.

ஏத்தர் 450 ஸ்கூட்டரின் விலை குறித்த விபரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி 450எஸ் ஸ்கூட்டர் புரே பேக் இல்லால் ரூ1.29 லட்சம் என்ற விலையிலும், 450எக்ஸ் 2.9 கிலோ வாட் ஹவர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ1.46 லட்சம் என்ற விலையிலும் 450 எக்ஸ் 3.7 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் ரூ1.56 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. இது எல்லாம் புரோ பேக் இல்லாத வேரியன்ட்களின் வடிலை.
அடுத்ததாக புரோ பேக் உடன் வேரியன்ட்களான 450 எஸ் ஸ்கூட்டரை பொருத்தவரை ரூ1.43 லட்சம் என்ற விலையிலும், 450 எக்ஸ் 2.9 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்கை பொருத்தவரை ரூ1.63 லட்சம் என்ற விலையிலும், 450 எக்ஸ் 37 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் வேரியன்டை பொருத்தவரை ரூ1.76 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடைசியாக ஏத்தர் அபெஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொருத்தவரை ரூ1.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விலைகள் எல்லாம் எக்ஸ் ஷோரூம் விலைகள் தான். ஆன்ரோடு விலை ஒவ்வொரு ஊருக்கும் மாறுபடும். ஸ்கூட்டரில் மற்றபடி வேறு எந்த வித வித்தியாசமும் இல்லை பேட்டரி சார்ஜிங் நேரம் எல்லாம் அப்படியே தான் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏத்தர் நிறுவனம் இன்று ஏத்தர் கம்யூனிட்டி தினம் என கொண்டாடுகிறது. இதை முன்னிட்டு இப்படியாக தனது வாகனத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. தற்போது ஆக்டிவா இவி வெளியாகும் நிலையில் ஏத்தர் தனது வாகனத்தை அப்டேட் செய்துள்ளது. கவனசிதறலை கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









