ஏத்தர் கிட்ட யாருமே இதை எதிர்பார்க்கல! இந்த வண்டி எப்படி இருக்குது தெரியுமா?
ஏத்தர் கம்யூனிட்டி தினத்தை முன்னிட்டு இன்று தனது 450 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு புதிய அம்சங்களை உட்புகுத்தி உள்ளது. இதனால் இந்த ஸ்கூட்டர் இதற்கு முன்பு விற்பனையானதைவிட இப்பொழுது புதிய அம்சங்களுடன் புதிய அனுபவத்தை தரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மாறி உள்ளது. இந்த ஸ்கூட்டர் இன்று அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.
இந்நிலையில் இந்த ஸ்கூட்டரை ஓட்டி பார்க்க நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு அழைப்பு வந்தது. அதன் பெயரில் எங்கள் குழுவினர் பெங்களூருவில் இந்த ஸ்கூட்டரை ஓட்டி பார்த்தார்கள். அங்கு அவர்கள் ஓட்டி பார்க்கும்போது அவர்களுக்கு கிடைத்த அனுபவத்தை வீடியோவாக எடுத்து பதிவு செய்துள்ளார்கள். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
ஏத்தர் நிறுவனம் தனது 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்டேட் செய்துள்ளது மூலம் பல்வேறு வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது இதில் முக்கிய அப்டேட்டாக மேஜிக் ட்விஸ்ட் என்ற அம்சத்தை கொண்டு வந்துள்ளது. இது ஸ்கூட்டரில் மட்டுமே இருந்த அம்சமாக இருந்தது. தற்போது இது 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எல்லாம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுபோக முக்கியமாக இதில் மூன்று டிராக்ஷன் கண்ட்ரோல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி சாலை, மழை மற்றும் ரேலி ஆகிய மோடுகளை பயன்படுத்தி டிராக்ஷன் கண்ட்ரோல்களை வாடிக்கையாளர்கள் அனுபவிக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோக இரண்டு புதிய கலர் ஆப்ஷன்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அப்டேட் செய்யப்பட்ட ஸ்கூட்டர் எப்படி இருக்கிறது என நீங்கள் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








