ராயல் என்பீல்டு வயித்துல புளியை கரைக்கும் புது பைக்! ஒரு போட்டோ விட்டதுக்கே இன்டர்நெட் ஸ்தம்பிச்சு போயிருச்சு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று பஜாஜ் டோமினார் (Bajaj Dominar). ராயல் என்பீல்டு பைக்குகளை (Royal Enfield Bikes) கிண்டல் அடிக்கும் வகையிலான விளம்பரங்கள் மூலம் பஜாஜ் டோமினார் பைக், வாடிக்கையாளர்கள் மத்தியில் புகழ் பெற்றது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

தற்போதைய நிலையில் மொத்தம் 2 வெர்ஷன்களில் பஜாஜ் டோமினார் பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை டோமினார் 250 (Dominar 250) மற்றும் டோமினார் 400 (Dominar 400) ஆகியவை ஆகும். இந்த 2 வெர்ஷன்களின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல்கள் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.

2025 Bajaj Dominar Teaser Image

@bajajdominar via Instagram

அதற்கு முன்னதாக 2025 பஜாஜ் டோமினார் பைக்கின் டீசர் புகைப்படத்தை (Teaser Image) பஜாஜ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் பஜாஜ் டோமினாருக்கு என பிரத்யேகமாக நிர்வகிக்கப்பட்டு வரும் அதிகாரப்பூர்வமான பக்கத்தில், இந்த டீசர் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த டீசர் புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருவதுடன் மட்டுமல்லாது, 2025 பஜாஜ் டோமினார் பைக் மீதான எதிர்பார்ப்புகளையும் அதிகரிக்க செய்துள்ளது. 2025 பஜாஜ் டோமினார் பைக்கின் இன்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது என நாங்கள் கருதுகிறோம். அதாவது தற்போது விற்பனையில் உள்ள மாடல்களில் வழங்கப்பட்டு வரும் அதே இன்ஜின் ஆப்ஷன்தான் புதிய மாடல்களிலும் வழங்கப்படவுள்ளது.

Royal Enfield Classic 350

இதன்படி 2025 பஜாஜ் டோமினார் 250 பைக்கில், 248.77 சிசி லிக்யூட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும். இந்த இன்ஜின் தற்போதைய நிலையில் அதிகபட்சமாக 6,500 ஆர்பிஎம்மில் 23.5 என்எம் டார்க் திறனையும், 8,500 ஆர்பிஎம்மில் 27 பிஎஸ் பவரையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

மறுபக்கம் 2025 பஜாஜ் டோமினார் 400 பைக்கில் 373.3 சிசி இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும். இந்த இன்ஜின் தற்போதைய நிலையில் அதிகபட்சமாக 6,500 ஆர்பிஎம்மில் 35 என்எம் டார்க் திறனையும், 8,800 ஆர்பிஎம்மில் 40 பிஎஸ் பவரையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த 2 பைக்குகளின் 2025 மாடல்களிலும், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் புதிய அப்டேட்களின் ஒரு பகுதியாக 2 பைக்குகளின் 2025 மாடல்களிலும், புதிய எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் புதிய ஸ்விட்ச் கியர் ஆகிய அம்சங்கள் எல்லாம் வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தற்போதைய நிலையில் பஜாஜ் டோமினார் 250 பைக்கின் விலை 1,91,654 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. மறுபக்கம் பஜாஜ் டோமினார் 400 பைக்கின் விலை 2,38,682 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ஆனால் புதிய அப்டேட்கள் காரணமாக 2025 பஜாஜ் டோமினார் 250 மற்றும் 2025 பஜாஜ் டோமினார் 400 ஆகிய 2 பைக்குகளின் விலையும் சற்று உயர்த்தப்படலாம் என நாங்கள் கருதுகிறோம். இதில், 2025 பஜாஜ் டோமினார் 250 பைக்கின் வருகையின் மூலம், சுஸுகி ஜிக்ஸர் 250 (Suzuki Gixxer 250) போன்ற பைக்குகளுக்கு நெருக்கடி ஏற்படலாம்.

மறுபக்கம் 2025 பஜாஜ் டோமினார் 400 பைக்கின் வருகையின் மூலம், கேடிஎம் ட்யூக் 390 (KTM Duke 390) மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 (TVS Apache RR 310) ஆகிய பைக்குகளுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடி ஏற்படலாம். அத்துடன் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) மற்றும் மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) போன்ற பைக்குகளுக்கும், 2025 பஜாஜ் டோமினார் 400 மாற்று ஆப்ஷனாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, July 4, 2025, 18:10 [IST]
English summary
2025 bajaj dominar 250 400 launch soon teaser image full details here
மேலும்... #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+