சொன்ன மாதிரியே களத்துல எறக்கீட்டாங்க! மார்க்கெட்டை அதிர விட போகும் புதிய பஜாஜ் பைக்குகள்! விலை இவ்ளோதானா!

இந்திய வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 2025 பஜாஜ் டோமினார் 250 (2025 Bajaj Dominar 250) மற்றும் 2025 பஜாஜ் டோமினார் 400 (2025 Bajaj Dominar 400) ஆகிய பைக்குகள், தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2025 பஜாஜ் டோமினார் 250 பைக்கில், தற்போது 4 ஏபிஎஸ் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. மறுபக்கம் 2025 பஜாஜ் டோமினார் 400 பைக்கில், தற்போது 4 ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த 2 பைக்குகளிலும் பொதுவாக ஏராளமான புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

Bajaj Dominar 250

இதில், ரீ-டிசைன் செய்யப்பட்ட புதிய ஹேண்டில்பார் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தொலை தூர பயணங்களின்போது, சோர்வு ஏற்படாத வகையில், இந்த ஹேண்டில்பார் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இது சாலை விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கும். அதேபோல் புதிய ஸ்விட்ச்கியர் உள்ளிட்ட அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

செயல்திறனை பொறுத்தவரையில், 2025 பஜாஜ் டோமினார் 250 பைக்கில், அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 27 பிஎஸ் பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 23.5 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய 248.77 சிசி இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Bajaj Dominar 400

மறுபக்கம் 2025 பஜாஜ் டோமினார் 400 பைக்கில், அதிகபட்சமாக 8,800 ஆர்பிஎம்மில் 40 பிஎஸ் பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 35 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையிலான இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடனும் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ்தான் இணைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2025 பஜாஜ் டோமினார் 250 மற்றும் 2025 பஜாஜ் டோமினார் 400 என 2 பைக்குகளிலும், ஸ்லிப்பர் மற்றும் அஸிஸ்ட் க்ளட்ச் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் 2025 பஜாஜ் டோமினார் 250 பைக்கின் ஆரம்ப விலை 1,91,654 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மறுபக்கம் 2025 பஜாஜ் டோமினார் 400 பைக்கின் ஆரம்ப விலை 2,38,682 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். தினசரி பயன்பாட்டுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும், அத்துடன் தொலை தூர பயணங்களுக்கும் ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்க கூடிய வாடிக்கையாளர்கள், பஜாஜ் டோமினார் 250 மற்றும் 400 பைக்குகளின், 2025 வெர்ஷன்களை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 2025 பஜாஜ் டோமினார் 250 மற்றும் 2025 பஜாஜ் டோமினார் 400 ஆகிய பைக்குகள் கூடிய விரைவில் விற்பனைக்கு வரவுள்ளன என்ற தகவலை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஏற்கனவே வாசகர்களுக்கு கூறியிருந்தது. இதன்படி இந்த 2 புதிய பைக்குகளும் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு அப்டேட்கள் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இந்திய சந்தையில் பஜாஜ் டோமினார் 250 மற்றும் பஜாஜ் டோமினார் 400 ஆகிய பைக்குகளின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை உயர்த்த, இந்த 2025 வெர்ஷன்கள் உதவி செய்யலாம் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 5, 2025, 17:37 [IST]
English summary
2025 bajaj dominar 250 400 launched in india price features engine options
மேலும்... #bajaj auto #india #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+