பஜாஜ் ஷோரூமுக்கு போனால் இந்த புது பைக்கை பார்க்காம வராதீங்க! பயந்த அளவுக்கு விலை அதிகம் கிடையாது!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று. பல்சர் (Pulsar) பைக்குகள் தான் பஜாஜ் ஆட்டோவின் அடையாளமாக உள்ளது என்றாலும், டோமினார் (Dominar) உள்ளிட்ட பைக்குகளுக்கான மார்க்கெட்டும் இந்தியாவில் தொடர்ந்து பெரியதாகிக் கொண்டே வருகிறது.

பஜாஜ் டோமினார் 400 பைக் நீண்ட வருடங்களாக மார்க்கெட்டில் விற்பனையில் இருக்கும் நிலையில், புதியதாக டோமினார் 250 பைக்கை சில வருடங்களுக்கு முன் பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்தது. இந்த நிலையில், டோமினார் 400 மற்றும் டோமினார் 250 என இரு டோமினார் பைக்குகளையும் அப்டேட் செய்து அறிமுகம் செய்ய பஜாஜ் நிறுவனம் தயாராகி வருகிறது.

2025 bajaj dominar 250

இன்னும் சொல்லப்போனால், மேம்படுத்தப்பட்ட டோமினார் பைக்குகள் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வர துவங்கிவிட்டன. அவ்வாறு பஜாஜ் ஷோரூம் ஒன்றில் காட்சித்தந்த புதிய டோமினார் 400 பைக்கை பற்றி சமீபத்தில் நமது டிரைவ்ஸ்பார்க் (Drivespark) செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். இந்த நிலையில், புதிய டோமினார் 250 பைக் ஒன்றும் பஜாஜ் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் காட்சித் தந்துள்ளது.

அதாவது, புதிய டோமினார் 250 பைக்குகள் ஷோரூம்களை வந்தடைய துவங்கி உள்ளன. இதுதொடர்பாக இணையத்தில் வெளியாகி உள்ள படங்களில், புதிய 2025 டோமினார் 250 பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களை காண முடிகிறது. இந்த அப்டேட்களில் முக்கியமாக நமது கவனத்தை ஈர்ப்பது, ஹேண்டில்பாருக்கு மத்தியில் வழங்கப்பட்டுள்ள புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் (Instrument Console) திரை ஆகும்.

2025 bajaj dominar 250

பஜாஜ் என்.எஸ்200 (NS200) பைக்கிலும் வழங்கப்பட்டு வரும் இந்த திரையின் மூலமாக மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை கண்ட்ரோல் செய்வதுடன், பயணத்திற்கான வழிக்காட்டியையும் பெறலாம். புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் திரை உள்பட 2025 டோமினார் 250 பைக்கில் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (Traction Control System) மற்றும் ஏபிஎஸ் மோட்கள் (ABS Modes) போன்ற சிறப்பம்சங்களும் புதியதாக வழங்கப்பட்டுள்ளன.

இதில் டிராக்‌ஷன் கண்ட்ரோல் ஆனது வழுக்கக்கூடிய சாலைகளில் பைக்கின் சக்கரங்கள் சறுக்கிவிட படுவதை தடுக்கக்கூடியது ஆகும். இது முதல்முறையாக டோமினார் 250 போன்ற பவர்ஃபுல்லான பைக்கை ஓட்டுபவர்களுக்கு பாதுகாப்பு சார்ந்த அம்சமாக இருக்கும். ஏபிஎஸ் மோட்களை பொறுத்தவரையில், 2025 டோமினார் 250 பைக்கில் சாலை, மழை மற்றும் ஆஃப்-ரோடு என 3 விதமான ஏபிஎஸ் மோட்கள் புதியதாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த 3 மோட்களிலும் ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-பிரேக்கிங் சிஸ்டத்தின் செயல்பாடு வேறுப்படும். மற்ற இரண்டு மோட்களில் ஏபிஎஸ்-ஐ தேவையென்றால் முழுவதுமாக அணைத்து விடலாம், ஆனால் ஆஃப்-ரோடு மோடில் முழுவதுமாக ஏபிஎஸ்-ஐ ஆஃப் செய்ய முடியாது. இந்த அப்டேட்களை தவிர்த்து, டோமினார் 250 பைக்கின் மற்ற மெக்கானிக்கல் பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை.

டோமினார் 250 பைக்கில் 248.77சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பொருத்துகிறது. சஸ்பென்ஷனுக்கு இந்த 250சிசி பைக்கில் முன்பக்கத்தில் தலைக்கீழான ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோஷாக் அப்சார்களும் வழங்கப்படுகின்றன. 17 இன்ச்சில் அலாய் சக்கரங்களை கொண்டிருக்கும் புதிய டோமினார் 250 பைக்கில் வழக்கம்போல் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஷோரூம் வாயிலாக நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, புதிய 2025 பஜாஜ் டோமினார் 250 பைக்கின் புனே எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,93,654 ஆகும். இது முந்தைய 2024 டோமினார் 250 பைக்கை காட்டிலும் வெறும் ரூ.7,000 அளவில் மட்டுமே அதிகமாகும். இந்த 7 ஆயிரம் ரூபாயை காட்டிலும் அதிகப்படியான அப்டேட்களை டோமினார் 250 பைக்கில் பஜாஜ் நிறுவனம் கொண்டுவந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

Source: BikeDekho

More from DriveSpark

Article Published On: Wednesday, April 30, 2025, 5:00 [IST]
English summary
2025 bajaj dominar 250 spotted at dealership showroom in pune
மேலும்... #bajaj auto #bike showroom #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+