ஷோரூம்களில் கம்பீரமாக நிற்குது... பஜாஜ் சொல்லி வைத்து அடிக்க ரெடி - 2025 டோமினார் 400!!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக மேம்படுத்தப்பட்ட 2025 டோமினார் 400 (Dominar 400) மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கிடையில், புதிய டோமினார் 400 பைக்குகள் பஜாஜின் அதிகாரப்பூர்வ டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு (Dealership Showrooms) வர துவங்கியுள்ளன.

இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனமாக விளங்கும் பஜாஜ் ஆட்டோவின் அடையாளமே அதன் பல்சர் (Pulsar) பைக்குகள் என சொன்னால் அது மிகையில்லை. ஏனெனில், நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் பஜாஜ் பல்சர் பைக்குகளுக்கு இப்போதுவரையிலும் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. பல்சர் பைக்குகளை தவிர்த்து வேறு சில பைக்குகளும் பஜாஜ் ஆட்டோவில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன.

2025 bajaj dominar 400

இன்னும் சொல்லப்போனால், பல்சர் பைக்குகளை போன்று இன்னும் சில தனித்துவமான பைக்குகள் வரிசையை உருவாக்கவும் பஜாஜ் நிறுவனம் முயற்சித்து வருகிறது. அவற்றுள் ஒன்று, பஜாஜ் டோமினார் ஆகும். பல்சர் பைக்குகளை போன்று 250சிசி மற்றும் 400சிசி என்ஜின்கள் உடன் டோமினார் பைக்குகள் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. டோமினார் 250 சில வருடங்களுக்கு முன்னர் தான் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால், டோமினார் 400 பைக் ஆனது நீண்ட வருடங்களாக விற்பனையில் உள்ளது. இத்தகைய டோமினார் 400 பைக்கை தான் விரைவில் அப்டேட் செய்ய பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாராகி வருகிறது. சொல்லப்போனால், அப்டேட் செய்யப்பட்ட டோமினார் 400 பைக்குகள் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு கூட வர துவங்கிவிட்டன. அவ்வாறு ஷோரூமுக்கு கொண்டுவரப்பட்ட 2025 டோமினார் 400 பைக்கின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

2025 bajaj dominar 400

பஜாஜ் டோமினார் 400 பைக் நீண்ட வருடங்களாக விற்பனையில் இருப்பினும், இந்த பைக்கில் இப்போதுதான் முதல்முறையாக அப்கிரேட்கள் கொண்டுவரப்படுகின்றன. புதிய டோமினார் 400 பைக்கின் தோற்றத்தில் சிறு சிறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன மற்றும் சில மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்களும் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுள் முக்கியமானதாக, முழுவதும் டிஜிட்டல் தரத்திலான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் (Instrument Cluster) திரை புதிய டோமினார் 400 பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

இது பல்சர் என்.எஸ்400இசட் (NS400Z) பைக்கில் வழங்கப்படும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை ஆகும். முன்பு இரட்டை-திரை செட்-அப்பில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை வழங்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது ப்ளூடூத்தை ஏற்கக்கூடிய சிங்கிள்-திரையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், புதிய டோமினார் 400 பைக் உடன் ரைடர் தனது மொபைல் போனை இணைத்துக் கொள்ள முடியும்.

மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள் & குறுஞ்செய்திகளை கண்ட்ரோல் செய்வதுடன், பயணத்திற்கான வழிக்காட்டுதலையும் இந்த திரையின் மூலமாக பெறலாம். மேலும், பயணம் குறித்த விபரங்களையும் ரியல்-டைமில் பெற முடியும். ஹேண்டில்பாரின் இடதுப்பக்கத்தில் கொடுக்கப்படும் ஸ்விட்ச்கியர் (Switchgear) ஆனது டி-பேட் கண்ட்ரோலர் (D-pad Controller) உடன் புதிய டிசைனில் உள்ளது.

மேலும், பெட்ரோல் டேங்கின் மீது மொபைல் போனை பொருத்தும் வசதி மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளிட்டவை தொலைத்தூர பயணங்களுக்கான பைக்காக புதிய டோமினார் 400 பைக்கை காட்டுகின்றன. மற்றப்படி, பைக்கின் என்ஜின் சிஸ்டத்தில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. இந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அமலுக்கு வந்த பிஎஸ்6 2ஆம் கட்ட விதிமுறைகளின் ஒபிடி-2பி மாசு உமிழ்வு கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப பைக்கின் என்ஜினில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை. ஏனெனில், புதிய ஒபிடி-2பி அப்டேட் ஆனது முக்கியமாக என்ஜின் சிஸ்டத்தில் உள்ள ஃப்யுல் மேப்பிங் (Fuel Mapping) மற்றும் கேடலிடிக் கன்வெர்டர்களில் (Catalytic Converters) சில திருத்தங்களை செய்துள்ளது. டோமினார் 400 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.2.3 லட்சத்தில் இருந்து ரூ.2.35 லட்சம் வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2025 பஜாஜ் டோமினார் 400 பைக்கின் தோற்றம் முன்பை விட பருத்த வடிவத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ரைடிங் மோட்கள், ரைடு-பை-வயர் த்ரோட்டில் உள்ளிட்ட சில அம்சங்களை பல்சர் என்.எஸ்400இசட் பைக்கில் இருந்து புதிய டோமினார் 400 பைக் பெற்றுவரும் என எதிர்பார்த்தோம். ஆனால், அதுகுறித்த எந்த அறிவிப்பையும் இதுவரையில் பஜாஜ் வெளியிடவில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, April 28, 2025, 17:51 [IST]
English summary
2025 bajaj dominar 400 starts to arrived dealership showrooms in india
மேலும்... #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+