மைலேஜ் கிங்கை வேற லெவலுக்கு அப்டேட் பண்ணிட்டாங்க.. விற்பனைக்கு வரும் முன்னரே ஷோரூமுக்கு வந்த பிளாட்டினா..

ஏழை மற்றும் எளிய மக்களின் பிரியமான பைக் மாடலாக பஜாஜ் பிளாட்டினா 110 (Bajaj Platina 110) உள்ளது. இது சீக்கிரமே சில முக்கியமான அப்டேட்டுகளுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதன் அறிமுகத்திற்கு இன்னும் சில தினங்களே உள்ளன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே விற்பனைக்கு வரும் முன்னரே இந்த பைக் ஷோரூம்களுக்கு வர தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகையால், ஒரு சில நாட்கள் அல்லது வாரங்களிலேயே மிகப் பெரிய அப்டேட்டைப் பெற்றிருக்கும் பிளாட்டினா 110 விற்பனைக்கு வந்துவிடும் என்கிற நம்பிக்கை சந்தைக்கு உருவாகி உள்ளது.

மிகப் பெரிய அப்டேட்டாக இந்த பைக்கில் வண்ண தேர்வை சேர்த்திருக்கின்றனர். மிக முக்கியமாக பாடி பேனலில் வழங்கப்பட்டு இருக்கும் முக்கிய வண்ணத்தை வீலிலும் அவர்கள் சேர்த்திருக்கின்றனர். இது வீலுக்கும், பைக்கிற்கு அழகு சேர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றது. ஓர் மலிவு விலை பைக்கில் இத்தகைய வேலை பார்த்திருப்பது அந்த பைக்கிற்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றது.

Bajaj platina 110 updates for 2025

2024 மாடல் பஜாஜ் பிளாட்டினா 110 இல் மூன்று விதமான கலர் ஆப்ஷன்களே வழங்கப்பட்டன. இபோனி பிளாக் ப்ளூ (Ebony Black Blue), இபோனி பிளாக் ரெட் (Ebony Black Red) மற்றும் காக்டெயில் ஒயின் ரெட் - ஆரஞ்சு (Cocktail Wine Red - Orange) ஆகியவையே அவை ஆகும்.

ஆனால், இப்போது ஷோரூமுக்கு வந்திருக்கும் பஜாஜ் பிளாட்டினா 110 பைக் புதிய கருப்பு-பச்சை நிறத்தைக் காண முடிகின்றது. இதே நிறமே அலாய் வீலிலும் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இதை வைத்தே புதிய கலரை 2025 பஜாஜ் பிளாட்டினா 110 பைக்கில் சேர்த்திருப்பது உறுதியாகி உள்ளது.

இதுமட்டுமல்ல செல்போனை சார்ஜ் செய்துக் கொள்ளும் விதமாக யுஎஸ்பி போர்ட், ஒவ்வொரு முறையும் பைக்கை வரவேற்கும் வசதி மற்றும் புதிய இருக்கை உள்ளிட்ட அம்சங்களையும் வழங்கி இருக்கின்றனர் என்பதும் தெரிய வந்திருக்கின்றது. இதுமட்டுமல்ல, இந்த பைக்கின் ஸ்விங்கார்மிலும் சில மாற்றத்தைச் செய்திருக்கின்றனர்.

இந்த பைக்கில் மாற்றம் செய்யப்படாத அம்சங்களும் உள்ளன. ஹாலோஜன் ஹெட்லைட், எல்இடி டிஆர்எல் உள்ளிட்டவற்றில் மாற்றத்தை இந்த பைக்கில் பார்க்க முடியவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. இதேபோல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரிலும் எந்தவொரு பெரிய மாற்றத்தையும் இந்த பைக்கில் எதிர்பார்க்க முடியாது என்பது கவனிக்கத்தகுந்தது.

Bajaj platina 110 side view

அதேநேரத்தில், எஞ்சினிலும் ஓர் மாற்றத்தை இந்த பைக்கில் பஜாஜ் செய்திருக்கின்றது. பிஎஸ்6 கட்டம் 2 இல் கொண்டு வரப்பட்ட மிக முக்கியமான மாற்றமான ஓபிடி-2பி விதிகளுக்கு மாற்றத்தையே இந்த பைக்கின் எஞ்சினில் அவர்கள் செய்திருக்கின்றனர். இந்த மாற்றத்தால் எஞ்சினின் திறனில் மிகப் பெரிய மாற்றம் இருக்காது என நம்பப்படுகின்றது.

ஆற்றலை பொருத்த வரை 8.5 பிஎச்பி மற்றும் 9.81 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த எஞ்சினுடன் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய அம்சங்களுடனேயே புதிய பஜாஜ் பிளாட்டினா 110 இந்திய மார்க்கெட்டில் சீக்கிரமே விற்பனைக்கு வர இருக்கின்றது.

Bajaj platina 110 seat

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் அடித்தட்டு மக்களின் பிரியமான பைக் மாடலாக பஜாஜ் பிளாட்டினா 110 இருக்கின்றது. இதை இந்தியர்கள் பலர் 'மைலேஜ் கிங்' என்றழைக்கின்றனர். அந்த அளவிற்கு மைலேஜை வாரி வழங்கக் கூடிய ஓர் பைக் மாடலே பஜாஜ் பிளாட்டினா ஆகும். இதன் 2025 மாடலுக்கும் நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, April 14, 2025, 10:11 [IST]
English summary
2025 bajaj platina 110 receives major updates ahead of showroom launch
மேலும்... #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X