கொஞ்சம் வயசாகிடுச்சி ஆனா இன்னமும் தங்கம் தான் சார்... எதை வாங்குறதுனு குழப்பமே வேணாம்!!

பஜாஜ் பல்சர் 220எஃப் (Bajaj Pulsar 220f) மற்றும் ஹீரோ கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 (Hero Karizma XMR 210) பைக்குகள் இரண்டும் இந்திய மோட்டார்சைக்கிள் சந்தையில் நீண்டகாலமாகவே ஒன்றுக்கு ஒன்று எதிரெதிர் போட்டியாளர்களாக திகழ்கின்றன. இடையில் இந்த இரண்டின் விற்பனையும் நிறுத்தப்பட்டாலும், தற்சமயம் இவை இரண்டும் விற்பனையில் உள்ளன. குறிப்பாக, பல்சர் 220எஃப் பைக் மிக சமீபத்தில் தான் எல்இடி இன்டிகேட்டர்கள் மற்றும் டூயல்-சேனல் ஏபிஎஸ் போன்ற புதிய அம்சங்கள் உடன் அப்கிரேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யபட்டது.

பல்சர் அதன் நீண்ட கால பாரம்பரியம் மற்றும் வலுவான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள நிலையில், கரீஸ்மா கடந்த 2023இல் மீண்டும் களமிறங்கி தனது இடத்தை நிலைநிறுத்த முயல்கிறது. 2025 பஜாஜ் பல்சர் 220எஃப் மற்றும் ஹீரோ கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 பைக்குகளின் வடிவமைப்பு, என்ஜின் திறன், சிறப்பம்சங்கள் மற்றும் விலையை இந்த தொகுப்பில் ஒப்பிட்டுப் பார்ப்போம். காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன, எந்த பைக் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறது என்பதை இந்தக் கட்டுரையில் ஆராயலாம்.

2025 bajaj pulsar 220f

வடிவமைப்பு: பஜாஜ் பல்சர் 220எஃப் முதன்முதலாக 2007ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இப்போது வரையில் பெரிய வடிவமைப்பு மாற்றங்களைப் பெறவில்லை. இதனால், ஹாலோஜன் ஹெட்லேம்ப்கள், செமி-ஃபைர் வடிவமைப்பு, அலாய் சக்கரங்கள் மற்றும் இரண்டாக பிரிக்கப்பட்ட இருக்கை அமைப்பை தனது பாரம்பரிய அடையாளமாக இப்போதும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதன் தனித்துவமான தோற்றம் பல்சர் 220எஃப் பைக்கிற்கே உண்டான அடையாளமாக உள்ளது.

மறுப்புறம், கரீஸ்மா பல தலைமுறை அப்கிரேட்களைக் கடந்து, தற்போது நவீன வடிவமைப்புடன் காட்சியளிக்கிறது. புதிய கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 பைக்கில் எல்இடி டிஆர்எல்-கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், லேட்டஸ்ட் டிசைனில் ஃபேரிங், கம்பீரமான வடிவத்தில் பெட்ரோல் டேங்க் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இருக்கைகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், புதிய கரீஸ்மா, 2000ஆம் காலக்கட்டத்தின் பழைய மாடலின் தனித்துவ வடிவமைப்பை இழந்துவிட்டதாக சிலர் கருதுகின்றனர்.

hero karizma xmr 210

என்ஜின்:

விவரம் 2025 பஜாஜ் பல்சர் 220எஃப் ஹீரோ கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 210
என்ஜின் 220சிசி, Fi, SOHC 210சிசி, Fi, DOHC
சிலிண்டர்கள் சிங்கிள் சிங்கிள்
பவர் 20.9 பிஎஸ் @ 8500 ஆர்பிஎம் 25.5 பிஎஸ் @ 9250 ஆர்பிஎம்
டார்க் 18.55 என்எம் @ 7000 ஆர்பிஎம் 20.4 என்எம் @ 7250 ஆர்பிஎம்
கியர்பாக்ஸ் 5-ஸ்பீடு 6-ஸ்பீடு
கூலிங் சிஸ்டம் ஆயில் கூல்டு லிக்யுடு-கூல்டு

கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 பைக்கின் புதிய 210சிசி என்ஜின் அதன் DOHC அமைப்பு மற்றும் லிக்யுடு-கூல்டு தொழில்நுட்பத்துடன் அதிக பவரை வெளிப்படுத்துகிறது. இது, பைக் விரைவாக உச்சப்பட்ச வேகத்தை அடைய உதவுகிறது. பல்சர் 220எஃப் என்ஜின் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பெரிய அளவில் மேம்படுத்தப்படவில்லை என்றாலும், 200சிசி பைக்குகள் பிரிவில் அதன் சக்தி அளவுகள் இன்றும் போதுமானதாகவே உள்ளன.

பரிமாண அளவுகள்:

விவரம் பஜாஜ் பல்சர் 220எஃப் ஹீரோ கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 210
நீளம் 2035 மிமீ 2068 மிமீ
அகலம் 750 மிமீ 760 மிமீ
உயரம் 1165 மிமீ 1110 மிமீ
வீல்பேஸ் 1350 மிமீ 1351 மிமீ
டிரைவர் சீட் உயரம் 795 மிமீ 810 மிமீ
கிரவுண்ட் கிளியரன்ஸ் 165 மிமீ 160 மிமீ
எரிபொருள் டேங்க் 15 லிட்டர் 11 லிட்டர்
கெர்ப் எடை 160 கிலோ 163.5 கிலோ

இந்த இரு மோட்டார்சைக்கிள்களின் பரிமாண அளவுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கின்றன. எனினும், பல்சர் 220எஃப் சற்று பெரிய 15 லிட்டர் பெட்ரோல் டேங்க்கை கொண்டுள்ளது. இது நீண்ட தூரப் பயணங்களுக்கு மிகவும் ஏற்றது. அதுவே, கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 பைக்கின் சற்று சிறிய 11 லிட்டர் டேங்க் நீண்ட நெடுஞ்சாலை பயணங்களுக்கு அந்த அளவிற்கு உகந்ததாக இருக்காது. கூடுதலாக, பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கின் டிரைவர் இருக்கையின் உயரம் தரையில் இருந்து குறைவாக இருப்பதால், உயரம் குறைவான ஓட்டுநர்களுக்கும் இது வசதியாக அமைகிறது.

2025 bajaj pulsar 220f

பாதுகாப்பு உபகரணங்கள்: ஹீரோ கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கில் வலிமையான ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃபிரேம், மேம்பட்ட பிரேக்கிங் திறனுக்கான பெரிய பெடல் டிஸ்க் பிரேக்குகள், கூடுதல் பாதுகாப்பிற்கான டூயல்-சேனல் ஏபிஎஸ், அகலமான டயர்கள் மற்றும் சிறந்த பயண அனுபவத்திற்கான மோனோஷாக் பின் சஸ்பென்ஷன் போன்ற பிரீமியம் அம்சங்கள் உள்ளன.

விவரம் பஜாஜ் பல்சர் 220எஃப் ஹீரோ கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 210
சேசிஸ் டபுள் க்ராடில் டவுன்டியூப் ஃபிரேம் ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃபிரேம்
முன் சஸ்பென்ஷன் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் 37 மிமீ, டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள்
பின் சஸ்பென்ஷன் 5-ஸ்டெப் அட்ஜஸ்ட்மென்ட் உடன் ட்வின் ஷாக் 6-ஸ்டெப் அட்ஜஸ்ட்மென்ட் உடன் மோனோ ஷாக்
பிரேக்கிங் 280/230 மிமீ டிஸ்க் 300/230 மிமீ பெடல் டிஸ்க்
சக்கரங்கள் 17-இன்ச் அலாய் 17-இன்ச் அலாய்
டயர்கள் 90/90-17, 120/80-17 ட்யூப்லெஸ் 100/90-17, 140/70-17 ட்யூப்லெஸ்
ஏபிஎஸ் (ABS) டூயல் சேனல் ஏபிஎஸ் டூயல் சேனல் ஏபிஎஸ்

பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கிலும் டூயல்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டாலும், ட்வின் பின் ஷாக் அப்சார்பர்கள், வழக்கமான டிஸ்க் பிரேக்குகள் மற்றும் சிறிய டயர்களுடன் சற்று பழைய டிரெண்டில் தான் இந்த பைக் உள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்த வகையில் பார்க்கும்போது, பாதுகாப்பு மற்றும் உபகரணங்கள் அடிப்படையில் கரீஸ்மா இன்றைய கால ஓட்டுநர்களுக்கு மேலும் உகந்ததாக உள்ளது.

தொழில்நுட்ப அம்சங்கள்:

விவரம் பஜாஜ் பல்சர் 220எஃப் ஹீரோ கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 210
ஹெட்லேம்ப் புரோஜெக்டர் ஹாலோஜன் ஆட்டோ இல்லுமினேட்டட் கிளாஸ்-டி எல்இடி புரோஜெக்டர், எல்இடி டிஆர்எல்-கள்
டெயில் லைட் அல்ட்ரா-ஸ்டைலிஷ் எல்இடி டெயில் லேம்ப் சிக்னேச்சர் H-வடிவ எல்இடி டெயில் லேம்ப்
இண்டிகேட்டர்கள் எல்இடி விங்கர்கள் எல்இடி விங்கர்கள், ஹசார்ட் ஸ்விட்ச்
இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் முழு டிஜிட்டல் எல்சிடி கன்சோல் TFT க்ளஸ்டர் (35+ அம்சங்கள் உடன்)
கனெக்டிவிட்டி புளூடூத், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், கால் மேனேஜ்மென்ட் ஸ்மார்ட்போன் இணைப்பு, எஸ்எம்எஸ் அலெர்ட், ஏபிஎஸ் மோடுகள்
சார்ஜிங் வசதி USB சார்ஜிங் போர்ட் USB சார்ஜிங் போர்ட்

தொழில்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரை, கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 தான் வெற்றியாளர் என்பதை அறிவித்துவிடலாம். ஏனெனில், எல்இடி ஹெட்லேம்ப்கள், டிஆர்எல்-கள் மற்றும் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் போன்ற பல நவீன தொழில்நுட்ப அம்சங்கள் பல்சர் 220எஃப் பைக்கில் இல்லை.

hero karizma xmr 210

விலை:

பைக் மாடல் விலை (எக்ஸ்-ஷோரூம்)
2025 பஜாஜ் பல்சர் 220எஃப் ரூ.1.28 லட்சம் *தோராயமான விலை
ஹீரோ கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 ரூ.1.84 லட்சம் *தோராயமான விலை

ஹீரோ கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 210, பல்சர் 220எஃப்-ஐ விட அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அதன் நவீன வடிவமைப்பு, மேம்பட்ட அம்சங்கள், வலுவான பாதுகாப்பு தொகுப்பு மற்றும் சிறந்த செயல்திறன் ஆகியவை இந்த அதிக விலையை நியாயப்படுத்துகின்றன. இருப்பினும், இந்த விலைப் பிரிவில் மற்ற சிறந்த 150சிசி-200சிசி மோட்டார்சைக்கிள்கள் கரீஸ்மாவின் கவனத்தை திசை திருப்பலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் பல்சர் 220எஃப் ஆனது பல நவீன அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், அதன் புகழ்பெற்ற பாரம்பரியம், நிரூபிக்கப்பட்ட வடிவமைப்பு, நம்பகமான என்ஜின் மற்றும் வாடிக்கையாளர்களின் நீண்ட கால நம்பிக்கை ஆகியவற்றால் இது ஒரு சிறந்த மதிப்புமிக்க பைக்காக தொடர்கிறது.

இருப்பினும், சந்தையில் தொடர்ந்து இளைஞர்கள் விரும்பக்கூடிய பைக்காக இருக்க, பல்சர் 220எஃப் பைக்கின் வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் என்ஜின் தொழில்நுட்பத்தில் பஜாஜ் புதுப்பிப்புகளை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. பல்சர் 220எஃப் மற்றும் ஹீரோ கரீஸ்மா இந்த இரண்மே கிளாசிக் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள்கள் என்றாலும், இந்த தொகுப்பை பார்த்த பிறகு இந்த இரண்டில் உங்களுக்கான சரியான பைக்கை தேர்வு செய்வீர்கள் என நம்புகிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, December 19, 2025, 23:59 [IST]
English summary
2025 bajaj pulsar 220f vs hero karizma xmr 210 check full bike comparison here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X