பைக்கை பார்த்து, விலை அதிகமா இருக்குமோனு பயப்படாதீங்க! பஜாஜ் உருவாக்கினாலே கம்மி விலை தான்!!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் அனைத்து விதமான பைக்குகளும் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், அவ்வாறு அப்டேட் செய்யப்படும் பஜாஜ் பைக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக டெலிவிரிக்காக ஷோரூம்களுக்கு வந்த வண்ணம் உள்ளன. இவ்வாறு அப்டேட் செய்யப்பட்ட 2025 டோமினார் 400 (Dominar 400) மற்றும் டோமினார் 250 பைக்குகள் ஷோரூம்களுக்கு ஏற்கனவே வர துவங்கிவிட்டதை முன்னதாக நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். டோமினார் பைக்குகளை மட்டும்தான் பஜாஜ் நிறுவனம் அப்டேட் செய்கிறது என பார்த்தால், பல்சர் (Pulsar) பைக்குகளையும் அப்டேட் செய்ய தயாராகி வருகிறது.

இதன்படி, 2025ஆம் ஆண்டிற்காக அப்டேட் செய்யப்பட்ட பல்சர் என்.எஸ்400இசட் (NS400Z) பைக்குகள் பஜாஜின் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதில் ஒரு ஷோரூமில் இருந்து எடுக்கப்பட்ட 2025 பஜாஜ் பல்சர் என்.எஸ்400இசட் பைக்கின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவின் மூலமாகவே, 2025 என்.எஸ்400இசட் பைக்குகள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டன என்பதை நம்மால் அறிய முடிகிறது.

2025 bajaj pulsar ns400z bikes

மேலும், இந்த வீடியோவின் மூலமாக பல்சர் என்.எஸ்400இசட் பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த அப்டேட்களுள் முக்கியமாக, புதிய என்.எஸ்400இசட் பைக்கின் பின் சக்கரத்தில் அப்போலோ (Apollo) நிறுவனத்தின் 150-பிரிவு ஆல்பா எச்1 ரேடியல் (Alpha H1 Radial) டயர் பொருத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, எம்.ஆர்.எஃப் (MRF) நிறுவனத்தின் 140-பிரிவு ரெவ்ஸ் (REVZ) டயர் என்.எஸ்400இசட் பைக்கின் பின் சக்கரத்தில் பொருத்தப்பட்டு வந்தது. 140-பிரிவு, 150-பிரிவு என்பது டயரின் அகலத்தை குறிக்கிறது. இந்த வகையில் பார்த்தால், இந்த விலையுயர்ந்த பல்சர் பைக்கின் பின் சக்கரத்திற்கு முன்பை விட அகலமான டயர் வழங்கப்பட்டுள்ளது.

2025 bajaj pulsar ns400z bikes

அப்போலோ நிறுவனத்தின் அகலமான டயர் வழங்கப்பட்டுள்ளதால், என்.எஸ்400இசட் பைக்கில் வளைவுகளில் திரும்பும்போதும், நேர்திசையில் அதிவேகமாக செல்லும்போதும் முன்பை விட அதிக தைரியமும், நம்பிக்கையும் கிடைக்கும். பின் டயரை அப்போலோ நிறுவனத்தில் இருந்து பெற்றுள்ளதால், 2025 என்.எஸ்400இசட் பைக்கிற்கான முன் டயரையும் அப்போலோ நிறுவனத்தில் இருந்து பஜாஜ் நிறுவனம் பெற்றுள்ளது.

ஆனால், முன் டயரின் அளவில் எந்த மாற்றமும் இல்லை. டயருக்கு அடுத்து, இந்த பைக்கின் பிரேக் சிஸ்டத்தில் பஜாஜ் நிறுவனம் மாற்றங்களை செய்துள்ளது. முன்பு ஆர்கானிக் பிரேக் பேட்கள் (Brake Pads) வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிய பைக்கில் வெப்பப்படுத்தப்பட்ட பேட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது முன்பை காட்டிலும், பைக்கை நிறுத்தும் திறனை மேம்படுத்தும் என கூறப்படுகிறது.

2025 பல்சர் என்.எஸ்400இசட் பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள மற்றொரு அப்டேட் என்னவென்றால், பைக்கின் என்ஜின் ஒபிடி-2பி (OBD-2B) மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது ஆகும். வாகனத்தில் இருந்து வெளியிடப்படும் காற்று மாசுவை கட்டுப்படுத்தக்கூடிய இந்த அப்டேட் ஆனது மத்திய அரசாங்கத்தின் வலியுறுத்தலினால் அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஒன்றன்பின் ஒன்றாக கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கிறது.

சமீபத்தில் பார்த்த 2025 பஜாஜ் டோமினார் பைக்குகளில் கூட இந்த அப்டேட் வழங்கப்பட்டுள்ளதை பார்த்திருந்தோம். இந்த அப்டேட்டினால் பைக்கின் என்ஜினின் பவரில் சில மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதாவது, என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவு அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். ஆனால், 2025 பல்சர் என்.எஸ்400இசட் பைக்கின் என்ஜினில் அவ்வாறான எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை தவிர்த்து, பல்சர் என்.எஸ்400இசட் பைக்கில் வழக்கமாக வழங்கப்படும் அனைத்தும் அம்சங்களும் புதிய மாடலிலும் வழங்கப்படும் என்பது உறுதி. இந்த அப்டேட்களினால் இந்த விலையுயர்ந்த & பவர்ஃபுல்லான பல்சர் பைக்கின் விலை ரூ.7,000இல் இருந்து ரூ.8,000 வரையில் அதிகரிக்கப்படலாம். தற்சமயம் இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.81 லட்சமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 6, 2025, 14:46 [IST]
English summary
2025 bajaj pulsar ns400z bikes starts to arrive dealership showrooms
மேலும்... #bajaj auto #bajaj pulsar #pulsar ns #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+