ரொம்ப கம்மியான விலையில் புதிய பல்சர் பைக்கை கொண்டுவந்த பஜாஜ்! 400சிசி என்ஜின் பைக்குக்கு இதுதான் விலையா?

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் பல்சர் (Pulsar) பைக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதாவது, பல்சர் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமின்றி, மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பல்சர் பைக்குகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதியதாக 'என்.எஸ்400இசட் யுஜி' (NS400Z UG) என்கிற புதிய பல்சர் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பல்சர் பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பஜாஜ் பல்சர் என்.எஸ்400இசட் ஆனது இருப்பதிலேயே விலைமிக்க பல்சர் பைக் ஆகும். சமீபத்தில் கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட என்.எஸ்400இசட் பைக்கை தற்போது என்.எஸ்400இசட் யுஜி என்கிற பெயரில் அப்டேட் செய்துள்ளனர். அதாவது, பைக்கின் தோற்றம் மெருக்கேற்றப்பட்டு இருப்பது மட்டுமின்றி, புதிய தொழிற்நுட்ப வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

2025 pulsar ns400z ug bike

இருப்பினும், பைக்கின் விலை முன்பை காட்டிலும் வெறும் ரூ.7,000 மட்டுமே அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதாவது, முன்பு என்.எஸ்400இசட் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.84 லட்சமாக இருந்த நிலையில், தற்போது புதிய என்.எஸ்400இசட் யுஜி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.91 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விலை அதிகரிக்கப்பட்டு இருப்பினும், இப்போதும் இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் 400சிசி பைக் பல்சர் என்.எஸ்400இசட் ஆகும்.

ரூ.7,000 விலை அதிகரிப்புக்கு ஏற்ப பைக்கில் சில மெக்கானிக்கல் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. அவற்றுள் முக்கியமானது, பைக்கின் என்ஜினில் கொண்டுவரப்பட்டு இருப்பது ஆகும். என்.எஸ்400இசட் யுஜி பைக்கிலும் வழக்கமான 373சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது என்றாலும், அதில் இருந்து கிடைக்கக்கூடிய இயக்க ஆற்றலின் அளவு தற்போது அதிகரித்து உள்ளது.

2025 pulsar ns400z ug bike

அதாவது, முன்பு இந்த என்ஜின் 40 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்திய நிலையில், தற்போது 43 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றலை வழங்கும் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்றப்படி, என்ஜின் அதிகப்பட்சமாக வழங்கும் 35 என்.எம் டார்க் திறனில் எந்த மாற்றமும் இல்லை. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

இவற்றுடன், ஸ்லிப்பர் க்ளட்ச்சும் ஆரம்பத்தில் இருந்தே வழங்கப்பட்டாலும், தற்போது புதியதாக 'பை-டைரக்‌ஷ்னல் குயிக் ஷிஃப்டர்' (bi-directional quick shifter) வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் க்ளட்ச்சை பயன்படுத்தாமல், எளிமையாக பைக்கின் கியர்களை மாற்றலாம். 0-இல் இருந்து மணிக்கு 100கிமீ வேகத்தை வெறும் 6.4 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த பைக்கின் டாப்-ஸ்பீடு மணிக்கு 157கிமீ ஆகும்.

2025 pulsar ns400z ug bike

முன்பு, பல்சர் என்.எஸ்400இசட் பைக்கின் டாப்-ஸ்பீடு மணிக்கு 150கிமீ ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. பைக்கின் என்ஜினில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட் உடன் சேர்த்து, பைக்கின் பிரேக்குகளிலும் பஜாஜ் மாற்றங்களை செய்துள்ளது. தற்போது என்.எஸ்400இசட் பைக்கில் சிறப்பாக இழுத்து பிடிக்கக்கூடிய பிரேக் சிஸ்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல், பைக்கின் பின்பக்க டயர் கூடுதல் அகலமாக்கப்பட்டு உள்ளது. மேலும், பல்சர் என்.எஸ்400இசட் பைக்கில் முன்பு எம்.ஆர்.எஃப் (MRF) நிறுவனத்தின் ரெவ்ஸ் (REVZ) டயர்கள் பொருத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அப்போலோ (Apollo) நிறுவனத்தின் ஆல்பா எச்1 (Alpha H1) டயர்கள் பொருத்தபட்டு உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேம்படுத்தப்பட்ட இந்த புதிய பஜாஜ் பல்சர் என்.எஸ்400இசட் பைக் டீலர்ஷிப் ஷோரூம்களை விரைவில் வந்தடைய துவங்கிவிடும். ஆதலால், இந்த விலைமிக்க பல்சர் பைக்குகளை இனி ஷோரூம்களில் நேரில் காணலாம். வெறும் ரூ.7 ஆயிரம் விலையுயர்த்தப்பட்டு பல்சர் என்.எஸ்400இசட் யுஜி பைக்கில் பல அசத்தலான அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 9, 2025, 11:48 [IST]
English summary
2025 bajaj pulsar ns400z ug launched in india check price features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X