இன்னோவா கார் விலையில் ஒரு பைக்கா? அப்படி என்னதாங்க இருக்குது இதுல?

டுகாட்டி நிறுவனம் இந்தியாவில் தனது பேனிகேல் வி2 மற்றம் வி2 எஸ் ஸ்போர்ட்ஸ் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த பைக்கின் விலைக்கு இந்தியாவில் ஒரு பெரியஎஸ்யூவி காரையே வாங்கிவிடலாம். இந்த அளவிற்கு காஸ்ட்லியான பைக்கில் அப்படி என்ன தான் இருக்கிறது? இந்தபைக்கின் விலை என்ன? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டுகாட்டி நிறுவனம் தனது புதிய மல்டிஸ்டார்டா வி2 என்ற ஃபிளாக்ஷிப் மாடல் பைக்கை சமீபத்தில் தான் அறிமுகப்படுத்தியது. இது மிடில் வெயிட் விட்வின் ரக பைக்காக வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தபைக்கை தொடர்ந்துதற்போது தனது 2025 பேனிகேல் வி2 மற்றும் வி2எஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

2025 Ducati Panigale V2

டுகாட்டி நிறுவனம் முதன் முதலாக ஒரு சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்கை அடிப்படையிலிருந்து வடிவமைத்தது என்றால் அது பேனிகேல் வி2 பைக் தான். இந்த பைக் சமீபத்தில் ஒரு தலைமுறை அப்டேட்டை பெற்றது. இந்த அப்டேட்டில் காஸ்மெட்டிக்ஸ் மற்றும் அம்சங்கள் எல்லாம் அப்டேட் செய்யப்பட்டள்ளது. முக்கியமாக இதில் புதிய 890 வி2 இன்ஜின் பொரத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் பேனிகேல் வி4 பைக்கிலும் இருந்தது. இது முன்பக்க லோடை குறைத்து, அதிக லேட்ரல் டைனமிக்ஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் ட்வின் எல்இடி ஹெட்லைட் செட்டப் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முன்பு இருந்த லைட்டை விட தற்போது ஷார்ப்பாக வழங்கப்பட்டுள்ளது. அடிப்படை வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் பழைய பைக்கில் எப்படி இருந்ததோ அப்படியே தான் தற்போதும் வழங்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் டேங்க் பகுதி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் புதிய எல்இடி டெயில் லைட் வழங்கப்பட்டுள்ளது. இதன் எக்ஸாஸ்ட் சிஸ்டம் பின்பக்க சீட்டிற்கு கீழே வழங்கப்பட்டுள்ளது.

2025 Ducati Panigale V2

மேலும் ரைடிங் செய்பவர்களுக்கு எர்கோனோமிக்ஸ் சிறப்பாகவடிவமைக்கப்பட்டுள்ளது. சீட் வடிவமைப்பு டேங்க் வடிவமைப்பு எல்லாம் அதற்கு ஏற்றர் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் கால் வைக்கும் பகுதி சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு பகுதியில் காற்று உள்ளே செல்ல சில வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. நீண்ட நேர பயணத்தில் ரைடரின் கால் கூலாக இருக்க இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் அதிக தொழிற்நுட்ப அம்சங்கள் உள்ளது. முக்கியமாக 5 இன்ச் டிஎஃப்டி ஸ்கிரீன் உள்ளது. இதில் 3 டிஸ்பிளே தீம்கள் உள்ளன. மேலும் ரைடர்கள் பயணத்தின் போதே இதில் உள்ள செட்டிங்களை அட்ஜெஸ்ட் செய்ய முடியும். முக்கியமாக 3 லெவல் கொண்ட கார்னர் ஏபிஎஸ், வீலி கண்ட்ரோல், 8 லெவல் கொண்ட டிராக்ஷனவ் கண்ட்ரோல், இன்ஜின் பிரேக் கண்ட்ரோல், 4 விதமான ரைடிங் மோடுகள், ரேஸ், ஸ்போர்ட், ரோடு, வெட் ஆகிய மோடுகள் உள்ளன. 3 ப்ரீ செட் பவர் ஆப்ஷன்களும் உள்ளன. ஹை, மீடியம்,மற்றும் லோ ஆகிய மோடுகள் உள்ளது. லோ மோடில் அதிகபட்சம் 95 பிஎச்பி பவர் மட்டுமே கிடைக்கும்.

2025 Ducati Panigale V2

இந்த பைக்கில் 890 சிசி லிக்யூட் கூல்டு 90 டிகிரி வி-டவின் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் டுகாட்டி க்விக் ஸ்விஃப்ட் ஆப்ஷன் உடன் கிடைக்கிறது. இந்தபைக் 120 பிஎச்பி பவரையும் 93.3 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது உள்ள மாடலைவிட 35 பிஎச்பி பவர் குறைவு தான்.

ஆனால் இந்நிறுவனம் அதற்கு தகுந்தார் போல பைக்கின் எடையை குறைத்திருப்பதாகவும் இன்ஜின் மோத்தமே 9.4 கிலோ எடையில் தான் இருப்பதாகவும், இது முந்தைய இன்ஜினை விட 5.8 கிலோ எடை குறைவாக இருப்பதாகவும், ஒட்டு மொத்த எடையில் 17 கிலோ எடை குறைந்திருப்பதாகவும் கூறுகிறது. இதனால் பவர் குறைந்தாலும் பிக்கப் அதிகமாகும் என அந்நிறுவனம் கூறுகிறது. இந்தபைக்கின் விலையை பொருத்தவரை வி2 மாடல் ரூ19.11 லட்சம் என்ற விலையிலும், வி2எஸ் மாடல் ரூ21.09 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரூ21 லட்சத்திற்கு ஒரு காஸ்ட்லியான எஸ்யூவி காரையே வாங்கிவிடலாம். இ்நதியாவில் விற்பவனையாகும் இன்னோவா கார் கூட கிட்டத்தட்ட இந்த விலையில் தான் விற்பனையாகிறது. இந்தவிலையில் ஒரு பைக் வருகிறது என்றால் நிச்சயம் பலரது கவனத்தை ஈர்க்கும். ஆனால் விற்பனை மிக குறைவாக தான் இருக்கும். இந்த பைக் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 29, 2025, 22:35 [IST]
English summary
2025 ducati panigale v2 india launch price specifications
மேலும்... #ducati #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X