82,016 ரூபாக்கு ஹீரோ பேஷன் பிளஸ் பைக்.. ஏழைக்கு ஏத்த எல்லுருண்டை.. ரெகுலர் யூசுக்கு அடிக்கிறவங்களுக்கான பைக்!!

இந்தியர்களின் பிரியமான பைக் மாடல்களில் ஒன்றாக ஹீரோ பேஷன் பிளஸ் (Hero Passion Plus) இருக்கின்றது. இதன் 2025 மாடலே இப்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதற்கு அறிமுகமாக ரூ. 82,016 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மேலும், இது முந்தைய வெர்ஷனைக் காட்டிலும் 2 ஆயிரம் ரூபாய் அதிகம் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த விலை ஏற்றத்திற்கு பைக்கில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் குறிப்பிட்ட அப்டேட்டே காரணம் ஆகும்.

ஓபிடி-2பி (OBD-2B) தரத்திற்கு ஏற்ப இந்த பைக்கின் எஞ்சினை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அப்டேட் செய்திருக்கின்றது. இதுமட்டுமல்ல புதிய நிற தேர்வுகள் சிலவற்றையும் இதில் சேர்த்திருக்கின்றது. 2024 ஹீரோ பேஷன் பிளஸ் இந்தியாவில் ரூ. 80,266 என்கிற விலையில் விற்பனைச் செய்யப்பட்டது.

Hero passion plus bike

ஐ3எஸ் செல்ஃப் ஸ்டார்ட் அலாய் வீலைக் கொண்ட ஒரே ஒரு தேர்வில் மட்டுமே அது விற்பனைக்குக் கிடைத்தது. இத்துடனேயே கருப்பு அடர் சாம்பல் (Black Heavy Grey), கருப்பு மற்றும் சாம்பல் நிற கோடு (Black Grey Stripe), ஸ்போர்ட் ரெட் (Sport Red) மற்றும் கருப்பு நெக்சஸ் ப்ளூ (Black Nexus Blue) ஆகிய நிற தேர்வுகளில் அது விற்பனைக்குக் கிடைத்தது.

ஆனால், இப்போது புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் பேஷன் பிளஸ் மாடலோ ப்ளூ டீல் (Bluish Teal) மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் பிளாக் (Sports Red Black) ஆகிய புதிய வண்ணங்களில் விற்பனைக்குக் கிடைக்கும். கருப்பு சாம்பல் கோடு மற்றும் ஸ்போர்ட் ரெட் கிடைக்காது என தெரிகின்றது.

Hero passion plus launched

இதற்கு பதிலாக புதிய நிற தேர்வுகள் சேர்க்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதுதவிர வேறு எந்த மாற்றத்தையும் இந்த பைக்கில் ஹீரோ நிறுவனம் செய்யவில்லை. ஆகையால், தோற்றத்தில் பேஷன் பிளஸ் அப்படியே இப்போதும் உள்ளது. இதுமட்டுமல்ல, இப்போதும் இந்த பைக் தினசரி பயன்பாட்டிற்கு உகந்த டூ-வீலராக உள்ளது.

ரெகுலர் யூசுக்கான டூ-வீலராக இது இருந்தாலும் இதை அழகாக காண்பிக்க ஹீரோ நிறுவனம் தவறவில்லை. குறிப்பாக, இந்த பைக்கை அழகானதாக காண்பிக்க 5 ஸ்போக்குகளைக் கொண்ட கருப்பு நிற, 18 அங்குல அலாய் வீல்களை வழங்கி இருக்கின்றது. இத்துடன் சிறந்த இயக்க அனுபவத்திற்காக பைக்கின் முன் பக்க வீலில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின் பக்கத்தில் ட்வின் ஷாக் சஸ்பென்ஷனை அது வழங்கி இருக்கின்றது.

Hero passion plus red color option

இந்த பைக்கின் ஒட்டுமொத்த எடையே 115 கிலோ மட்டுமே ஆகும். ஆகையால், இதை கையாள்வதில் எந்த சிக்கலும் இருக்காது. இத்துடன், ரைடை சுவாரஷ்யமானதாக மாற்ற இன்டெக்ரேட்டட் பிரேக்கிங் சிஸ்டம், மொபைல் சார்ஜிங் போர்ட், சிறிய பெட்டி உள்ளிட்டவற்றை இது தன்னுள் தாங்கி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தினசரி பயன்பாட்டிற்கு உகந்த விலை குறைவான பைக்குகளில் இவ்வளவு அம்சங்களை ஹீரோ நிறுவனம் வழங்கி இருப்பது பட்ஜெட் டூ-வீலர்கள் விரும்பிகளைக் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆகையால், முந்தைய வெர்ஷனைப் போலவே 2025 ஹீரோ பேஷன் பிளஸ்-க்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 10, 2025, 14:05 [IST]
English summary
2025 hero passion plus launched at rs 82 016 featuring new colours and obd 2b engine
மேலும்... #hero motocorp #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X