இந்தியாவே வாங்க காத்துக் கிடக்கும் ஹீரோ பைக்... ஃபேக்ட்ரியை விட்டு வெளியே வந்தப்ப எடுக்கப்பட்ட க்ளிக்ஸ்!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் அதன் ஸ்பிளெண்டர் (Splendor) பைக்குகளை அப்டேட் செய்து அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதிய ஸ்பிளெண்டர் பைக்குகள் அறிமுகத்துக்கு முன்னதாக சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்பூர் (Jaipur)-க்கு அருகே நடத்தப்பட்ட இந்த சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்ட புதிய 2025 ஸ்பிளெண்டர் பிளஸ் (Splendor Plus) பைக்கை பற்றி ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் பார்த்துவிட்ட நிலையில், தற்போது 2025 சூப்பர் ஸ்பிளெண்டர் (Super Splendor) பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

இந்தியா உள்பட உலகில் அதிகம் விற்பனையாகும் பைக்காக ஹீரோ ஸ்பிளெண்டர் உள்ளது. அதிகமாக இந்தியாவில் மட்டும்தான் இந்த பைக் விற்பனை செய்யப்படுகிறது என்றாலும், நம் நாட்டில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக சுமார் 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சம் வரையிலான ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

2025 hero super splendor spotted

இந்த அளவிற்கு இந்தியர்கள் பலர் விரும்பி வாங்கும் ஸ்பிளெண்டர் பைக்குகளுள் அவ்வப்போது புது, புது அப்டேட்களை கொண்டுவருவதை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வாடிக்கையாக கொண்டுள்ளது. ஏனெனில், அப்போதுதான் மார்க்கெட் போட்டியில் நிலைத்து நிற்க முடியும். அந்த வகையில், புதிய 2025ஆம் ஆண்டிற்காக விரைவில் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் அப்டேட் செய்யப்பட உள்ளன.

இதற்கான வேலையில் ஹீரோ நிறுவனம் ஈடுப்பட்டுவரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக 2025 ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்குகள் சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன. இந்த சோதனை ஓட்டத்தின்போது 2025 சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கில் இரண்டு பேர் பயணம் செய்வதை படங்களில் பார்க்க முடிகிறது.

2025 hero super splendor spotted

இந்த சோதனை ஓட்டத்தில் பைக்குகள் இரண்டும் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படவில்லை. சோதனை ஓட்டத்தில் 2025 ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் ஆனது கருப்பு மற்றும் சிவப்பு என இரு விதமான நிறங்களில் இருந்த நிலையில், 2025 சூப்பர் ஸ்பிளெண்டர் பைக் முற்றுலும் கருப்பு நிறத்தில் உள்ளது. இதனால், இந்த இரு ஸ்பிளெண்டர் பைக்குகளுக்கும் புதிய பெயிண்ட் ஆப்ஷன்களை ஹீரோ நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.

அதேபோல், பைக்கின் கிராஃபிக்ஸும் புதிய டிசைனில் வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இருப்பினும், வழக்கமான அதே 18-இன்ச் அலாய் சக்கரங்கள் தான் புதிய சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கிலும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு தோற்றத்தில் பெரியதாக மாற்றம் இல்லாமல் இருந்தாலும், பைக்கில் மிக முக்கியமான மாற்றம் என்ஜின் சிஸ்டத்தில் கொண்டுவரப்பட உள்ளது.

2025 hero super splendor spotted

முக்கியமாக, ஒபிடி-2பி (OBD-2B) என்கிற புதிய மாசு உமிழ்வு கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப 2025 ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் என்ஜின் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பைக்கில் இருந்து வெளிவரும் காற்று மாசுவை தொடர்ந்து கண்காணிப்பதற்கான கருவி புதிய ஸ்பிளெண்டர் பிளஸ் மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்குகளில் வழங்கப்பட உள்ளன.

தற்சமயம், ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக் ஆனது டிரம் பிரேக் (Drum Brake) மற்றும் டிஸ்க் பிரேக் (Disc Brake) இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.81,098 மற்றும் ரூ.85,698 ஆக உள்ளன. தற்சமயம் மொத்தம் 5 விதமான கலர் ஆப்ஷன்களில் சூப்பர் ஸ்பிளெண்டர் விற்பனை செய்யப்படுகிறது.

2025 hero super splendor spotted

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்றைய கால பைக்குகளில் இருந்து வெளிவரும் காற்று மாசுவை மத்திய அரசாங்கம் பெரிய அளவில் குறைத்துள்ளது. அதன்படி, இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் மாசற்ற போக்குவரத்துக்கு ஏற்றவை ஆக உருவாக்கப்பட்டு உள்ளன. இருப்பினும், இந்த அப்டேட்டிற்காக பைக்கின் விலையில் பெரிய அதிகரிப்பு இருக்காது என்றே கூறப்படுகிறது.

Source: Gaadiwaadi

More from DriveSpark

Article Published On: Monday, April 7, 2025, 17:52 [IST]
English summary
2025 hero super splendor spotted in jaipur while testing
மேலும்... #hero motocorp #spy pics #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X