புதிய வசதிகளுடன் களத்தில் இறங்கியது ஆக்டிவா! விலை இவ்ளோதானா! கலக்கத்தில் ஹீரோ, டிவிஎஸ் நிறுவனங்கள்!

இந்திய சந்தையில் பிரபலமாக திகழ்ந்து வரும் ஸ்கூட்டர்களில் ஒன்று ஹோண்டா ஆக்டிவா 110 (Honda Activa 110). இந்த ஸ்கூட்டரின் 2025 மாடலை ஹோண்டா நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 2025 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் செயல்திறனை பொறுத்தவரையில், இன்ஜினில் (Engine) எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. முந்தைய மாடலில் வழங்கப்பட்டிருந்த அதே 109.51 சிசி இன்ஜின்தான், புதிய மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை இந்த இன்ஜின் OBD2B மாசு உமிழ்வு தர நிலைகளுக்கு இணக்கமானதாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8 ஆயிரம் ஆர்பிஎம்மில் 8 பிஎஸ் பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 9.05 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. 2025 ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டரில், ஐட்லிங் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

2025 Honda Activa 110

ஸ்கூட்டர் ஐட்லிங்கில் இருக்கும்போது, இன்ஜினை இது ஆட்டோமேட்டிக்காக ஆஃப் செய்து விடும். 2025 ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டர் சிறப்பான மைலேஜை (Mileage) வழங்குவதை இந்த தொழில்நுட்பம் உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2025 ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டரில் ஏராளமான வசதிகளும் (Features) வழங்கப்பட்டுள்ளன.

இதில், 4.2 இன்ச் டிஎஃப்டி ஸ்க்ரீன் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மிகவும் முக்கியமானது. இதன் உடன் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி மற்றும் ஹோண்டா ரோடுஸிங் செயலி ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இது பல்வேறு வழிகளில், ரைடர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுதான் புதிய மாடலின் முக்கியமான அப்டேட்-ஆக கருதப்படுகிறது.

2025 Honda Activa 110 Rear Profile

அதாவது இதன் மூலமாக டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், கால் மற்றும் மெசேஜ் அலர்ட்கள் ஆகிய வசதிகளை எல்லாம் ரைடர்கள் பெற முடியும். அத்துடன் இம்முறை யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இது இந்த ஸ்கூட்டரில் பயணம் செய்பவர்களுக்கு, கூடுதல் சௌகரியத்தை வழங்கும்.

2025 ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டர் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். அவை STD, DLX மற்றும் H-Smart ஆகியவை ஆகும். டிசைனை (Design) பொறுத்தவரை, வழக்கமான அம்சங்கள் தக்க வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சில அப்டேட்களை நம்மால் காண முடிகிறது. இதன்படி தற்போது DLX வேரியண்ட்டிலேயே அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் 2025 ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டர் மொத்தம் 6 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) கிடைக்கும். அவை பியர்ல் ப்ரீசியஸ் ஒயிட், டீசெண்ட் ப்ளூ மெட்டாலிக், பியர்ல் சைரன் ப்ளூ, பியர்ல் இக்னியஸ் பிளாக், மேட் ஆக்ஸிஸ் க்ரே மெட்டாலிக் மற்றும் ரீபெல் ரெட் மெட்டாலிக் ஆகியவை ஆகும். 3 வேரியண்ட்களிலுமே இந்த 6 கலர் ஆப்ஷன்களும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் ஹீரோ ப்ளஷர் ப்ளஸ் (Hero Pleasure Plus), ஹீரோ ஸூம் 110 (Hero Xoom 110), டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) மற்றும் டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் (TVS Scooty Zest) ஆகிய வாகனங்கள், 2025 ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டரின் முக்கியமான போட்டி மாடல்களாக (Rivals) உள்ளன.

பல்வேறு அப்டேட்களுடன் விற்பனைக்கு வந்துள்ள 2025 ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 80,950 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது STD வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது, இது 2,266 ரூபாய் மட்டுமே அதிகம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாக உள்ளது.

ஆனால் 2025 ஆக்டிவா 110 ஸ்கூட்டரின் DLX மற்றும் H-Smart ஆகிய எஞ்சிய 2 வேரியண்ட்களின் விலையை ஹோண்டா நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. அவற்றின் விலையும், முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது சற்று அதிகமாக இருக்கும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது. எனினும் வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாகவே இது இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் 110 சிசி ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த போட்டியை சமாளிக்கும் விதமாகவே ஆக்டிவா 110 ஸ்கூட்டரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது 110 சிசி ஸ்கூட்டர் செக்மெண்ட்டில், ஆக்டிவா தனது ஆதிக்கத்தை தக்க வைத்து கொள்வதற்கு உதவி செய்யலாம்.

குறிப்பாக டிஎஃப்டி ஸ்க்ரீன் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டிருப்பது, கவனம் ஈர்த்துள்ளது. இது ஹோண்டா ஆக்டிவா 125 (Honda Activa 125) ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள வசதி ஆகும். அதை ஹோண்டா நிறுவனம் 110 சிசி மாடலிலும் வழங்கியுள்ளது. எனவே வரும் மாதங்களில் ஹோண்டா ஆக்டிவா 110 மாடலின் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, January 24, 2025, 14:05 [IST]
English summary
2025 honda activa 110 launched in india top things you must know
மேலும்... #honda motorcycle #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+