2025 ஹோண்டா ஆக்டிவா 110 விற்பனைக்கு அறிமுகம்.. ஆக்டிவா இ-ஸ்கூட்டரவிட இதையே அதிகம் வாங்க போறாங்க! விலை எவ்ளோ?
2025 ஹோண்டா ஆக்டிவா 110 (Honda Activa 110) இந்திாயவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. புதிய அம்சங்கள் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுடன் ஆக்டிவா 110 நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து, புதிய ஓபிடி2-பி மாசு உமிழ்வு தரத்திற்கு இணங்க தயார் செய்யப்பட்டு இருக்கும் எஞ்சினே இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இந்தியாவில் வழக்கம் போல் ஆக்டிவா 110-க்கு வரும் நாட்களில் வரவேற்பு மிக அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் ஆக்டிவா ஸ்கூட்டர் மாடலுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சொல்லப்போனால் இந்தியர்களின் ஃபேவரிட் ஸ்கூட்டர் மாடலாக ஆக்டிவா இருக்கின்றது. இந்த வரவேற்பைத் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டே நிறுவனம் இதன் அப்டேட் செய்யப்பட்ட மாடலை தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது, ஹோண்டா.

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக 2025 மாடல்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், சமீபத்தில் ஆக்டிவா 125 ஸ்கூட்டர் (Activa 125)-ம், யூனிகார்ன் 160 (Unicorn 160) மற்றும் எஸ்பி 160 (SP 160) ஆகிய பைக் மாடல்களை சமீபத்தில் ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
இவற்றைத் தொடர்ந்தே தற்போது 2025 ஆக்டிவா 110-யையும் ஹோண்டா நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதற்கு அறிமுகமாக ரூ. 80,950 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த ஸ்கூட்டரில் மிக முக்கியமான மாற்றமாக புதிய டிஎஃப்டி திரை வழங்கப்பட்டிருப்பது இருக்கின்றது.

இது ஓர் 4.2 அங்குல திரை ஆகும். இந்த திரையை ஆக்டிவா 125-யிலும் காண முடியும். இதில் இருந்தே ஆக்டிவா 110-க்கு கடத்தியிருக்கின்றனர். பல்வேறு முக்கிய தகவல்களை வழங்கும் வசதிக் கொண்ட ஓர் திரையே இதுவாகும். மைலேஜ் விபரம், ட்ரிப் மீட்டர், பெட்ரோல் முழுமையாக காலியாக இருப்பதை அறிவிக்கும் வசதி உள்ளிட்டவற்றை இது தன்னுள் தாங்கியிருக்கின்றது.
இதுமட்டுமல்ல யுஎஸ்பி சி டைப் சார்ஜிங், எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் ட்ரிப் மீட்டர் உள்ளிட்ட சிறப்பம்சங்களையும் ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டரில் வழங்கி இருக்கின்றது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த ஸ்கூட்டரில் 109.51 சிசி சிங்கிள் சிலிண்டர் பிஜிஎம்-எஃப்ஐ எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 7.8 எச்பி மற்றும் 9.03 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். இத்துடன், ஐடிலிங் ஸ்டாப் சிஸ்டத்தை இதில் வழங்கி இருக்கின்றனர். இது அதிக மைலேஜ் திறனுக்கு வழிவகுக்கும். இந்த மாதிரியான மாற்றங்களினால் இந்த ஸ்கூட்டரின் விலை சற்றே உயர்ந்திருக்கின்றது. 2,266 ரூபாயே உயர்வு செய்யப்பட்டு இருக்கின்றது.
டிஎல்எக்ஸ் (DLX) மற்றும் எச்-ஸ்மார்ட் (H-Smart) வேரியண்டுகளின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. சீக்கிரமே முழு விலை விபரத்தையும் ஹோண்டா நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விலை சற்றே உயர்த்தி விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டாலும், இதன் விலை இப்போதும் மலிவானதாகவே காட்சியளிக்கின்றது. ஆகையால், விற்பனையில் எப்போதும் இந்த ஸ்கூட்டர் வரும் நாட்களிலும் ஜொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்களின் ஃபேவரிட் டூ-வீலர் மாடலாக ஹோண்டா ஆக்டிவா இருக்கின்றது. குறிப்பாக, ஆக்டிவா 110 வெர்ஷனுக்கு சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே தற்போது அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இதற்கும் இந்தியர்கள் தங்களின் அமோக வரவேற்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் வருகை டிவிஎஸ் ஜுபிடர் மற்றும் யமஹா ஃபஸ்ஸினோ ஆகிய ஸ்கூட்டர் மாடலுக்கு போட்டியாக அமைய இருக்கின்றது. ஆக்டிவா இ-ஸ்கூட்டர் இன்னும் நாடு முழுக்க விற்பனைக்கு வரவில்லை. இப்போது நாட்டின் சில நகரங்களில் மட்டுமே விற்பனைத் தொடங்கி இருக்கின்றது. ஆகையால், வரும் நாட்களிலும் ஆக்டிவா இ-ஸ்கூட்டரைக் காட்டிலும் ஆக்டிவாவிந் ஐசிஇ வெர்ஷனே அதிகம் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









