2.10 லட்ச ரூபா விலையில் ஹோண்டா ஹைனெஸ் பைக் அறிமுகம்.. இந்த ஷோரூம்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்!!

முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (HMSI), ஹைனெஸ் சிபி 350 (Hness CB350) மற்றும் சிபி 350 ஆர்எஸ் (CB350RS) ஆகிய பைக் மாடல்களின் 2025 வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஓபிடி-2பி (OBD-2B) விதிகளுக்கு இணங்க அப்கிரேட் செய்தே இவற்றை ஹோண்டா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இத்துடன், புதிய நிற தேர்வுகளையும் இந்த பைக் மாடல்களில் ஹோண்டா செர்த்திருக்கின்றது. இதுபற்றிய கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

சிபி 350 ஆர்எஸ் பற்றிய விபரங்கள்: இந்த மாடல் இந்தியாவில் இரண்டு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். டிஎல்எக்ஸ் (DLX) மற்றும் டிஎல்எக்ஸ் ப்ரோ (DLX Pro) ஆகியவையே அவை ஆகும். இந்த இரண்டில் டிஎல்எக்ஸ் வேரியண்டில் புதிதாக பியர்ல் இக்னியஸ் பிளாக் (Pearl Igneous Black) மற்றும் பியர்ல் டீப் கிரவுண்டு கிரே (Pearl Deep Ground Grey) ஆகிய நிற தேர்வுகளே சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

2025 honda cb350 range launched with new colours

இதேபோல், டிஎல்எக்ஸ் ப்ரோ வேரியண்டில் மேட் ஆக்ஸிஸ் கிரே மெட்டாலிக் (Mat Axis Grey Metallic) மற்றும் ரிபெல் ரெட் மெட்டாலிக் (Rebel Red Metallic) ஆகிய வண்ண ஆப்ஷன்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளன. இதுதவிர, பியர்ல் இக்னியஸ் பிளாக் மற்றும் பியர்ல் டீப் கிரவுண்டு கிரே ஆகிய நிற தேர்வுகளும் இந்த வேரியண்டில் வழங்கப்படும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதில், டிஎல்எக்ஸ் வேரியண்ட் ரூ. 2.15 லட்சம் என்கிற விலையிலும், டிஎல்எக்ஸ் ப்ரோ வேரியண்ட் ரூ. 2.18 லட்சம் என்கிற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். எஞ்சினைப் பொருத்த வரை 348.36 சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

2025 honda cb350 range launched

இது அதிகபட்சமாக 21.78 பிஎச்பி மற்றும் 30 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். ஓபிடி-2பி தரத்திற்கு இணங்கவே இதில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்திய அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்ட புதிய விதியே இதுவாகும். நிகழ்நேரத்தில் எஞ்சினில் இருந்து வெளியேறும் கார்பனை நிகழ்நேரத்தில் டிராக் செய்துக் காட்டிக் கொடுக்கக் கூடிய ஓர் விதியே இந்த ஓபிடி-2பி ஆகும்.

ஹைனெஸ் சிபி 350 பற்றிய விபரங்கள்: இது மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். டிஎல்எக்ஸ் (DLX), டிஎல்எக்ஸ் ப்ரோ (DLX Pro) மற்றும் டிஎல்எக்ஸ் ப்ரோ குரோம் (DLX Pro Chrome) ஆகியவையே அவை ஆகும். ரூ. 2.10 லட்சம் தொடங்கி ரூ. 2.15 லட்சம் வரையிலான விலை இதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். எஞ்சினைப் பொருத்த வரை மேலே பார்த்த மாடலும், இதுவும் ஒரே மாதிரியானதாகவே இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இதேபோல், எந்தவொரு பெரிய மாற்றத்தையும் இந்த பைக்கில் ஹோண்டா செய்யவில்லை. அதேவேளையில், புதிய நிறத் தேர்வுகளை இதில் ஹோண்டா சேர்த்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டாவின் இந்த பைக் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த வாகனமாகும். ஆகையால், இது நிறுவனத்தின் பிக்விங் ஷோரூம்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கம். நிறுவனத்தின் வழக்கமான ஷோரூம்களில் இது விற்பனைக்குக் கிடைக்காது என்பது கவனிக்கத்தகுந்தது. பிக்விங், பிரீமியம் பைக்குகளுக்காகவே திறக்கப்பட்ட ஓர் ஷோரூம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 4, 2025, 23:51 [IST]
English summary
2025 honda cb350rs and hness cb350 launched with obd 2b engines and new colour options
மேலும்... #honda motorcycle #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+