இந்த பைக்கை எல்லாம் நாம நேரில் பார்ப்பதே அரிது... இவங்க டெலிவிரியே எடுத்துட்டாங்க!!

இந்திய சந்தையில், ஹோண்டா நிறுவனம் தனது பிரபலமான சூப்பர்பைக்கான சிபிஆர் 1000ஆர்.ஆர்-ஆர் ஃபயர்பிளேடை (CBR 1000RR-R Fireblade) மீண்டும் அறிமுகப்படுத்தி இருப்பதுடன், பைக்கின் டெலிவிரிகளும் (Delivery) துவங்கப்பட்டு உள்ளன. இந்த பைக், 2020-ல் விற்பனை நிறுத்தப்பட்டபோது பல ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. தற்போது இந்த பைக் இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப்களுக்கு மீண்டும் வரத் தொடங்கியுள்ளதுடன், விநியோகமும் தொடங்கியுள்ளது.

வாடிக்கையாளர்கள், ஹோண்டா சிபிஆர் 1000ஆர்.ஆர்-ஆர் ஃபயர்பிளேட் சூப்பர்பைக்கை நாட்டின் பல்வேறு பகுதிகளில் டெலிவரி எடுக்கும் படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இதில் ஒரு வீடியோ இந்தூரிலிருந்தும், மற்றொன்று கேரளாவின் கொச்சியிலிருந்தும் படமாக்கப்பட்டுள்ளன.

honda cbr 1000rr-r fireblade delivery

இதில் இந்தூர் வீடியோவில், வாடிக்கையாளர் தனது மஹிந்திரா எக்ஸ்யூவி 9இ (Mahindra XUV 9e) என்கிற விலையுயர்ந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரில் (Electric Car) ஹோண்டா பிக்விங் (Honda Bigwing) டீலர்ஷிப் ஷோரூமுக்கு வருவதை பார்க்க முடிகிறது. எக்ஸ்யூவி 9இ காரில் அவர் ஷோரூமுக்கு வந்த பின்பே பெரிய அளவிலான பெட்டி ஒன்றில் பைக் கொண்டுவரப்பட்டு உள்ளது.

இதற்கு காரணம், இந்த 1000சிசி ஹோண்டா பைக் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவது இல்லை. வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் பைக் கப்பலில் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. நீண்ட தொலைவில் இருந்து நீண்ட நாட்களுக்கு கொண்டுவரப்படும் பைக்கை தூசி மற்றும் நீரிலிருந்து பாதுகாக்கும் வகையில் நீர் புகாத உறை வழங்கப்பட்டு உள்ளது.

honda cbr 1000rr-r fireblade delivery

இதனை வாடிக்கையாளர் மற்றும் அவரது நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து அகற்றினர். பின்னர், பைக் ஒரு உலோக கூண்டுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. வாடிக்கையாளர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பைக்கை கூண்டுடன் டீலர்ஷிப் உள்ளே எடுத்துச் சென்றார். அங்கே, அவர்களால் கூண்டை பிரித்து, பைக்கை நேரடியாக பார்க்க முடிந்தது.

கேரளாவில் எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோவில், பைக் ஏற்கனவே டெலிவரி தளத்தில் வாடிக்கையாளரிடம் ஒப்படைக்க தயாராக இருக்கிறது. வாடிக்கையாளர் தனது குடும்பத்துடன் டெலிவரி எடுக்க வருகிறார். அனைத்து ஆவணப்பணிகளும் முடிந்த பிறகு, பைக் அவருக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. பைக் வெளிப்படுத்தப்பட்டதும், டீலர்ஷிப் சார்பில் வழக்கமான கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன.

பின்னர் வாடிக்கையாளர் பைக்கை ஓட்டிச் செல்கிறார். ஹோண்டா சிபிஆர் 1000ஆர்.ஆர்-ஆர் ஃபயர்பிளேட் ஆனது ஜப்பானிய இருசக்கர வாகன நிறுவனமான ஹோண்டாவின் இந்தியாவிற்கான முதன்மை மாடலாகும். இந்த பைக்கின் விற்பனை இந்தியாவில் 2020-ல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பழைய மாடலை விட, தற்போது உள்ள மாடல் சுமார் ரூ.2.23 லட்சம் விலை அதிகமாகும்.

honda cbr 1000rr-r fireblade delivery

புதிய சிபிஆர் 1000ஆர்.ஆர்-ஆர் ஃபயர்பிளேட் பைக்கில் சில ஒப்பனை மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஹோண்டாவின் மோட்டோஜிபி (MotoGP) அனுபவங்களின் அடிப்படையில் இவை அமைந்துள்ளன. இருப்பினும், பைக்கின் முன்புறம் பெரிய அளவில் முன்பை போலவே உள்ளது. பைக்கின் முன்பக்கத்தில், இரட்டை-பாட் LED ஹெட்லேம்ப்கள் மற்றும் மையத்தில் ஒரு ஏர் இண்டேக் துளையுடன் காணப்படுகிறது.

அதிக வேகத்தில் கூடுதல் அழுத்தம் (downforce) பெறுவதற்காக, ஏரோடைனமிக் விங்லெட்டுகளும் ஃபேரிங்குடன் இணைக்கப்பட்டுள்ளன. சிபிஆர் 1000ஆர்.ஆர்-ஆர் ஃபயர்பிளேட் ஆனது 999cc, இன்லைன்-4 சிலிண்டர் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 214 பிஎச்பி சக்தியையும், 113 என்.எம் டார்க் திறனையும் உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பைக்கில் இருதிசை குயிக் ஷிஃப்டர் மற்றும் டைட்டானியம் எக்ஸாஸ்ட் குழாய் ஆகியவை நிலையான அம்சங்களாக உள்ளன. இந்த பிரிவில் உள்ள மற்ற பைக்குகளைப் போலவே, ஃபயர்பிளேடில் ஹோலின்ஸ் (Öhlins) நிறுவனத்தின் USD முன்புற ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா சிபிஆர் 1000ஆர்.ஆர்-ஆர் ஃபயர்பிளேட் போன்ற ஒரு பைக்கை நேரில் பார்ப்பதே நம்மில் நிறைய பேருக்கு கனவாக இருக்கும் நிலையில், இவ்வளவு விலையுயர்ந்த ஹோண்டா பைக்கையும் வாங்குவதற்கு இந்தியாவில் நிறைய பேர் உள்ளனர் என்பது சற்று ஆச்சிரியமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 30, 2025, 15:58 [IST]
English summary
2025 honda cbr 1000rr r fireblade bike delivered to first customer in india
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X