அடி மாட்டு விலையில் களமிறங்கிய புது ஹோண்டா பைக்... தினமும் அடிச்சு தொவச்சாலும் ஆயுசுக்கும் உழைக்கும்...
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100). இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான ஹோண்டா நிறுவனத்தின் பைக்குகளில் ஒன்றாகும். இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஹோண்டா ஷைன் பதிவு செய்து வருகிறது. இந்த விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, ஷைன் பைக்கின் 2025ம் ஆண்டு மாடலை, ஹோண்டா நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
பழைய மாடல் உடன் ஒப்பிடுகையில், 2025 ஹோண்டா ஷைன் 100 பைக்கின் டிசைனில் (Design) ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டிருப்பதை இதற்கு உதாரணமாக கூற முடியும். அதே போல் 2025 ஹோண்டா ஷைன் 100 பைக்கில் ஏராளமான வசதிகளும் (Features) வழங்கப்பட்டுள்ளன.

ஹாலோஜன் ஹெட்லேம்ப், ட்வின்-போட் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், சைடு ஸ்டாண்ட் சென்சார் மற்றும் கம்பனைடு பிரேக்கிங் சிஸ்டம் போன்ற வசதிகளை எல்லாம் இதற்கு உதாரணமாக கூற முடியும். அதே நேரத்தில் 2025 ஹோண்டா ஷைன் 100 பைக்கில் வழங்கப்பட்டிருக்கும் இன்ஜின் OBD2B விதிமுறைகளுக்கு இணக்கமானது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த 98.98 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 7.28 பிஹெச்பி பவரையும், 5,000 ஆர்பிஎம்மில் 8.04 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

2025 ஹோண்டா ஷைன் 100 பைக் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். அதன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) 68,767 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலைக்கு இது மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது. எனவே புதிய மாடலின் வருகையால், வரும் மாதங்களில், ஹோண்டா ஷைன் 100 பைக்கின் விற்பனை எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் (Hero Splendor Plus), ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe), பஜாஜ் பிளாட்டினா 100 (Bajaj Platina 100) மற்றும் டிவிஎஸ் ஸ்போர்ட் (TVS Sport) ஆகிய பைக்குகளுக்கு எல்லாம், 2025 ஹோண்டா ஷைன் 100 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.
இந்திய சந்தையில் ஏற்கனவே ஹோண்டா ஷைன் 100 பைக்கின் விற்பனை சிறப்பாகவே இருந்து வருகிறது. இந்த சூழலில் களமிறங்கியுள்ள புதிய மாடல், ஹோண்டா ஷைன் 100 பைக்கின் விற்பனை எண்ணிக்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது எங்கள் கருத்து.
2025 ஹோண்டா ஷைன் 100 பைக் மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். அவை கருப்பு/சிகப்பு, கருப்பு/நீலம், கருப்பு/ஆரஞ்ச், கருப்பு/க்ரே மற்றும் கருப்பு/பச்சை ஆகியவை ஆகும். 2025 ஹோண்டா ஷைன் 100 பைக்கிற்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன.
டெலிவரி (Delivery) பணிகள் வரும் ஏப்ரல் மாத முதல் வாரத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தினசரி பயன்படுத்த கூடிய வகையில் ஒரு விலை குறைவான பைக்கை தேடி கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு 2025 ஹோண்டா ஷைன் 100 ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








