இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்! ஹீரோவா (அ) ஹோண்டாவா? இந்தியாவின் மலிவான 100சிசி பைக்ஸ்!
ஹோண்டா 2-வீலர்ஸ் (Honda 2-Wheelers) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பைக், 2025 ஷைன் 100 (Shine 100) ஆகும். இந்தியாவில் 100சிசி என்ஜின் உடன் விற்பனை செய்யப்படும் பைக்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இருப்பினும், இன்றைய மாடர்ன் காலக்கட்டத்திலும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் சில 100சிசி பைக்குகளுள் ஒன்று, ஹோண்டா ஷைன் 100 ஆகும். இது புதிய 2025ஆம் ஆண்டை முன்னிட்டு அப்டேட் செய்யப்பட்டு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பழைய ஷைன் 100 பைக்குடன் ஒப்பிடுகையில் புதிய மாடலில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
விற்பனையில் இந்த ஹோண்டா பைக்கிற்கு போட்டியாக ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தில் இருந்து ஸ்பிளெண்டர் பிளஸ் (Splendor Plus) பைக் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டிற்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

என்ஜின்: புதிய 2025 ஹோண்டா ஷைன் 100 பைக்கில் 98.98சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 7500 ஆர்பிஎம்-இல் 7.38 பிஎஸ் மற்றும் 5000 ஆர்பிஎம்-இல் 8.05 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடிய இந்த என்ஜின் உடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
மறுப்பக்கம், ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் சற்று சிறியதான 97.20சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 8000 ஆர்பிஎம்-இல் 8.02 பிஎஸ் மற்றும் 6000 ஆர்பிஎம்-இல் 8.06 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடிய இந்த என்ஜின் உடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

இயந்திர பாகங்கள்: ஹோண்டா ஷைன் 100 பைக் ஆனது டைமண்ட் டைப் (Diamond Type) ஃப்ரேமிலும், ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் ஆனது ட்யூப்லர் டபுள் கிராடில் (Tubular Double Cradle) ஃப்ரேமிலும் உருவாக்கப்படுகின்றன. ஆனால், இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சஸ்பென்ஷன் செட்-அப் (Suspension Set-up) தான் வழங்கப்படுகிறது.
இந்த வகையில் இந்த இரு 100சிசி பைக்குகளிலும் முன்பக்க சஸ்பென்ஷனுக்கு டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்க சஸ்பென்ஷனுக்கு ப்ரீலோடு அட்ஜெஸ்மெண்ட் வசதி கொண்ட ட்வின் ஷாக்குகளும் வழங்கப்படுகின்றன. பிரேக் பணியை கவனிக்க இந்த இரு பைக்குகளிலும் டிரம் பிரேக்குகள் தான் வழங்கப்படுகின்றன; டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுவதில்லை.

தொழிற்நுட்ப அம்சங்கள் & பரிமாண அளவுகள்: ஷைன் 100 மற்றும் ஸ்பிளெண்டர் பிளஸ் இவை இரண்டிலும் அனலாக் ஸ்பீடோமீட்டர் மற்றும் காம்பி-பிரேக் சிஸ்டம் (CBS) வழங்கப்படுகிறது. தரையில் இருந்து இருக்கையின் உயரத்தில் இந்த இரு பைக்குகளிலும் எந்த வித்தியாசமும் இல்லை என்றாலும், ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கின் பெட்ரோல் டேங்க் 800மிலி அதிக கொள்ளளவை கொண்டதாக உள்ளது.
இதனாலேயே இந்த ஹீரோ பைக்கின் எடையும் சற்று அதிகமாக 13 கிலோ கூடுதலாக உள்ளது. மேலும், முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரமும் இவை இரண்டிற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. அதாவது, ஹோண்டா ஷைன் 100 பைக்கில் 1245மிமீ இடைவெளியிலும், ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் 1236மிமீ இடைவெளியிலும் முன் & பின் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை எல்லாவற்றையும் விட விலையில் இந்த இரு 100சிசி பைக்குகளுக்கு இடையே மிக பெரிய வித்தியாசம் உள்ளது. ஏனெனில், புதிய ஹோண்டா ஷைன் 100 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.66,900 ஆகவும், ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.77,176 ஆகவும் தற்சமயம் உள்ளன. அதாவது, இரண்டிற்கும் இடையே சுமார் ரூ.10,000 வித்தியாசம் உள்ளது.
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் உடன் ஒப்பிடுகையில், என்ஜினின் குதிரை ஆற்றல் ஹோண்டா ஷைன் 100 பைக்கில் சற்று குறைவாக கிடைத்தாலும், டார்க் திறன் ஆனது குறைவான என்ஜின் ஆர்பிஎம் வேகத்திலேயே அதிகமாக கிடைப்பதால், ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கை காட்டிலும் ஷைன் 100 பைக்கில் பிக்-அப் சற்று விரைவாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications









