எங்கே பார்த்தாலும் புது ராயல் என்ஃபீல்டு பைக்கின் படங்களாக தான் இருக்கு! இது நிச்சயமா பந்தயம் அடிக்கும்!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹண்டர் 350 (Hunter 350) பைக்கிற்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இருப்பினும், ஹண்டர் 350 பைக் அறிமுகம் செய்யப்பட்டு சில வருடங்களாகி விட்டதால், இந்த பைக்கை அப்டேட் செய்ய ராயல் என்ஃபீல்டு தயாராகி வருகிறது.
மிக நீண்ட வருட வரலாற்றை கொண்ட ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் இருந்து கடந்த காலங்களில் பல தரமான மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் அடையாளமே அவற்றின் 'டுப்.. டுப்...' சத்தம் மற்றும் அதிகமான எடை ஆகும். அத்தகைய ராயல் என்ஃபீல்டு அடையாளங்களில் இருந்து வேறுப்பட்டதாக உருவாக்கப்பட்ட மோட்டார்சைக்கிள் தான், ஹண்டர் 350 ஆகும்.

குறைவான எடையில், மாடர்ன் அம்சங்கள் மிகுந்ததாக ஹண்டர் 350 கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் இருந்து இப்போது வரையில் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்குகளின் விற்பனை சிறப்பாகவே உள்ளது என்றாலும், கடந்த சில மாதங்களாக சற்று குறைத்து வருகிறது. இதன் மூலமாக, ஹண்டர் 350 பைக்கை அப்டேட் செய்ய வேண்டிய நேரத்தை எட்டிவிட்டோம் என்பதை ராயல் என்ஃபீல்டு உணர ஆரம்பித்தது.
அதனை தொடர்ந்து, ஹண்டர் 350 பைக்கை அப்டேட் செய்யும் பணிகளில் ராயல் என்ஃபீல்டு ஈடுப்பட ஆரம்பித்துள்ளது. இன்னும் சொல்லப் போனால், இந்த பணிகளில் ஏற்கனவே ராயல் என்ஃபீல்டு ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது. அதன் வெளிப்பாடாகவே, அப்டேட் செய்யப்பட்ட ஹண்டர் 350 பைக்குகளின் படங்கள் அறிமுகத்திற்கு முன்னதாக இணையத்தில் வெளியாகி உள்ளன.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி மும்பை மற்றும் டெல்லியில் 'ஹண்டர்ஹுட்' (HunterHood) என்கிற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவின் முக்கியமான இரு நகரங்களில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்களின் மூலம் புதிய ஹண்டர் 350 பைக்கை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கிறோம்.
இதற்கு முன்னதாக தற்போது இணையத்தில் கசிந்துள்ள படங்களில் இரு புதிய ஹண்டர் 350 பைக்குகள் நிற்க வைக்கப்பட்டிருப்பதை காண முடிகிறது. இந்த புதிய ஹண்டர் 350 பைக்குகளில் புதிய நிறங்களில் பெயிண்ட் மற்றும் புதிய கிராஃபிக்ஸ் (Graphics) டிசைனை பார்க்க முடிகிறது. இந்த படங்களில் காட்சித்தரும் புதிய ஹண்டர் 350 பைக் ஒன்றில் வெள்ளை நிற பெயிண்ட் அடிப்படையாக இருக்க, அதன்மீது மஞ்சள், பச்சை மற்றும் நீல நிற கிராஃபிக்ஸ் டிசைன்கள் இருப்பதை காணலாம்.

மற்றொரு புதிய ஹண்டர் 350 பைக்கில் சிவப்பு நிற பெயிண்ட் அடிப்படையாக இருக்க, கருப்பு நிறத்திலான இரு கோடுகள் பெட்ரோல் டேங்கின் மீது செல்வதை காணலாம். இந்த சிவப்பு-கருப்பு நிறத்திலான பெயிண்ட் ஆப்ஷன் ஏற்கனவே ஹண்டர் 350 பைக்கில் வழங்கப்பட்டுவரும் ஒன்றாகும். ஆனால் தற்சமயம் அந்த கருப்பு நிற கோடுகள் எதுவும் வழங்கப்படுவதில்லை.
பெயிண்ட் நிறங்களுக்கு அடுத்து, புதிய ஹண்டர் 350 பைக்கில் நம்மை கவரக்கூடியதாக புதிய வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லைட் (LED Headlight) உள்ளது. முன்பு ஹலோஜன் (Halogen) ஹெட்லைட் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது எல்இடி ஹெட்லைட் ஆக மாற்றப்பட்டுள்ளது. இவற்றுடன், பைக்கின் பின்பக்க சஸ்பென்ஷன் செட்-அப்பிலும் ராயல் என்ஃபீல்டு மாற்றங்களை செய்துள்ளதால், புதிய ஹண்டர் 350 பைக்கில் பயண அனுபவம் சற்று வேறுப்படும்.
மற்றப்படி, பைக்கின் என்ஜின் & கியர்பாக்ஸ் செட்-அப்பில் எந்த வேறுப்பாடும் இருக்க வாய்ப்பில்லை. ஹண்டர் 350 பைக்கில் 349சிசி, சிங்கிள்-சிலிண்டர் ஏர் & ஆயில்-கூல்டு ஃப்யுல்-இன்ஜெக்டட் OHC என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 20.2 எச்பி மற்றும் 27 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கிற்கு பெரிய அளவிலான கஸ்டமர் கூட்டம் குறுகிய காலத்தில் உருவாகியுள்ளது. இத்தகைய பைக்கை அப்டேட் செய்வதன் மூலம், புதிய ஹண்டர் 350 பைக்கின் விற்பனை சிறப்பாக இருக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம். ஆனால், புதிய ஹண்டர் 350 பைக்கின் விலைகளை எந்த அளவிற்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நிர்ணயிக்க போகிறது என்பதுதான் இதில் முக்கியமான விஷயம் ஆகும்.
Images Source: Motorcent


Click it and Unblock the Notifications









