அடி மாட்டு விலையில் களமிறங்கிய புது ராயல் என்பீல்டு பைக்! எல்லாரையும் சந்தோஷத்துல திக்கு முக்காட வெச்சுட்டாங்க
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் (Most Affordable Royal Enfield Motorcycle) என்ற பெருமையை தன்வசம் வைத்திருப்பது ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) ஆகும். இதன் அப்டேட் செய்யப்பட்ட 2025 மாடல் இன்று (ஏப்ரல் 26) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 2025 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கில் 3 புதிய கலர் ஆப்ஷன்கள் (Colour Options) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை ரியோ ஒயிட், டோக்கியோ பிளாக் மற்றும் லண்டன் ரெட் ஆகியவை ஆகும்.
உலகின் தனித்துவமான நகரங்களை மனதில் கொண்டு, இந்த 3 புதிய கலர் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 350 சிசி பைக்குகளில் முதல் முறையாக ஸ்லிப் மற்றும் அஸிஸ்ட் க்ளட்ச் வசதி, 2025 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாம் தவிர, எல்இடி ஹெட்லேம்ப்கள், ட்ரிப்பர் நேவிகேஷன், டைப்-சி யூஎஸ்பி ஃபாஸ்ட் சார்ஜர் ஆகிய வசதிகளும் (Features), 2025 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஓட்டுதல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையிலான மாற்றங்களையும் ராயல் என்பீல்டு நிறுவனம் செய்துள்ளது.
இதன்படி 2025 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் புதிய இருக்கைகள் மற்றும் புதிய ஹேண்டில்பாரை பெற்றுள்ளது. அத்துடன் புதிய சஸ்பென்ஸ் செட்-அப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் க்ரவுண்ட் க்ளியரன்சும் உயர்த்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து, ரைடர்களுக்கு அட்டகாசமான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இன்ஜினில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. முந்தைய மாடலில் வழங்கப்பட்ட அதே 349 சிசி ஜே-சீரிஸ் இன்ஜின்தான், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் 2025 மாடலிலும் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள 3 புதிய கலர் ஆப்ஷன்கள் தவிர, ஃபேக்டரி ப்ளாக், ரீபெல் ப்ளூ, டேப்பர் க்ரே ஆகிய கலர் ஆப்ஷன்களிலும், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் கிடைக்கும்.
ஆக மொத்தம் 2025 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் 6 கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கும். 2025 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 1,49,900 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட், ஃபேக்டரி பிளாக் கலர் ஆப்ஷனில் மட்டும் கிடைக்கும்.
அதே நேரத்தில் இந்த பைக்கின் மிட் வேரியண்ட்டின் விலை 1,76,750 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட், ரியோ ஒயிட் மற்றும் டேப்பர் க்ரே ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். மறுபக்கம் டாப் வேரியண்ட்டின் விலை 1,81,750 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வேரியண்ட், டோக்கியோ பிளாக், லண்டன் ரெட் மற்றும் ரீபெல் ப்ளூ ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள அனைத்தும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக ராயல் என்பீல்டு ஹண்டர் 350 கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனம் ஹண்டர் 350 பைக்கை நன்றாக மெருகேற்றியுள்ளது. ஓரளவிற்கு குறைவான விலையில் ராயல் என்பீல்டு பைக்கை வாங்க வேண்டும் என நினைக்க கூடியவர்களுக்கு இது நல்ல ஆப்ஷன். 2025 மாடலின் வருகை, ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் விற்பனை எண்ணிக்கை உயர உதவி செய்யும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications