அப்பனுக்கும் அப்பன் பொறந்துதான் இருப்பான்... ஜாவா பைக்குகளை தெரியுமா? ராயல் என்ஃபீல்டுக்கு சரியான போட்டி!!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தில் இருந்து புதியதாக மேம்படுத்தப்பட்ட 'ஹண்டர் 350' (Hunter 350) பைக் மிக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 2022ஆம் ஆண்டில் முதல்முறையாக ஹண்டர் 350 பைக் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் 3 வருடங்களுக்கு பிறகு இந்த பைக்கை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அப்டேட் செய்து அறிமுகம் செய்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கிற்கு விற்பனையில் கிளாசிக் 350, புல்லட் 350 உள்ளிட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளே போட்டியாக உள்ளன. அதேநேரம், மற்ற நிறுவனங்களின் பைக்குகளும் ஹண்டர் 350க்கு விற்பனையில் போட்டியாக உள்ளன. அவற்றுள் ஒன்று, ஜாவா 42 (Jawa 42) ஆகும். ஜாவா பைக்குகளுக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன்.

hunter 350 vs jawa 42

ஏனெனில், இந்தியாவில் ஒரு காலத்தில் ஜாவா பைக்குகளுக்கு மிக சிறப்பான வரவேற்பு கிடைத்து வந்தது. பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின், மீண்டும் மார்க்கெட்டில் களம்புகுந்த ஜாவா நிறுவனம் அதன் பிரபலமான '42' என்கிற பைக்கை அறிமுகம் செய்தது. பெயரில் 42 என்கிற எண்ணை கொண்டிருப்பினும் இது ஒரு 300சிசி பைக்காகும்.

விற்பனையில் பல ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு போட்டியாக விளங்கும் ஜாவா 42 பைக் ராயல் என்ஃபீல்டின் ஹண்டர் 350 பைக்கிற்கும் போட்டியாக உள்ளது. ஹண்டர் 350 பைக்கை போன்று 42 பைக்கையும் சமீபத்தில்தான் ஜாவா நிறுவனம் அப்டேட் செய்து இருந்தது. ஆனால், ஹண்டர் 350 பைக்கை போன்று இல்லாமல், ஜாவா 42 பைக் பெரிய அளவில் அப்டேட் செய்யப்பட்டு இருந்தது.

hunter 350 vs jawa 42

கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஜாவா 42 பைக்கின் பெயர் ஜாவா 42 எஃப்.ஜே (FJ) என மாற்றப்பட்டது மட்டுமில்லாமல், பைக்கின் என்ஜினையே மொத்தமாக மாற்றினர். இவ்வாறு, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய 2025 ஹண்டர் 350 பைக்கிற்கும், ஜாவா 42 எஃப்.ஜே பைக்கிற்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

தோற்றம்: ஹண்டர் 350 ஆனது மற்ற ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் இருந்து சற்று வேறுப்பட்டது ஆகும். குறைவான எடையில் உருவாக்கப்பட்டது மட்டுமின்றி, ஹண்டர் 350 பைக்கின் தோற்றமும் சிம்பிளானதாக உள்ளது. இதுவே இளம் தலைமுறையினர் பலரை வெகுவாக கவர்ந்து இழுக்கிறது என சொல்ல வேண்டும். புதிய 2025ஆம் ஆண்டிற்கான அப்டேட்டின்படி, ஹண்டர் 350 பைக்கின் தோற்றத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவராவிடினும், பைக்கிற்கான கிராஃபிக்ஸ் (Graphics)இல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், ரியோ வெள்ளை, டோக்கியோ கருப்பு மற்றும் லண்டன் என 3 புதிய பெயிண்ட் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஹண்டர் 350 பைக்கின் இருக்கை அமைப்பின் டிசைனில் சிறிய மாற்றங்களை ராயல் என்ஃபீல்டு செய்துள்ளது. மறுப்பக்கம், ஜாவா 42 எஃப்ஜே பைக்கை பொறுத்தவரையில், வழக்கமான ஜாவா 42 பைக்கை காட்டிலும் புதிய 42 எஃப்ஜே பைக் ஆனது ஸ்போர்டியரான வெர்சனாக அறிமுகம் செய்யப்பட்டது.

அதாவது, ஹண்டர் 350 பைக்கை போன்று குறிப்பாக இளம் தலைமுறையினரை டார்க்கெட் செய்து உருவாக்கப்பட்ட பைக் 42 எஃப்ஜே ஆகும். இதற்கேற்ப, மல்டி-ஸ்போக் அலாய் சக்கரங்கள் மற்றும் மேல் நோக்கி வளைக்கப்பட்ட சைலன்சர் குழாய் உள்ளிட்டவற்றுடன் 42 எஃப்ஜே பைக் உருவாக்கப்படுகிறது. இதனால், பழமை மற்றும் புதுமை என இரண்டும் கலந்த கலவையாக 42 எஃப்.ஜே பைக் வடிவமைக்கப்படுகிறது.

என்ஜின்: புதிய ஹண்டர் 350 பைக்கில் என்ஜின் சிஸ்டம் புதிய ஒபிடி-2பி மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமானதாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை. புதிய ஹண்டர் 350 பைக்கிலும் வழக்கமான 349சிசி ஏர்/கூல்டு-என்ஜின் தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 20.2 பிஎச்பி மற்றும் 27 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் புதியதாக ஹண்டர் 350 பைக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்லிப் & அசிஸ்ட் க்ளட்ச் இணைக்கப்பட்டுள்ளது. மறுப்பக்கம், ஜாவா 42 எஃப்ஜே பைக்கில் ஏற்கனவே கூறியதுபோல் புதிய என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஜாவா 42 பைக்கில் முன்பு 294.7சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு வந்த நிலையில், புதிய 42 எஃப்ஜே பைக்கில் 334சிசி, லிக்யுடு-கூல்டு என்ஜின் அறிமுகம் செய்யப்பட்டது.

மற்ற ஜாவா பைக்குகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த இந்த என்ஜின் புதிய ஜாவா 42 எஃப்ஜே பைக்கிலும் கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதிகப்பட்சமாக 28.7 பிஎச்பி மற்றும் 29.62 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

சஸ்பென்ஷன் & பிரேக்ஸ்: 2025 ஹண்டர் 350 பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள மிக முக்கியமான அப்டேட்களுள் ஒன்று, பின்பக்க சஸ்பென்ஷன் செட்-அப் அப்கிரேட் செய்யப்பட்டு இருப்பதாகும். முன்பு, மெல்லியதான சுருள்கள் உடன் சஸ்பென்ஷனுக்கு பைக்கின் பின்பக்கத்தில் விரைப்பான ட்யூயல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிய ஹண்டர் 350 பைக்கில் இதே பின்பக்க சஸ்பென்ஷன் செட்-அப்பில் கூடுதலாக சுருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஹண்டர் 350 பைக்கில் பிரச்சனையாக பலர் கூறிய பின்பக்க சஸ்பென்ஷன் செட்-அப் தற்போது அப்கிரேட் செய்யப்பட்டுள்ளதால், கரடு முரடான சாலைகளிலும் மென்மையான பயண அனுபவத்தை எதிர்பார்க்கலாம். ஹண்டர் 350 பைக்கில் முன்பக்க சஸ்பென்ஷனுக்கு 41மிமீ-இல் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் வழங்கப்படுகின்றன. பிரேக் பணியை இந்த பைக்கில் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் டிரம் பிரேக்கும் கவனித்துக் கொள்கின்றன.

அதேநேரம், ஜாவா 42 எஃப்ஜே பைக்கின் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் அதே 41மிமீ டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 5 விதங்களாக ப்ரீலோடு அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யக்கூடிய ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்படுகின்றன. இந்த ஜாவா பைக்கில் முன் மற்றும் பின் சக்கரங்கள் இரண்டிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன. ஹண்டர் 350 பைக்கில் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் மட்டுமே வழங்கப்படும் நிலையில், ஜாவா 42 எஃப்ஜே பைக்கில் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் கொடுக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலையில் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கை காட்டிலும் ஜாவா 42 எஃப்ஜே பைக் சற்று அதிகமாக உள்ளது. 2025 ஹண்டர் 350 பைக்கின் விலைகள் ரூ.1.50 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கும் நிலையில், ஜாவா 42 எஃப்ஜே பைக்கின் விலைகள் ரூ.2 லட்சத்தில் இருந்து தற்சமயம் துவங்குகின்றன. இதற்கேற்ப ஜாவா 42 எஃப்ஜே பைக்கில் ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்படுகின்றன. இவை இரண்டில் உங்களது தேர்வு எது என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Monday, April 28, 2025, 23:58 [IST]
English summary
2025 royal enfield hunter 350 vs jawa 42 fj detailed bike comparison
மேலும்... #royal enfield #bike comparison #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+