எஸ்யூவி காரை விட இந்த பைக்கின் விலை காஸ்ட்லி! அப்படி இதுல என்னதான் இருக்குது?
இந்தியாவில் 2025 சுஸூகி ஜிஎஸ்எக்ஸ்-8 ஆர் பைக் அறிமுகமாகியுள்ளது. இதற்கு ரூ9.25 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக் ஒபிடி 2பி மாசு கட்டு்பாட்டு விதிகளின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு எஸ்யூவி கார் விலையில் இந்த பைக் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் அவ்வளவு விலைக்கு இந்த பைக்கில் என்ன இருக்கிறது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சுஸூகி நிறுவனம் தனது ஜிஎஸ்எக்ஸ் -8ஆர் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இந்த பைக்கில் மாசு கட்டுப்பாடு மற்றும் சிறப்பாஜ பெர்ஃபார்மெனிற்கான அப்டேட் செய்துள்ளது. இதனால் ரைடர்களுக்கு ஸ்மூத்தான ரைடிங் அனுபவம் கிடைக்கும். சிறந்த பெர்ஃபார்மென்ஸை விரும்பும் பைக் விரும்பிகளுக்கு இந்த பைக் ஏற்றதாக இருக்கும்.

இந்த பைக்கில் உள்ள இன்ஜினை பொருத்தவரை 776 சிசி பெரலல் ட்வின் டிஓஎச்சி மற்றும் ஒரு சிலிண்டருக்கு 4 வால்வுடனான இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 270 டிகிரி கிராங்க் சாஃப்ட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் டிராஃபிக்கில் இயக்கும் போதும்சிறப்பான கண்ட்ரோல் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் எக்ஸாஸ்ட் நோட்டும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கின் சுஸூகிநிறுவனத்திற்கு சொந்தமான கிராஸ் பேலன்ஸர் சிஸ்டம் இன்ஜின் அதிர்வுகளை குறைக்க வழங்கப்பட்டுள்ளது. இது ரைடர்களுக்கு சொகுசு மற்றம் நீண்ட தூர பயணத்தின் போது சலிப்பு ஏற்படாமல் இருக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் மார்டனான டிசைன் மொழி வழங்கப்பட்டுள்ளது. மேலும் முன்பக்கம் நீளவாக்கில் பொருத்தப்பட்டள்ளது ஹெக்ஸகோனல் எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விண்ட்ஷீல்டும் ஷார்ப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பைக்கின் ரோடு பிரெஸ்ஸூம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் தனியாக அலுமினியம் லுக்கில் ஹஏண்டில் பார் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக் 3 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மெட்டாலிக் டிரைடன் ப்ளூ, மெட்டாலிக் மேட் ஸ்வார்டு சில்வர், மெட்டாலிக் மேட் பிளாக் நம்பர் 2 ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இது போக இந்த பைக்கில் ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கிறது.

அதன்படி இந்த பைக்கில் சுஸூகி இன்டலிஜென்ட் ரைடு சிஸ்டம் இருக்கிறது. இது பைக்கின் பாதுகாப்பு தன்மையை அதிகரிக்கிறது. இது போக கண்ட்ரோல் மற்றும் அடாப்டபிலிட்டியை அதிகரிக்க சில அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது போக சுஸூகி டிரைவ் மோடு செலக்டர், இன்ஜின் டெலிவரி போர்டு, சுஸூகி டிராக்ஷன் கண்டர்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் பை டைரக்ஷனல் குவிக் ஸ்விஃப்டர் கியர் பாக்ஸ் பெருத்தப்பட்டுள்ளது. இது கிளட்ச் இல்லாமல் இயங்கும் தன்மை கொண்டது. ரைடு பை வயர் சிஸ்டத்துடன் ஸ்மூத்தான ஆக்ஸிலரேஷனை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுஸூகி நிறுவனத்தின் இந்த பைக் காஸ்ட்லியாக இருந்தாலும் இதில் உள்ள அம்சங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. இந்த பைக்கில் உள்ள அம்சங்கள் பல கார்களில் கூட இல்லாத அம்சங்களாக இருக்கின்றன. இதை விலை மிக அதிகமாக இருப்பதால் மிக குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனையாகும். இந்த பைக்கை சாலையில் பார்ப்பதே அரிதான விஷயம் தான்.


Click it and Unblock the Notifications









