ரேட்டை குறைச்சது மட்டுமில்லாம கூடுதல் அழகானதாக மாத்திட்டாங்க.. இந்த பைக்கை வாங்கினீங்க ஊரு கண்ணே உங்க மேலதான்!

உலக புகழ்பெற்ற பிரீமியம் தர பைக் உற்பத்தி நிறுவனங்களில் டிரையம்ப் (Triumph)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனம் இந்தியாவில் பன்முக இரண்டு சக்கர வாகன மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது. அதில் ஒன்றே ஸ்பீடு டி4 (Speed T4) ஆகும். இந்த பைக்கின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு சமீபத்திலேயே அதன் விலையை நிறுவனம் மாற்றியமைத்தது. மிகப் பெரிய அளவில் குறைத்தது என்று சொல்லலாம். ரூ. 2.17 லட்சத்தில் இருந்து 1.99 லட்சம் ரூபாமாகவே விலை குறைக்கப்பட்டது.

இதன் வாயிலாக டிரையம்ப் ஸ்பீடு டி4 பைக் மாடல் மேலும் மலிவு விலைக் கொண்டதாக நாட்டில் மாறியிருக்கின்றது. இந்த பைக்கின் விலையைக் குறைத்த பின்னரும் அதை அழகாக மாற்றி மேலும் ஓர் தரமான நடவடிக்கையை எடுத்துள்ளது டிரையம்ப். சொல்லப்போனால் விலை குறைத்த பின்னரும் அதன் பிரீமியம் தரத்தை தற்போது இரட்டிப்பாக்கி இருக்கின்றனர்.

Triumph speed t4 updated

புதிய வண்ண சேர்ப்பு வேலையையே அவர்கள் இந்த பைக்கில் பார்த்திருக்கின்றனர். இப்போது இந்த பைக் புதிதாக நான்கு வண்ண தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். அனைத்தும் இரட்டை நிறங்களால் அலங்கரிக்கப்பட்டவை ஆகும். அந்தவகையில், முதன்மை நிற தேர்வாக லாவா ரெட் கிளாஸ் / பியர்ல் மெட்டாலிக் ஒயிட் (Lava Red Gloss / Pearl Metallic White) உள்ளது.

இதுமட்டுமின்றி, காஸ்பியன் ப்ளூ / பியர்ல் மெட்டாலிக் ஒயிட் (Caspian Blue / Pearl Metallic White), பாண்டம் பிளாக் / ஸ்டார்ம் கிரே (Phantom Black / Storm Grey) மற்றும் பாண்டம் பிளாக் / பியர்ல் மெட்டாலிக் ஒயிட் (Phantom Black / Pearl Metallic White) ஆகிய வண்ண தேர்வுகளும் இதில் வழங்கப்படுகின்றன.

Triumph speed t4 phantom black

அனைத்து நிற தேர்வுகளும் பார்வையாளர்களைச் சுண்டிழுக்கும் வகையில் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. ஆகையால், இந்த பைக் வாங்குபவர்களை வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சாலையில் சாலையில் போகும்போது தனித்துவமாக தெரிய வேண்டும் என நினைப்பவர்கள் கட்டாயம் இந்த பைக்கை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பைக் நிறத்தால் மட்டுமல்ல ஒற்றை துண்டு இருக்கை, பின் சற்றே தூக்கப்பட்ட நிலையில் இருக்கும் எக்சாஸ்ட், அலாய் வீல், வட்ட வடிவ ஹெட்லைட் மற்றும் பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகளும் அந்த பைக்கிற்கு அதிக அழகு சேர்க்கும் விதமாக உள்ளன.

எனவே நிச்சயம் இந்த விலை குறைப்பு மற்றும் அழகுப்படுத்துதல் காரணமாக புதிய டிரையம்ப் ஸ்பீடு டி4 இந்தியர்களின் கவனத்தைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த பைக்கில் எந்த மாற்றத்தையும் நிறுவனம் செய்யவில்லை. அதே 398.15 சிசி லிக்யூடு கூல்டு டிஓஎச்சி மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 31 பிஎஸ் மற்றும் 36 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதே எஞ்சினே ஸ்பீடு 400 மாடலிலும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால், அதில் இதைவிட சற்று அதிக ஆற்றலை உருவாக்கும். இந்த பைக்கில் இயக்கத்தை சுவாரஷ்யமானதாக மாற்றும் விதமாக டார்க் அசிஸ்ட் கிளட்ச், போஸ் டூயல் சேனல் ஏபிஎஸ், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்களை வளைத்துப் போடும் பணியில் டிரையம்ப் நிறுவனம் தற்போது முழு வீச்சில் களமிறங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்பீடு டி4 பைக்கின் விலை குறைப்பு மற்றும் அதை அழகுப்படுத்திய செயல் அமைந்திருக்கின்றது. இதன் வாயிலாக கூடுதல் வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு வரும் நாட்களில் கிடைப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 18, 2025, 11:35 [IST]
English summary
2025 triumph speed t4 with enhanced styling and reduced price of rs 1 99 lakh
மேலும்... #triumph motorcycles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+