பைக்கை பார்த்து ரொம்ப கம்மி விலைனு நினைச்சுடாதீங்க.. துபாய்ல வேலை செய்றவங்களே இத வாங்க கொஞ்சம் யோசிப்பாங்க!

இந்தியாவில் மிகவும் அதிக விலையில் பைக் ஒன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. துபாயில் பணிபுரிபவர்கள் மட்டுமல்ல பெருத்த செல்வந்தர்களே வாங்க தயங்கக் கூடிய ஓர் விலையிலேயே அந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. அப்படி என்ன பைக் என்று தானே கேக்குறீங்க, டிரையம்ப் (Triumph) நிறுவனத்தின் ஸ்பீடு ட்வின் 1200 (Speed Twin 1200) பைக் மாடல்தான் அது ஆகும். இந்த பைக்கிற்கு உச்சபட்ச விலையாக ரூ. 12.75 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த விலையில் இரண்டு டாடா பஞ்ச் (Tata Punch) கார் மாடல்களையே சொந்தமாக்கிக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. டாடா பஞ்ச் காரு என்னங்க, யூஸ்டு கார் மார்க்கெட்டில் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த பெரிய கார்களையே வாங்கிக் கொள்ள முடியும்.

2025 triumph speed twin 1200 launched

இத்தகைய அதிகபட்ச விலையில் டிரையம்ப் ஸ்பீடு ட்வின் 1200 பைக் விற்பனைக்கு வந்திருப்பது டூ-வீலர் காதலர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இது இந்திய சந்தையில் இரண்டு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ஸ்பீடு ட்வின் 1200 ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்பீடு ட்வின் 1200 ஆர்எஸ் ஆகியவையே அவை ஆகும்.

இது ஓர் புதுப்பிக்கப்பட்ட பைக் மாடல் ஆகும். புதுப்பித்தலின்கீழ் பல்வேறு புதிய அம்சங்களை டிரையம்ப் இந்த பைக்கில் சேர்த்திருக்கின்றது. மிக முக்கியமாக இன்னும் அதிகமான கிளாசிக் லுக்கை வழங்குகின்ற மாதிரியான மாற்றங்களையே இந்த பைக்கில் செய்திருக்கின்றனர். எஞ்சினைப் பொருத்த வரை எந்த மாற்றமும் இந்த பைக்கில் டிரையம்ப் செய்யவில்லை.

இதில் 1,200 சிசி திறன் கொண்ட பாரல்லல் ட்வின், லிக்யூடு கூல்டு மோட்டாரே பயன்படுத்தி இருக்கின்றனர். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 7,750 ஆர்பிஎம்மில் 103.5 பிஎச்பி பவரையும், 4,250 ஆர்பிஎம்மில் 112 என்எம் டார்க் ஆற்றலையும் இது உருவாக்கும். இந்த அதிக பவர்ஃபுல்லான மோட்டாருடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸே வழங்கப்பட்டு இணைக்கப்பட்டு இருக்கின்றது.

மொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் இந்த பைக்கை வாங்கிக் கொள்ள முடியும். வெள்ளை, சிவப்பு மற்றும் சில்வர் ஆகியவையே அவை ஆகும். இந்த பைக்கில் சிறந்த ரைடு அனுபவத்திற்காக பல்வேறு சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மிக முக்கியமாக யுஎஸ்பி சி ரக சார்ஜிங் சாக்கெட், மல்டி ஃபங்க்சன் வசதிக் கொண்ட டிஎஃப்டி திரை டிஜிட்டல் எல்சிடி கிளஸ்டருடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுமட்டுமல்ல, ஏபிஎஸ் கார்னரிங், பன்முக ரைடிங் மோட்கள், டிராக்சன் கன்ட்ரோல், எல்இடி இலுமினேஷன் அம்சம், திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதி போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டும் இல்லைங்க, டிரையம்ப் ஸ்பீடு ட்வின் 1200 பைக்கில் சொகுசான பயண அனுபவத்திற்காக அட்வான்ஸ்டு வசதிகள் நிறைந்த சஸ்பென்ஷன்களே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

43 மிமீ அட்ஜெஸ்ட் செய்யும் வசதி அற்ற மர்ஸோச்சி யுஎஸ்டி ஃபோர்க் முன் பக்கத்திலும், ப்ரீலோடு அட்ஜெஸ்டபிள் ட்வின் ஷாக் அப்சார்பர் பின் பக்க வீலிலும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றுடன் சேர்த்து சிறந்த பிரேக்கிங் சிஸ்டமும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

அந்த வகையில், பைக்கின் முன் பக்க வீலில் இரண்டு 320 மிமீ அளவுள்ள டிஸ்க்கும், பின் பக்கத்தில் சிங்கிள் ரோட்டார் பிரேக்கிங் சிஸ்டமும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இவை அனைத்தும் பைக் ரைடர்களைக் கவரக் கூடிய அம்சங்கள் ஆகும். இதுமாதிரியான பிரீமியம் அம்சங்களை மிக அதிக அளவில் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இந்த பைக்கின் விலை ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த காருக்கு இணையானதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று மிக மிக அதிக விலையில் பைக் விற்பனைக்கு வருவது இது முதல் முறையல்ல. இதைவிட அதிக விலைக் கொண்ட பைக்குகளும் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அந்த வரிசையிலேயே இந்த அப்டேட் செய்யப்பட்ட டிரையம்ப் ஸ்பீடு ட்வின் 1200 பைக் தற்போது இணைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 28, 2025, 0:10 [IST]
English summary
2025 triumph speed twin 1200 launched in india with enhanced features and pricing
மேலும்... #triumph motorcycles #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+