ரூ. 1.35 லட்சம் விலையில் யமஹா எஃப்இசட் பைக் அறிமுகம்.. கண்களை கவரும் நிற தேர்வில் வந்திருக்கு..

இந்திய இளைஞர்களின் பிரியமான பைக் மாடல்களில் ஒன்றாக யமஹா எஃப்இசட் எஸ் எஃப்ஐ (2025 Yamaha FZ-S FI) மாடல் உள்ளது. இதன் 2025 வெர்ஷனே தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. கணிசமான புதுப்பித்தல்களைப் பெற்றே இதனை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது யமஹா நிறுவனம். புதிய வண்ண தேர்வுகளையும் 2025 மாடலில் யமஹா நிறுவனம் சேர்த்திருக்கின்றது. வாடிக்கையாளர்களைக் கவரும் ஓர் முயற்சியாகவே புதிய நிற தேர்வுகள் சேர்ப்பு வேலையை இந்த பைக்கில் யமஹா நிறுவனம் பார்த்திருக்கின்றது.

மேலும், அறிமுகமாக இந்த பைக்கிற்கு ரூ. 1.35 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். முந்தைய வெர்ஷனைக் காட்டிலும் இந்த விலை சற்றே அதிகம் என்பது கவனிக்கத்தகுந்தது. துள்ளியமாகச் சொல்ல வேண்டும் என்றால் ரூ. 3,600 அதிக விலையிலேயே 2025 எஃப்இசட்-எஸ் எஃப்ஐ விற்பனைக்கு வந்திருக்கின்றது.

2025 Yamaha fz-s fi launched at rs 1 35l

தொடர்ந்து, இது விற்பனைக்கு வந்திருக்கின்ற போதிலும் எஃப்இசட்-எஸ் எஃப்ஐ மாடலின் முந்தைய வெர்ஷன்களையும் அப்படியே விற்பனையில் தக்க வைத்திருக்கின்றது, யமஹா நிறுவனம். ஸ்டாக் முழுமையாக விற்று தீரும் வரையில் அது விற்பனைச் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், புதிய ஒன்று அதிக விலையைக் கொண்டிருப்பதாக நினைப்பவர்கள் பழைய வெர்ஷனை சற்றே கம்மி விலையில் வாங்கிக் கொள்ள முடியும்.

இதேபோல், பழைய வெர்ஷனின் பக்கம் வாடிக்கையாளர்களை கவர அவற்றிற்கு சலுகைகளை வரும் நாட்களில் யமஹா நிறுவனம் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது விற்பனைக்கு வந்திருக்கும் எஃப்இசட்-எஸ் எஃப்ஐ மிகப் பெரிய மாற்றமாக பிஎஸ்6 ஓபிடி-2பி (BS6 OBD-2B) மாற்றமே செய்யப்பட்டு இருக்கின்றது.

Yamaha fz-s fi cyber green

இந்த மாற்றத்துடனேயே புதிய நிற தேர்வுகளையும் யமஹா நிறுவனம் சேர்த்திருக்கின்றது. மேட் பிளாக் (Matte Black), ஐஸ் ஃப்ளூவோ வெர்மிலியன் (Ice Fluo Vermillion), மெட்டாலிக் கிரே (Metallic Grey) மற்றும் சைபர் கிரீன் (Cyber Green) ஆகியவையே அவை ஆகும்.

இதைதவிர வேறு எந்த பெரிய மாற்றத்தையும் இந்த பைக்கில் யமஹா நிறுவனம் மேற்கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. அதேநேரத்தில் இதன் ஹைபிரிட் வேரியண்டில் புதிய டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த தேர்வின் விலை ரூ. 1.44 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது.

Yamaha fz-s fi ice fluo vermillion

அதிக பிரீமியம் அம்சங்களை தாங்கிய ஓர் வேரியண்ட் இது என்பதாலேயே இந்த அளவு அதிக விலை இதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. எஞ்சினைப் பொருத்த வரை 2025 யமஹா எஃப்இசட்-எஸ் எஃப்ஐ பைக் மாடலில் 149 சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 12 பிஎச்பி மற்றும் 13.3 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், சிங்கிள் சேனல் ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல், ஒய்-கன்னெக்ட் வசதி கொண்ட டிஜிட்டல் கிளஸ்டர், எல்இடி ஹெட்லைட் என ஏகப்பட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. எனவே புதிய 2025 எஃப்இசட்-எஸ் பைக் அதன் முந்தைய வெர்ஷன்களைப் போலவே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2025 யமஹா எஃப்இசட்-எஸ் எஃப்ஐ பைக்கின் விலை எங்களுக்கு ரொம்ப அதிகம் என நினைப்பவரா நீங்க?.. உங்களுக்காகவே பழைய வெர்ஷனை இன்னமும் யமஹா நிறுவனம் ரூ. 1.17 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. ஆனால், இது எவ்வளவு நாட்கள் வரை விற்பனையில் இருக்கும் என்பது தெரியாத ஒன்றாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 8, 2025, 14:42 [IST]
English summary
2025 yamaha fz s fi launched at rs 1 35 lakh with new colours and key updates
மேலும்... #yamaha #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X