ராயல் என்பீல்டுக்கு சங்கு ஊத போகும் விலை குறைவான பைக்! இவ்ளோ கம்மியான ரேட்ல வரும்னு கொஞ்சம் கூட எதிர்பாக்கல!

இந்திய சந்தையில் அட்வென்ஜர் பைக்குகளுக்கான (Adventure Bikes) டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் தற்போது பைக்குகளில் தொலை தூர பயணங்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. அது மட்டுமல்லாது, ஆஃப்-ரோடு சாகச பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் காட்ட கூடியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இத்தகைய நபர்களின் தேவையை அட்ஜென்ஜர் ரக பைக்குகள் பூர்த்தி செய்கின்றன. இதன் காரணமாகவே இந்தியாவில் தற்போது அட்ஜென்ஜர் ரக பைக்குகளுக்கான டிமாண்ட் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அட்ஜென்வர் ரக பைக்குகளில் யெஸ்டி அட்ஜென்ஜர் (Yezdi Adventure) குறிப்பிடத்தக்கது.

Yezdi Adventure

இதன் அப்டேட் செய்யப்பட்ட 2025 மாடல் பைக் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2025 யெஸ்டி அட்வென்ஜர் பைக்கில், 334 சிசி லிக்யூட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 29.20 பிஹெச்பி பவர் மற்றும் 29.60 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்லிப் மற்றும் அஸிஸ்ட் க்ளட்ச் வசதியும் வழங்கப்பட்டுள்ளன. மற்ற வசதிகளை (Features) பொறுத்தவரையில், எல்இடி லைட்கள், எல்சிடி டிஸ்ப்ளே, அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வைசர், டிராக்ஸன் கண்ட்ரோல் ஆகியவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

2025 Yezdi Adventure

அத்துடன் ரோடு, ரெயின் மற்றும் ஆஃப்-ரோடு என மொத்தம் 3 ஏபிஎஸ் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. 2025 யெஸ்டி அட்வென்ஜர் பைக்கின் முன் பகுதியில் 21 இன்ச் வீலும், பின் பகுதியில் 17 இன்ச் வீலும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்கை பொறுத்தவரையில், முன் பகுதியில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன.

2025 யெஸ்டி அட்வென்ஜர் பைக் மொத்தம் 6 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) கிடைக்கும். இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan) மற்றும் சுஸுகி வி-ஸ்ட்ரோம் எஸ்எக்ஸ் (Suzuki V-Strom SX) ஆகிய பைக்குகள் உடன், 2025 யெஸ்டி அட்வென்ஜர் போட்டியிடும்.

இந்திய சந்தையில் 2025 யெஸ்டி அட்வென்ஜர் பைக்கின் ஆரம்ப விலை 2.15 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். 2025 மாடலின் வருகை, இந்திய சந்தையில் யெஸ்டி அட்வென்ஜர் பைக்கின் விற்பனை எண்ணிக்கையை உயர்த்த உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் ஆரம்ப விலை 2.85 லட்ச ரூபாயாக உள்ளது. மறுபக்கம் சுஸுகி வி-ஸ்ட்ரோம் எஸ்எக்ஸ் பைக்கின் ஆரம்ப விலை 2.20 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான். இந்த வகையில் பார்த்தால், 2025 யெஸ்டி அட்வென்ஜர் பைக்தான் மிகவும் விலை குறைவானது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தொலை தூர பயணங்கள் மற்றும் ஆஃப்-ரோடு சாகச பயணங்களை அடிக்கடி மேற்கொள்வதில் அதிக ஆர்வம் உடைய வாடிக்கையாளர்கள், 2025 யெஸ்டி அட்வென்ஜர் பைக்கை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 4, 2025, 19:45 [IST]
English summary
2025 yezdi adventure launched price features engine
மேலும்... #yezdi #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+