சொந்தமா உருவாக்குற பைக்காக இருந்தாலும் வாரண்டியை அள்ளி கொடுக்க மனசு வேணும்! மஹிந்திரா இதுக்கு பின்னால் இருக்கு

ஜாவா (Jawa), யெஸ்டி (Yezdi), பி.எஸ்.ஏ (BSA) இவை மூன்றும் ஒரு சமயத்தில் மிகுந்த ஆதிக்கம் செலுத்திவந்த பழமையான மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் ஆகும். கிளாசிக் லெஜண்ட்ஸ் (Classic Legends) என்கிற நிறுவனத்தின் கீழ் இவை செயல்படுவது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இந்த கிளாசிக் லெஜண்ட்ஸ் ஆனது மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் கீழ் செயல்படும் நிறுவனம் ஆகும். இவ்வாறு மிக பெரும் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் கீழ் விற்பனை செய்யப்படும் ஜாவா, யெஸ்டி, பிஎஸ்ஏ பைக்ககளுக்கு அட்டகாசமான உத்தரவாத திட்டங்கள் புதியதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மஹிந்திரா நிறுவனத்துக்கு சொந்தமான கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் அதன் ஜாவா, யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ பைக்குகளுக்கு புதிய உரிமையாளர் உத்தரவாத திட்டம் (Ownership Assurance Program - OAP)ஐ அறிமுகம் செய்து உள்ளது. ஜாவா, யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ பைக்குகள் அனைத்தும் நடுத்தர-அளவு ஆற்றல்மிக்க மோட்டார்சைக்கிள்கள் ஆகும்.

4 years standard warranty

கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தின் புதிய உரிமையாளர் உத்தரவாத திட்டத்தின்படி ஜாவா, யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ பைக்குகளுக்கு 8 வருடங்கள் வரையிலான உத்தரவாதம் (Warranty)-ஐ பெறலாம். அதாவது, நிலையான உத்தரவாதமாக பைக்குடன் 4-வருட/ 50 ஆயிரம் கிமீ உத்தரவாதம் கிடைக்கும். 4 வருடம் அல்லது 50 ஆயிரம் கிமீ பயணம், இதில் எது முதலில் நிறைவடைகிறதோ அது வரையில் உத்தரவாதம் இருக்கும்.

இது போதாது என நினைப்பவர்கள் கூடுதல் கட்டணத்தை செலுத்தி உத்தரவாத காலத்தை 8 வருடங்கள் வரையில் நீட்டித்துக் கொள்ள கிளாசிக் லெஜண்ட்ஸின் புதிய உரிமையாளர் உத்தரவாத திட்டம் வழிவகை செய்கிறது. மேலும், இந்த புதிய திட்டத்தின்படி, வாரண்டி காலத்தை 6 ஆண்டுகளாகவும் பெற முடியும்.

அதாவது, 8 வருடங்கள் என்பது மிகவும் அதிகமாகவும், அதற்கான கட்டணம் அதிகமாகவும் உள்ளதென நினைப்பவர்கள் 6 வருடங்களை தேர்வு செய்துக் கொள்ளலாம். இது எல்லாம் விட, புதிய உரிமையாளர் உத்தரவாத திட்டத்தில் பிரத்யேகமான 2-வருட உத்தரவாத திட்டத்தையும் பெறலாம். இதனை ஏன் பிரத்யேகமான திட்டம் என அழைக்கிறோம் என்றால், இதனை எப்போது வேண்டுமானாலும் பெறலாம்.

ஸ்டாண்டர்ட் வாரண்டியான 4 வருடங்கள்/ 50,000கிமீ உத்தரவாதம் முடிந்த பின்புகூட கட்டணத்தை செலுத்தி இந்த 2-வருட உத்தரவாதத்தை பெறலாம். மேலும், இந்த உத்தரவாத ஆப்ஷன்கள் உடன் பயணத்தின்போது அவசர காலத்தில் தேவைப்படும் உதவிகளையும் புதிய உரிமையாளர் உத்தரவாத திட்டத்தின் வாயிலாக பெறலாம். அதாவது, பயணத்தின்போது திடீரென ஏற்படும் பழுதினால் பைக் பாதி வழியில் ஸ்டார்ட் ஆகாமல் நிற்கும்போது அதனை கொண்டு செல்வதற்கான உதவியை பெறலாம்.

ஸ்டாண்டர்ட் வாரண்டி உடன் இந்த ரோடு-சைடு உதவி ஆனது 1 வருடத்திற்கு கிடைக்கும். இதனை தேவைப்பட்டால் 8 வருடங்கள் வரையில் கூட நீட்டித்துக் கொள்ள முடியும். இவை எல்லாவற்றையும் விட கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தின் புதிய உரிமையாளர் உத்தரவாத திட்டத்தில் நம்மை வெகுவாக கவர்ந்திழுப்பது, 5 வருடத்திற்கான விரிவான வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) என்கிற மிக பிரம்மாண்டமான பைக் நிறுவனத்துக்கு போட்டியாக கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் அதன் பைக்குகளை விற்பனை செய்வதால், இவ்வாறான கவர்ச்சிக்கரமான உத்தரவாத திட்டங்கள் அவசியமாகின்றன. இந்த திட்டங்கள் குறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தின் டீலர்ஷிப் ஷோரூமை அணுகவும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 4, 2025, 20:00 [IST]
English summary
4 years standard warranty for jawa yazdi bsa motorcycles
மேலும்... #jawa #jawa motorcycles #yezdi #BSA #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+