இதை தான் எதிர்பார்த்துட்டு இருந்தோம்... குடும்ப குடும்பமாக ஸ்கூட்டர்களை ஓட்டி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க!
ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம், தனது '4680 பாரத் செல்' கொண்ட இருசக்கர வாகனங்களின் சோதனை ஓட்டங்களை இந்தியா முழுவதும் உள்ள அதன் ஷோரூம்களில் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த 4680 பாரத் செல் ஆனது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் உள்நாட்டிலேயே தனது தொழிற்சாலையில் உற்பத்தி செய்வது ஆகும்.
இது அதிக ரேஞ்ச், மேம்பட்ட செயல்திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய AIS-156 திருத்தம் 4 தரநிலைகளின் கீழ், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5.2 kWh திறன் கொண்ட 4680 பாரத் செல் பேட்டரி பேக்குகளுக்கான ARAI சான்றிதழை ஓலா எலக்ட்ரிக் பெற்றுள்ளது.

எஸ்1 புரோ+ (S1 Pro+) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது, ஓலா நிறுவனத்தின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4680 பாரத் செல் பேட்டரி பேக்கைக் கொண்ட முதல் தயாரிப்பாகும். இந்த ஸ்கூட்டரில் 5.2kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படுகிறது. இதுகுறித்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "எங்கள் 4680 பாரத் செல் மூலம் இயங்கும் வாகனங்கள் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன துறையின் ஒரு முக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கின்றன.
இந்த உள்நாட்டு தொழில்நுட்பம் இப்போது எங்கள் முதன்மை ஷோரூம்களில் டெஸ்ட் ரைடுகள் மூலம் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளது" என்றார். எஸ்1 புரோ+ (5.2kWh) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது 13 kW மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இது 0- 40 கிமீ/மணி வேகத்தை வெறும் 2.1 வினாடிகளில் அடைந்து நிகரற்ற செயல்திறனை வழங்குகிறது.

எஸ்1 புரோ+ (5.2kWh) DIY மோடில் 320 கிமீ (IDC) ஈர்க்கக்கூடிய ரேஞ்சை வழங்குகிறது. எஸ்1 புரோ+ ஸ்கூட்டர ஹைப்பர், ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈக்கோ என நான்கு ரைடிங் மோட்களைக் கொண்டுள்ளது. மேலும், பிரிவிலேயே ஒரே ஸ்கூட்டராக ட்யூயல்-சேனல் ஏபிஎஸ், முன் & பின்பக்க டிஸ்க் பிரேக்குகள் மூலம் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பை எஸ்1 புரோ+ (5.2kWh) வழங்குகிறது.
இது மேம்படுத்தப்பட்ட ரைடிங் பொசிஷன் மற்றும் வசதியான இரு வண்ண இருக்கைகள், பாடி கலர் கண்ணாடிகள், புதிய டை-காஸ்ட் அலுமினிய கிராப் ஹேண்டில், ரிம் டீக்கால்கள் மற்றும் பேஷன் ரெட், போர்சலின் ஒயிட், இண்டஸ்ட்ரியல் சில்வர், ஜெட் பிளாக், ஸ்டெல்லார் ப்ளூ, மிட்நைட் ப்ளூ ஆகிய கலர் ஆப்ஷன்களுடன் வருகிறது.

ஓலா எலக்ட்ரிக் தற்போது எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் ரோட்ஸ்டர் எக்ஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்கிறது. இதில், பிரீமியம் தரத்திலான எஸ்1 ஜென் 3 வரிசையில் 5.2kWh மற்றும் 4kWh பேட்டரி ஆப்ஷன்களில் எஸ்1 புரோ+, அத்துடன் 4kWh மற்றும் 3kWh பேட்டரி ஆப்ஷன்களில் எஸ்1 புரோ ஆகியவை அடங்குகின்றன.
இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.1,90,338, ரூ.1,70,338, ரூ.1,44,999 மற்றும் ரூ.1,24,999 ஆகும். ஓலா நிறுவனத்தின் வெகுஜன சந்தை தயாரிப்புகளில் ஜென் 3 எஸ்1 எக்ஸ்+ (4kWh) மற்றும் ஜென் 3 எஸ்1 எக்ஸ் (2kWh, 3kWh மற்றும் 4kWh) ஆகியவை அடங்குகின்றன. இவற்றின் விலைகள் முறையே ரூ.1,19,999, ரூ.84,999, ரூ.98,999 மற்றும் ரூ.1,14,999 ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த பேட்டரி கொண்ட வாகனங்களின் டெஸ்ட் ரைடுகளை ஓலா எலெக்ட்ரிக் துவங்கியிருப்பது அதன் திறனை மற்றவர்கள் தெரிந்துக் கொள்ள உதவும். செயல்திறன், ரேஞ்ச் மற்றும் பாதுகாப்பின் எதிர்காலத்தை இன்று சாலைகளுக்கு கொண்டு வந்திருக்கும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இதன் மூலம் நிலையான இயக்கத்திற்கு மாறுவதற்கான உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









