ரூ.19 ஆயிரம் கொடுத்து வாங்கும் அளவுக்கு இந்த சைக்கிளில் என்ன இருக்கு? லைஃப்-டைம் வாரண்டி உடன் ஃப்ரேம்!

ஆல்பாவெக்டர் (AlphaVector) நிறுவனத்தின் '91 சைக்கிள்ஸ்' (91 Cycles) பிராண்டில் இருந்து ஹைட்ரா எக்ஸ் 29டி (Hydra X 29T) என்கிற பெயரில் புதிய சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. கரடு முரடான பாதையில் அட்வென்ச்சர் பயணங்களுக்கான சைக்கிளாக உருவாக்கப்பட்டுள்ள இதன் விலை ரூ.18,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஹைட்ரா எக்ஸ் 29டி சைக்கிளை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மோட்டார் வாகனங்களுக்கு மத்தியில் சைக்கிள் போன்ற உடல் உழைப்பை வாங்கும் வாகனங்களையும் சமீப காலமாக மக்கள் அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். தினந்தோறும் உடற்பயிற்சிக்காகவே சைக்கிள் பயன்படுத்துவோரும் இருக்கின்றனர். இந்த விஷயத்தில் ஒருபடி மேலே சென்று 91 சைக்கிள்ஸ் நிறுவனம் தினந்தோறும் அட்வென்ச்சர் பயணங்களை மேற்கொள்வதற்கான புதிய சைக்கிளை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

91 cycles launches hydra x

இதனால், புதிய ஹைட்ரா எக்ஸ் 29டி ஆனது சவாலான அட்வென்ச்சர் பயணங்களை மேற்கொள்வோருக்கு ஏற்ற வாகனமாக இருக்கும். அதேநேரம் வழக்கமான சாலைகளிலும் பயன்படுத்துவதற்கு ஏதுவான இந்த சைக்கிள், 18 இன்ச்சில் அதி வலிமைமிக்க ஏரோடைனாமிக் இரும்பு ஃப்ரேம் (Aerodynamic Steel Frame)-இல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, அனைத்து சாலைகளிலும் போதுமான நிலைத்தன்மை மற்றும் ஆயுட்காலத்தை வழங்கக்கூடியதாக ஹைட்ரா எக்ஸ் 29டி விளங்குகிறது.

இந்த சைக்கிளில் வழங்கப்பட்டுள்ள 21-ஸ்பீடு ஷிமானோ கியர் சிஸ்டம் (Shimano gear system) ஆனது மென்மையான கியர் மாற்றத்திற்கு வழிவகுத்து, சைக்கிளை அனைத்து விதமான சாலைகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக விளங்க வைக்கிறது. மேலும், இந்த கியர் சிஸ்டத்தின் மூலம் ஏறுமுகமான பகுதியிலும் எளிதாக ஏறலாம் என 91 சைக்கிள்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சைக்கிளில் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனுக்காக வழங்கப்பட்டுள்ள 91 டஃப் ஷாக்ஸ் சஸ்பென்ஷன் சிஸ்டம் (TUF SHOX Suspension System) ஆனது மென்மையான பயணத்தை வழங்குவதோடு, கரடு முரடான சாலைகளிலும் சவுகரியமாக பயணம் செய்ய அனுமதிக்க கூடியதாக உள்ளது.

29 இன்ச்சில் ஹை-டிராக்‌ஷன் டயர்களை கொண்ட இந்த ஹைட்ரா எக்ஸ் 29டி சைக்கிள் மொத்தம் 3 விதமான அளவுகளில் கிடைக்கிறது. 29டி, 26டி மற்றும் 27.5டி என்பன அந்த 3 அளவுகள் ஆகும். அதேபோல், ரைடிங் ஸ்டைல் மற்றும் தேவையை பொறுத்து மல்டி-ஸ்பீடு அல்லது சிங்கிள்-ஸ்பீடு கட்டமைப்பில் இந்த சைக்கிளை வாங்கலாம்.

புதிய ஹைட்ரா எக்ஸ் 29டி சைக்கிளின் விலை வெறும் ரூ.18,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ஜிஎஸ்டி-யும் அடங்குகிறது. ஃப்ரேமுக்கு முழு ஆயுட்கால உத்தரவாதம் மற்றும் மற்ற பாகங்களுக்கு 6 மாத உத்தரவாதத்துடன் விற்பனை செய்யப்பட உள்ள புதிய ஹைட்ரா எக்ஸ் 29டி சைக்கிளை விருப்பப்படுவோர் நேரடியாக 91 சைக்கிள்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://www.outdoors91.com/ மூலமாக வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மலைப்பிரதேச மற்றும் காட்டு பகுதிகளில் வசிப்போருக்கு 91 சைக்கிள்ஸின் ஹைட்ரா எக்ஸ் 29டி ஆனது ஏற்ற சைக்கிளாகும். அவ்வாறான கரடு முரடான பகுதிகளில் கூட பயன்படுத்த முடியும் எனும்போது சாதாரண சாலைகளிலும் இந்த சைக்கிளை தைரியமாக பயன்படுத்தலாம். இதற்கேற்ப இந்த சைக்கிளின் விலையும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 28, 2025, 22:42 [IST]
English summary
91 cycles launches hydra x 29t 21 speed cycle price features all details here
மேலும்... #bicycle #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+