நாளை முதல் டூவீலர்களுக்கு ABS கட்டாயமா? அரசு அறிவிப்பு என்ன ஆனது?

2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டூவீலர்களுக்கு ஏபிஎஸ் கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வந்த பிறகு இந்த சட்டம் குறித்த விரிவான விபரங்கள் வெளியாகவில்லை. நாளை புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருமா? இது குறித்த உங்கள் கருத்து என்ன? கமெண்டில் சொல்லுங்கள்.

மத்திய அரசு இந்தியாவில் நடக்கும் விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைககளை எடுத்து வருகிறது.இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான விபத்துக்களில் டூவீலர்கள் உள்ளன. இதனால் டூவீலர்களின் பாதுகாப்பு அம்சங்களை அதிகப்படுத்த வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டூவீலர்களில் ஏபிஎஸ் கட்டாயம் என்ற விதிமுறையை அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருந்தது.

ABS Mandatory For Two Wheelers

இதன்படி 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டூவீலர்களில் கட்டாயம் ஏபிஎஸ் பொருத்தப்பட வேண்டும் என மத்திய அரசு சொல்லியிருந்தது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. இது குறித்து வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் பேசிய போது அவர்கள் மேலும் அதிக அவகாசம் கேட்டதாக தெரிகிறது. நமக

இந்நிலையில் இது குறித்த எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது குறித்து விசாரித்த போது அரசு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இதை அமலுக்கு கொண்டு வர இன்னும் கொஞ்சம் கால அவகாசம் வழங்க முடிவு செய்திருப்பதாக தெரியவந்தது. நமக்கு கிடைத்த தகவலின்படி வரும் ஜூலை 1ம் தேதி முதல் ஏபிஎஸ் கட்டாயம் என்ற விதிமுறை அமலுக்கு வரலாம். தற்போது இந்த புதிய ஏபிஎஸ் பிரேக்கிங் சப்ளை இந்தியாவில் நடக்கும் டூவீலர் விற்பனைக்கு நிகராக இல்லை. இதனால் அதை அதிரிக்க வேண்டும்.

ABS Mandatory For Two Wheelers

ஒரே நேரத்தில் அனைத்து டூவீலர்களுக்கும் இதை கட்டாயமாக்கினால் நடைமுறைப்படுத்துவது கடினம். இதனால் உதிரிபாகங்கள் தட்டுப்பாடு மற்றும் தயாரிப்பில் குழப்படி நடக்க வாய்ப்புள்ளது. இது மட்டுமல்லாமல்இது நேரடியாக வாகனங்களின் விலையை அதிகரிக்கும். இது வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பலர் கருதுகின்றனர். இதை ஒவ்வொர கட்டமாக நடைமுறைக்கு கொண்டு வந்தால் இந்த சிக்கல்களை தீர்க்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் விற்பனையாகும் 100 டூவீலர்களில் 84 டூவீலர்கள் குறைந்த விலை கொண்ட வாகனங்கள் தான். 125சிசிக்கு அதிகமான வாகனங்களில் மட்டுமே ஏபிஎஸ் தற்போது பொருத்தப்படுகிறது. அதற்கு குறைவான இன்ஜின் திறன் கொண்டவாகனங்களில் கம்பைன் பிரேக்கிங் சிஸ்டம் தான் பிரபலமாக உள்ளது. இனி அனைத்து வாகனங்களிலும் ஏபிஎஸ் சிஸ்டம் பொருத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

ABS Mandatory For Two Wheelers

ஏபிஎஸ் என்றால் ஆண்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் ஆகும்.இது நவீன பிரேக்கிங் தொழிற்நுட்பம் ஆகும். இது வாகனனத்தின் பிரேக்கிங் திறனை மேம்படுத்தும் மேலும் வாகனம் பிரேக் பிடிக்கும் போது ஸ்கிட்டாவது, டிராக்கிங் நடப்பது எல்லாம் தவிர்க்கப்படும். சாதாரண பிரேக்கை விட மிக துல்லியமாக கணக்கிட்டு பிரேக்கை அப்ளை செய்ய உதவும். இதனால் வாகனம் டிரைவரின் கண்ட்ரோலில் இருந்து தவறினாலும் இந்த பிரேக்கை அழுத்தி கண்ட்ரோலை எடுத்துக்கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டூவீலர்களுக்கு ஏபிஎஸ் கட்டாயம் என்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் தான். இது நடைமுறைக்கு வந்தால் விபத்துகள் வெகுவாக குறையும். இதனால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு டூவீலர் ஓட்டிகளுக்கு கிடைக்கும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 31, 2025, 11:50 [IST]
English summary
Abs mandatory for two wheelers rule update 2026
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X