பைக்கை பார்த்து எடை போடாதீங்க! யார் வேண்டுமானாலும் ஓட்டலாம் - அதிகப்பட்ச விலையே ரூ.4 லட்சம் தான்!

அட்வென்ச்சர் பைக் (Adventure Bike)-களுக்கு இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் விலை குறைவான அட்வென்ச்சர் பைக்காக ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 அறிமுகம் செய்யப்பட்ட பிறகு சாலைகளில் அதிகமாக அட்வென்ச்சர் ரக பைக்குகளை காண முடிகிறது. எந்தவொரு கரடு, முரடான பாதைகளுக்கும் கொண்டு செல்லக்கூடிய பைக்குகளாக அட்வென்ச்சர் பைக்குகள் விளங்குகின்றன. இத்தகைய பைக்குகளில் உள்ள பிரச்சனை என்னவென்றால், இவை பொதுவாகவே சற்று உயரம் அதிகமாக உருவாக்கப்படுகின்றன. இதனால், உயரம் குறைவானவர்கள் அட்வென்ச்சர் பைக்குகளை ஓட்ட முடியாது என்கிற கருத்து நிலவுகிறது. ஆனால், இந்தியாவிலும் உயரம் குறைவான அட்வென்ச்சர் பைக்குகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

சுஸுகி வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ் (Suzuki V-Strom SX): இந்தியாவில் சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle) நிறுவனம் 2022ஆம் ஆண்டில் சரியாக இதே ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்த 250சிசி அட்வென்ச்சர் பைக் இதுவாகும். இந்த லிஸ்ட்டில் நாம் பார்க்க உள்ள பைக்குகளிலேயே தரையில் இருந்து அதிக உயரத்தில் ரைடர் இருக்கையை கொண்ட பைக் இதுவாகும்.

adventure bikes for short people

835மிமீ உயரத்தில் ரைடருக்கான இருக்கையை கொண்டுள்ளது. இதனை 810மிமீ ஆகவும் விருப்பப்படுவோர் குறைத்துக் கொள்ள முடியும். இந்த சுஸுகி அட்வென்ச்சர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.16 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. இந்த பைக்கில் 249சிசி என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 (Hero Xpulse 210): ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான இது, தரையில் இருந்து 830மிமீ உயரத்தில் ஓட்டுனர் இருக்கையை கொண்டுள்ளது. எக்ஸ்பல்ஸ் 210 பைக் தற்சமயம் 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. அவை இரண்டிலும் தரையில் இருந்து ரைடர் இருக்கையின் உயரத்தில் எந்த வித்தியாசமும் இல்லை.

adventure bikes for short people

விரைவில், புதிய 'எக்ஸ்பல்ஸ் 210 புரோ' (Pro) பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கரடு முரடான ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மிகவும் ஏற்றதாக உருவாக்கப்படும் புதிய எக்ஸ்பல்ஸ் 210 புரோ இன்னும் கூடுதல் உயரத்துடன், தரையில் இருந்து ரைடர் இருக்கையை சுமார் 891மிமீ உயரத்தில் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் (KTM 390 Adventure): ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 பைக்கின் போன்று 830மிமீ உயரத்தில் ரைடர் இருக்கையை தரையில் இருந்து கொண்டதாக இந்த கேடிஎம் அட்வென்ச்சர் பைக் விளங்குகிறது. ஆனால், கிரவுண்ட் கிளியரென்ஸ் (Ground Clearance) 390 அட்வென்ச்சரில் அதிகமாகும். அதாவது, இந்த கேடிஎம் பைக்கின் அடிப்பகுதி ஆனது தரையில் இருந்து 237மிமீ உயரத்தில் கொடுக்கப்படுகிறது.

adventure bikes for short people

அதுவே, எக்ஸ்பல்ஸ் 210 பைக்கில் கிரவுண்ட் கிளியரென்ஸ் 220மிமீ மட்டுமே ஆகும். 390 அட்வென்ச்சர் ஆனது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த கேடிஎம் பைக்குகளுள் ஒன்றாகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.3.68 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. முன்பு விற்பனையில் இருந்த கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கில் தரையில் இருந்து ரைடர் இருக்கை ஆனது சற்று உயரமாக 855மிமீ உயரத்தில் வழங்கப்பட்டது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி (Hero Xpulse 200 4V): மேலே கண்ட எக்ஸ்பல்ஸ் 210 பைக்கின் முந்தைய தலைமுறை வெர்சன் தான் இந்த எக்ஸ்பல்ஸ் 200 4வி ஆகும். அதாவது, இந்த பைக்கிற்கு பதிலாகவே எக்ஸ்பல்ஸ் 210 பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. ஆகையால், எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் விற்பனை விரைவில் நிறுத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

adventure bikes for short people

எக்ஸ்பல்ஸ் 210 பைக்கை காட்டிலும், எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கில் 5மிமீ தாழ்வாக தரையில் இருந்து ரைடர் இருக்கை 825மிமீ உயரத்தில் வழங்கப்படுகிறது. இருப்பினும், எக்ஸ்பல்ஸ் 210 பைக்கின் அனைத்து ஆஃப்-ரோடு திறன்களையும் எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக் கொண்டுள்ளது. இந்த பைக்கின் பெயரில் உள்ள '4வி' (4V) என்பது என்ஜின் சிஸ்டத்தில் வழங்கப்படும் 4 வால்வுகளை குறிக்கிறது.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் எக்ஸ் (KTM 390 Adventure X): மேலே கண்ட 390 அட்வென்ச்சர் பைக்கை காட்டிலும் சிறந்த ஆஃப்-ரோடு திறன்கள் உடன் உருவாக்கப்படும் பைக் இதுவாகும். ஆனால், செயல்படுதிறனில் 390 அட்வென்ச்சரை காட்டிலும் பின்தங்கி உள்ளதால் 390 அட்வென்ச்சர் எக்ஸ் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.91 லட்சத்தில் இருந்து தற்சமயம் துவங்குகின்றன.

adventure bikes for short people

தரையில் இருந்து ரைடர் இருக்கையின் உயரமானது 390 அட்வென்ச்சர் உடன் ஒப்பிடுகையில் வெறும் 5மிமீ மட்டுமே தாழ்வானதாக 390 அட்வென்ச்சர் எக்ஸ் உருவாக்கப்படுகிறது. ஆதலால், இந்த இரு கேடிஎம் அட்வென்ச்சர் பைக்குகளில் அமர்ந்து பார்த்தால் எந்த வித்தியாசமும் இருக்காது. 390 அட்வென்ச்சர் எக்ஸ் பைக்கில் முக்கிய அம்சமாக, முன் சக்கரம் 19 இன்ச்சிலும், பின் சக்கரம் 17 இன்ச்சிலும் வழங்கப்படுகின்றன.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 (Royal Enfield Himalayan 450): ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அட்வென்ச்சர் பைக் இதுவாகும். மேலே கண்ட ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் கேடிஎம் நிறுவனங்களை போன்று ராயல் என்ஃபீல்டும் முதலில் ஹிமாலயன் 411 பைக்கை விற்பனை செய்துவந்த நிலையில், அதற்கு மாற்றாக ஹிமாலயன் 450 பைக்கை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடர் இருக்கை தரையில் இருந்து 825மிமீ உயரத்தில் கொடுக்கப்படுகிறது.

adventure bikes for short people

யெஸ்டி அட்வென்ச்சர் (Yezdi Adventure): இந்தியாவிலேயே மிகவும் தாழ்வான ரைடர் இருக்கையை கொண்ட அட்வென்ச்சர் பைக் இதுவாகும். தரையில் இருந்து இந்த யெஸ்டி பைக்கில் ரைடர் இருக்கை ஆனது 815மிமீ உயரத்தில் வழங்கப்படுகிறது. தேவையென்றால், இதை வெறும் 805மிமீ ஆக கூட குறைத்துக் கொள்ளலாம்.

adventure bikes for short people

பைக்கை உருவாக்கும் தொழிற்சாலையிலேயே இதனை செய்துக் கொடுக்கின்றனர். இதனால், உயரம் குறைவான ரைடர்களுக்கு, கூடுதலாக எந்தவொரு ஆக்ஸஸரீகளும் (Accessories) இல்லாமல் பயன்படுத்துவதற்கு இது ஏற்ற பைக் ஆகும். யெஸ்டி அட்வென்ச்சர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.10 லட்சத்தில் இருந்து ரூ.2.20 லட்சம் வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மோசமான சாலைகளுக்கு கொண்டு செல்லக்கூடியதால், அட்வென்ச்சர் பைக்குகளை பொதுவாகவே சற்று உயரமாக உருவாக்குகின்றனர். ஏனெனில், அப்போதுதான் பைக்கின் அடிப்பகுதி அடிப்படாது. அதற்காக உயரமானவர்கள் மட்டும்தான் இந்த பைக்குகளை பயன்படுத்த வேண்டும் என்றில்லை. மேலே கண்ட அட்வென்ச்சர் பைக்குகளில் பெரும்பாலானவை உயரம் குறைவாகவும் கிடைக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 8, 2025, 9:51 [IST]
English summary
Adventure bikes for short people in india under 4 lakh rupees
மேலும்... #auto news #motorcycles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X