இதுதான் அடித்தட்டு மக்களுக்காக பஜாஜ் தயார் செய்திருக்கும் e ஸ்கூட்டரா! விலை குறைவான சேத்தக்-இன் ஸ்பை படம்!

பஜாஜ் நிறுவனம் (Bajaj), இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவின் உச்ச இடத்தை ஏற்கனவே அடைந்துவிட்டது. ஆனால், இது அந்த நிறுவனத்திற்கு போதவில்லை என தெரிகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அதன் சமீபத்திய செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. நிறுவனம் எலெக்ட்ரிக் டூ-வீலர் விற்பனையில் மாபெரும் சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதில் மிக தீவிரமாக உள்ளது. இதன் அடிப்படையில் சேத்தக் (Chetak) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் விலை குறைவான வேரியண்ட் ஒன்றை அது தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சேத்தக்-இன் மற்ற வேரியண்டுகளைக் காட்டிலும் மிக மிக விலை குறைவானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இந்த மாடலின் சோதனை ஓட்ட பணிகளையே பஜாஜ் நிறுவனம் தற்போது நாட்டில் தொடங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சோதனையோட்டம் செய்யப்பட்ட அந்த டூ-வீலரின் படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன.

New bajaj chetak electric scooter spotted

முன்னதாக முதல் இடத்தை ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனமே ஆக்கிரமிப்பு செய்துக் கொண்டிருந்தது. நீண்ட காலமாக இந்த இடத்தை அதுவே ஆக்கிரமிப்புச் செய்து வந்தது. எஸ் 1 (S1) எனும் சீரிஸின்கீழ் ஏகப்பட்ட தேர்வுகளை இந்த நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது, ஓலா எலெக்ட்ரிக்.

ஆனால், பஜாஜ் நிறுவனமோ சேத்தக் எனும் ஒற்றை மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதிலும் விரல் விட்டு என்னும் அளவில் குறைவான ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன. இத்தகைய ஒற்றை மாடலைக் கொண்டே ஓலா எலெக்ட்ரிக்-இன் கண்களில் விரல் விட்டு ஆட்டி கொண்டிருக்கின்றது பஜாஜ்.

New bajaj chetak electric scooter spied

இந்த நிலையிலேயே தன்னுடைய முன்னணி இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் பஜாஜ் நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் மிகவும் விலை குறைவான தேர்வை அது உருவாக்கி வருகின்றது. விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரும் பொருட்டே இந்த மலிவு விலை வேரியண்டின் சோதனை ஓட்ட பணிகளை பஜாஜ் தொடங்கி இருக்கின்றது என்பதை எங்களால் யூகிக்க முடிகின்றது.

மேலும், இதன் அறிமுகத்தை வரும் பண்டிகை நாட்களில் எதிர்பார்க்கலாம். இந்தியர்களின் பிரியமான இ-ஸ்கூட்டர் மாடலாக தற்போது சேத்தக் மாறி இருக்கின்றது. இதற்கு அதன் பிரீமியம் லுக்கே முக்கிய காரணமாக உள்ளது. இதுமட்டுமல்ல பிரீமியம் மற்றும் அட்வான்ஸ்டு அம்சங்களையும் இது தன்னுள் மிக தாராளமாக தாங்கியிருக்கின்றது.

New bajaj chetak electric scooter front

ஆனால், தற்போது நாம் புகைப்படத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வேரியண்ட் மிகப் பெரிய சிறப்பம்ச இழப்பை அடைந்த ஒன்றாக இருக்கும். விலையைக் குறைவாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே சிறப்பம்சங்கள் நீக்க வேலையை பார்த்து இந்த வேரியண்டை பஜாஜ் செய்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

ரூ. 80 ஆயிரம் அல்லது அதற்கும் குறைவான விலையில் இந்த புதிய வேரியண்டை நீங்கள் எதிர்பார்க்கலாம். இதற்கும், தற்போது விற்பனையில் இருக்கும் பஜாஜ் சேத்தக் இ-ஸ்கூட்டர்களுக்கும் இடையில் மிகப் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது என நம்பப்படுகின்றது. அதாவது, லுக்-இல் அனைத்தும் ஒரே மாதிரியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

New bajaj chetak electric scooter rear

Source: Bikedekho அதேவேளையில், ரேஞ்ச் தருவது, திறன் வெளிப்பாடு மற்றும் தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கியிருப்பது உள்ளிட்டவற்றில் மிகப் பெரிய வித்தியாசம் இவற்றிற்குள் தென்பட வாய்ப்புகள் உள்ளன. அத்துடன், இப்போது முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் இந்த புதிய வேரியண்ட் சோதனையோட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு இருப்பதால் அதில் என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன என்பது பற்றிய விபரங்களை துள்ளியமாக எங்களால் விவரிக்க முடியவில்லை.

இருப்பினும், 12 அங்குல அலாய் வீல், வட்ட வடிவ ஹெட்லைட், முட்டை வடிவ ரியர் வியூ கண்ணாடிகள், டிரம் பிரேக் செட்-அப் உள்ளிட்டவற்றை அது தாங்கியிருப்பதை மட்டும் நம்மால் காண முடிகின்றது. இதேபோல், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 50 கிமீ அல்லது 60 கிமீட்டருக்கும் குறைவாக இருக்கும் என எங்களால் யூகிக்க முடிகின்றது. ஆனால், இதையும் உறுதியாக சொல்லிவிட முடியாது.

இந்த வாகனத்தின் அறிமுகத்திற்கு பின்னரே அது என்ன வேகத்தில் பயணிக்கும்? அதன் ரேஞ்ச் திறன் எவ்வளவு? மற்றும் விலை எவ்வளவு? என்பது அனைத்து முக்கிய விபரங்களும் தெரிய வரும். இன்றைய நிலவரப்படி பஜாஜ் சேத்தக் மொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

சேத்தக் 3501 (Chetak 3501), சேத்தக் 3502 (Chetak 3502) மற்றும் சேத்தக் ப்ளூ 2903 (Chetak 2903) ஆகிய மூன்று விதமான தேர்வுகளில் பஜாஜ் சேத்தக் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் விலை அதிகமான தேர்வாக சேத்தக் 3501 உள்ளது. இதற்கு ரூ. 1.38 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இதைத்தொடர்ந்து, சேத்தக் 3502 உள்ளது. இதற்கு ரூ. 1.30 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடைசியாக இருப்பது ப்ளூ 2903 மாடல். இதற்கு ரூ. 1.04 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் மதிப்பு மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது.

சேத்தக் 35 சீரிஸ்-இல் 3.5 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கும், சேத்தக் 29 சீரிஸில் 2.9 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. முதல் பேட்டரி பேக்கில் ஓர் முழு சார்ஜில் 150க்கும் அதிகமான கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இரண்டாவதாக இருக்கும் சிறிய பேட்டரி பேக்கில் ஓர் முழு சார்ஜில் 123 கிமீ தூரம் வரை மட்டுமே பயணிக்க முடியும். இத்துடன் டெக்-பேக் எனும் அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதியையும் ஆப்ஷனலாக பஜாஜ் வழங்குகின்றது. இதன் வாயிலாக நேவிகேஷன், மியூசிக் கன்ட்ரோல், ஆவணங்களைச் சேகரித்து வைக்கும் வசதி உள்ளிட்டவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.

Take a Poll

அத்துடன், செல்போனுக்கு வரும் அழைப்பை நிர்வாகிக்கும் வசதியையும் அனுபவித்துக் கொள்ள முடியும். இதுதவிர, ரிமோட் இம்மொபிலைசேஷன், ஜியோ ஃபென்சிங் மற்றும் திருட்டை தவிர்க்கும் வசதி உள்ளிட்டவற்றையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான அம்சங்கள் எதையும் புதிய விலை குறைவான வேரியண்ட் வழங்காது என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த புதிய வேரியண்ட்-தான் ஏழை மற்றும் அடிதட்டு மக்களுக்காக பஜாஜ் தயாரித்திருக்கும் இ-வாகனம் என நம்பப்படுகின்றது. ஆனால், இது விற்பனைக்கு வந்த பின்னரே அது அடித்தட்டு மக்களுக்கான வாகனமா அல்லது வசதி படைத்தவர்களுக்கான வாகனமா என்பது தெரிய வரும்.

FAQs
விலை குறைவான பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எப்போது விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்?

இப்போதே சோதனை ஓட்ட பணிகள் நாட்டில் தொடங்கி இருக்கின்றன. இந்த பணியில் அது வெற்றி காணும்பட்சத்தில் அடுத்தது அது விற்பனைக்கு வருவதுதான். அந்தவகையில், வருகின்ற தீபாவளி பண்டிகை அல்லது அதற்குள் இதனை விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

விலை எவ்வளவு எதிர்பார்க்கலாம்?

ரூ. 80 ஆயிரத்திற்கு இதை எதிர்பார்க்கலாம். ஏற்கனவே ரூ. 1.04 லட்சத்திற்கு ஓர் தேர்வு இருப்பதால் இதைவிட குறைவான விலையிலேயே அது விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளன.

ஏன் பிரீமியம் அம்சங்களை இந்த தேர்வில் இருந்து நீக்கி இருக்கின்றனர்?

விலை குறைவாக இது விற்பனைக்கு வர வேண்டும் என்றால், சில அம்சங்களை அது இழக்க வேண்டும் என்பது கட்டாயமாகி உள்ளது. எனவேதான் அட்வான்ஸ்டு அம்சங்களை இழந்த வேரியண்டாக இது விற்பனைக்கு வர இருக்கின்றது.

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Friday, March 14, 2025, 17:55 [IST]
English summary
Affordable bajaj chetak electric scooter spotted during testing phase
மேலும்... #bajaj auto #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X