பைக் விற்பனைக்கு உலை வைப்பதற்கென்றே எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய சாதனை! இனி எல்லாரும் இதைதான் வாங்க போறாங்க
ஆம்பியர் (Ampere), இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று. இந்த நிறுவனத்தில் இருந்து புதியதாக மேக்னஸ் நியோ (Magnus Neo) என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த நிலையில், ஆம்பியர் மேக்னஸ் நியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டு உள்ளது. அதனை பற்றி தான் இந்த தொகுப்பில் விரிவாக பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்துவதில் உள்ள ஒரேயொரு குறை என்னவென்றால், அவற்றை நீண்ட தொலைவிற்கு பயன்படுத்த முடியாது என்பதாகும். பொதுவாகவே, ஸ்கூட்டர்களை தொலைத்தூர பயணங்களுக்கு பயன்படுத்துவதில்லை. ஏனெனில், ஸ்கூட்டர்களின் என்ஜின் குறைந்த சிசி என்ஜினை கொண்டிருப்பதாலும், ஸ்கூட்டர்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்படுவதினாலும் ஆகும்.

நீண்ட நேரத்திற்கு முழு வேகத்தில் இயங்கும்போது ஸ்கூட்டரின் என்ஜின் & கியர்பாக்ஸ் பழுதடைவதற்கு வாய்ப்புள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் தொலைத்தூர பயணம் இன்னும் சவாலானதாக இருக்கிறது. ஏனெனில், இந்தியா முழுவதும் இன்னும் சார்ஜிங் வசதிகள் பரவலாக கொண்டுவரப்படாததால், எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்வது சவாலாக உள்ளது.
ஆனால், அது அப்படியெல்லாம் இல்லை... எங்களது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தொலைத்தூர பயணங்களுக்கும் தாராளமாக கொண்டு செல்லலாம் என்பதை தெரிவிக்கும் வகையில், ஆம்பியர் நிறுவனம் அதன் மேக்னஸ் நியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மிக நீண்ட தொலைவிற்கு இயக்கி சாதனைப்படுத்துள்ளது. எவ்வளவு தொலைவு என்றால், சுமார் 2,300கிமீ ஆகும்.
ஆம்பியர் நிறுவனத்தை பற்றி முதலில் பார்த்துவிடுவோம். பருத்தி உற்பத்தியில் மிக நீண்ட வருடங்களாக ஈடுப்பட்டுவரும் க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனம், க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி (Greaves Electric Mobility) ஆகும். இந்த க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டியின் கீழ் பல்வேறு இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், ஆம்பியர் ஆகும்.

ஆம்பியர் நிறுவனத்தில் இருந்து மிக சமீபத்தில்தான் மேக்னஸ் நியோ என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆம்பியர் மேக்னஸ் நியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெங்களூரில் இருந்து டெல்லி வரையில் சுமார் 2,300கிமீ தொலைவிற்கு இயக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்தம் 8 நாட்கள் தேவைப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டியின் தலைமையகத்தில் இருந்து டெல்லியில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) கண்காட்சி நடைபெறும் பாரத் மண்டப பகுதி வரையில் மேக்னஸ் நியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி சென்றுள்ளனர். இந்திய சாதனைகள் புத்தகத்தில், நகர்புறத்திற்குள் ஓட்டக்கூடிய ஃபேமலி ஸ்கூட்டரை நீண்ட தொலைவிற்கு இயக்கியதற்காக இந்த சாதனை இடம்பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் தொலைத்தூர பயணங்களுக்கு பயன்படுத்தலாம் என்பது மட்டுமின்றி, இந்த சாதனை ஆனது ஆம்பியர் மேக்னஸ் நியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் செயல்திறனையும் வெளிக்காட்டுவதாக உள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலையும் ரூ.79,999 என்கிற அளவில் குறைவாக உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








