இதுதான்யா ஏழைகளுக்கான இ-ஸ்கூட்டர்.. இவ்ளோ கம்மி விலையா! ஸ்மார்ட்ஃபோன் வாங்குற மாதிரி வாங்க போறாங்க!

இதுதான்யா ஏழைகளுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) என சொல்லும் அளவிற்கு மிகவும் குறைவான விலையில் ஓர் இ-ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ரியோ 80 (Reo 80), இதுவே புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் அந்த மலிவு விலை மின்சார ஸ்கூட்டர் மாடல் ஆகும். புகழ்பெற்ற எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ஆம்பியர் (Ampere) நிறுவனமே இந்த வாகனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அனைவருக்கும் மின்சார வாகனம் சென்று சேர வேண்டும் என்கிற நோக்கிலேயே இதனை அது தயார் செய்துள்ளது.

இதன் அடிப்படையிலேயே குறைவான விலையும் அதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. ரூ. 59,900 என்கிற விலையே ரியோ 80-க்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது ஓர் ஸ்மார்ட்டான, செலவை குறைவாக வழங்கக் கூடிய மற்றும் பாதுகாப்பான ஓர் இ-ஸ்கூட்டர் என நிறுவனம் குறிப்பிட்டு இருக்கின்றது.

Ampere introduces reo 80 electric scooter

இதேபோல், தினசரி பயன்பாட்டிற்கு உகந்த ஓர் வாகனமாகவும் இதை தாங்கள் தயாரித்து இருப்பதாக அது கூறியிருக்கின்றது. இதுமட்டுமல்ல சிறப்பம்சங்களையும் இதில் வாரி வழங்கி இருக்கின்றது. குறிப்பாக, வண்ண எல்சிடி கிளஸ்டர், பாதுகாப்பு திறன்மிக்க எல்எஃப்பி (LFP) பேட்டரி பேக் உள்ளிட்டவற்றை இதில் ஆம்பியர் வழங்கி இருக்கின்றது.

இதேபோல், முன் பக்கத்தில் டிஸ்க் பிரேக், சாவியே இல்லாமல் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் வசதி மற்றும் ஸ்டைலிஷான அலாய் வீல் உள்ளிட்டவற்றை இது தன்னுள் தாங்கி இருக்கின்றது. இதுமட்டுமல்ல, இந்த இ-ஸ்கூட்டரை பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

Ampere reo 80 electric scooter details

தொடர்ந்து, இந்த வாகனத்தை ஓட்ட டிரைவிங் லைசென்ஸும் தேவையில்லை. ஏனெனில் இது ஓர் குறைந்த வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட இ-ஸ்கூட்டர் ஆகும். இதனால்தான் இதை பயன்படுத்த பதிவோ அல்லது லைசென்ஸோ தேவைப்படாது. மணிக்கு 25 கிமீ வேகத்தில் இயங்கும் திறன் கொண்டதே ரியோ 80 ஆகும்.

இதில் ஓர் முழு சார்ஜில் 80 கிமீ ரேஞ்சை வழங்கும். இதன் டெலிவரி பணிகள் இந்த மாதமே தொடங்க இருக்கின்றது. ஆனால், துள்ளியமான நாள் பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. இது ஓர் குறைந்த வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட இ-ஸ்கூட்டர் என்பதால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களாலும் இதை இயக்கிக் கொள்ள முடியும் என தெரிகின்றது.

Ampere reo 80 electric scooter other color option

இவர்கள் மட்டுமல்ல வயதானவர்கள் மற்றும் பெண்களாலும் இதை சுலபமாக இயக்கிக் கொள்ள முடியும். ரியோ 80யை போலவே ரியோ எல்ஐ பிளஸ் என்கிற இன்னொரு வேரியண்டிலும் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும். இரண்டிற்கும் இடையே அலங்கரிப்பில் மட்டுமே வித்தியாசம் தென்படுகின்றது. இதேபோல் பேட்டரி பேக்கும் மாறுபட்டு காணப்படுகின்றது. இதில் லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஓர் முழு சார்ஜில் ரியோ எல்ஐ பிளஸ் தேர்வு 70 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்சை தரும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே மிகவும் மலிவான விலைக் கொண்ட ரியோ 80 மற்றும் ரியோ எல்ஐ பிளஸ் இ-ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு அடித்தட்டு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. குறிப்பாக, ஸ்மார்ட்ஃபோன் வாங்குற மாதிரி எல்லாரும் இந்த ஸ்கூட்டரை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான புக்கிங் பணிகள் இன்று முதல் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 9, 2025, 13:30 [IST]
English summary
Ampere reo 80 e scooter launched at 59900 promoting affordable electric mobility across india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X