வித்தியாசமா தெரிய வேண்டும் என்பதற்காக வித்தியாசமான பெயரை பைக்கிற்கு வைத்த நிறுவனம்.. வாயிலேயே நுழையல..
பிரபல மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஆம்பியர் (Ampere), நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) வாயிலாக புதுமுக கான்செப்ட் பைக் (Concept Bike) மாடலை காட்சிப்படுத்தியது. இதற்கே சற்று விநோதமான பெயரை ஆம்பியர் நிறுவனம் வைத்து இருக்கின்றது. இது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. ஸைபர் (Xyber) எனும் பெயரையே அது வைத்திருக்கின்றது. ஸைபர் என்ற உடன் பூஜ்ஜியம் என நினைத்துக் கொள்ள வேண்டாம்.
தனித்துவமான தோற்றம் கொண்ட ஓர் எலெக்ட்ரிக் பைக் மாடலே இதுவாகும். பைக்கின் முன் பக்கமாக இருக்கட்டும், பக்கவாட்டு பகுதி தோற்றமாக இருக்கட்டும் மற்றும் பின் பக்கமாக இருக்கட்டும் அனைத்தும் முற்றிலும் மாறுபட்ட லுக்கையே அது கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இதற்கு போலியான ஃப்யூவல் டேங்க் அமைப்பு வழங்கப்பட்டு இருக்கின்றது.

அது மிகவும் கட்டுமஸ்தான தோற்றம் கொண்டதாக இருக்கின்றது. கரங்களால் ஒருவரை கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதைப் போல அது காட்சியளிக்கின்றது. மேலும், தனி தனியாக இருக்கக் கூடிய இருக்கைகள், கூர்மையான அமைப்பைக் கொண்ட எல்இடி ஹெட்லைட், உயரமான ஹேண்டில் பார், வீடியோ கேம் கருவியைப் போன்ற திரை உள்ளிட்டவற்றையும் இந்த பைக் தாங்கி இருக்கின்றது.
ஓர் முழு சார்ஜில் ஆம்பியர் ஸைபர் 200 கிமீ தூரம் வரை பயணிக்கும் என தெரிவித்திருக்கின்றது. இது விற்பனைக்கு வரும்போது இதைவிட அதிகம் ரேஞ்ச் தரக் கூடியதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீக்கிரமே இந்த பைக் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், துள்ளியமான நாள் பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.

இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் இது விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ரிவோல்ட் போன்ற முன்னணி பிராண்டுகளின் மின்சார பைக்குகளுக்கு போட்டியாக அமையும். குறிப்பாக, அதீத ஆற்றலை வெளியேற்றும் திறன் எலெக்ட்ரிக் பைக்காகவே இது இருக்கப்போகின்றது.
10 kW திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 100 கிமீ ஆகும். இத்துடன், சிறந்த இயக்க அனுபவத்திற்காக ஆம்பியர் ஸைபர் எலெக்ட்ரிக் பைக்கில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன், சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இந்த பைக்கில் ஏபிஎஸ் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருப்பது டிஎஃப்டி (TFT) வகை திரை ஆகும். இதன் வாயிலாக பல்வேறு முக்கிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
நேவிகேஷன், ஸ்பீடோ மீட்டர், ரேஞ்ச் திறன், ரைடு மோடு உள்ளிட்ட முக்கிய தகவல்களை இந்த திரை வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும். இதுபோன்று பலதரப்பட்ட சிறப்பம்சங்களைத் தாங்கிய ஓர் பைக்கையே பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 வாயிலாக ஆம்பியர் காட்சிப்படுத்தி இருக்கின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆம்பியர் நிறுவனம் இந்த பைக்கை இப்போது கான்செப்ட் மாடலாக மட்டுமே காட்சிப்படுத்தி இருக்கின்றது. சந்தையில் இந்த பைக் வித்தியாசமாக தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த வித்தியாசமான பெயரை ஆம்பியர் நிறுவனம் வைத்திருக்கின்றது. விரைவில் இதன் உற்பத்தி வெர்ஷனையும் இந்தியாவில் வெளியீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் இந்தியாவில் பெட்ரோல் டூ-வீலர்களுக்கும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








