ஆப்பிள் கம்பெனி மட்டும் இந்த செய்தியை பார்த்திட கூடாது! இன்று அறிமுகமாகும் ஐபோனை விட கம்மி விலையிலான பைக்குகள்

ஐபோன் 17 (iPhone 17) மொபைல் போன்களை பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆப்பிள் (Apple) நிறுவனம் அறிமுகம் செய்கிறது. ஐபோன் 17, ஐபோன் 17 புரோ (Pro), ஐபோன் 17 புரோ மேக்ஸ் (Pro Max) என மூன்று ஐபோன் 17 மொபைல் போன்கள் வெவ்வேறு விதமான ஸ்டோரேஜ் (Storage) ஆப்ஷன்களில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

இது இல்லாமல், ஐபோன் ஏர் (iPhone Air) என்கிற இதுவரையில் உருவாக்கப்பட்டதிலேயே மெல்லியதான ஐபோனையும் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவருகிறது. ஐபோன் 17 மற்றும் ஐபோன் ஏர் மொபைல் போன்கள் உடன் சேர்த்து சில கைக்கடிகாரங்களுக்கும் இன்று (செப்.12) மாலை 5.30 மணியளவில் ப்ரீ-புக்கிங்குகளை (Pre-Bookings) இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் துவங்க உள்ளது.

apple iphone 17 pro max

ஆப்பிள் ஐபோன்களிலேயே தற்போதைய நிலவரப்படி மிகவும் விலையுயர்ந்ததாக ஐபோன் 17 புரோ மேக்ஸ் விற்பனை செய்யப்பட உள்ளது. அதற்கேற்ப 6.9-இன்ச் LTPO சூப்பர் ரெடினா XDR OLED திரை உடன் விற்பனைக்கு வரும் ஐபோன் 17 புரோ மேக்ஸ் போனை காஸ்மிக் ஆரஞ்சு, அடர் நீலம் மற்றும் சில்வர் நிறங்களில் வாங்கலாம். விலையுயர்ந்த புதிய ஐபோன் 17 புரோ மேக்ஸ் போனை வாங்கும் அதே விலையில் சிறந்த மோட்டார்சைக்கிள்களை வாங்கலாம்.

ஐபோன் 17 புரோ மேக்ஸ் மொபைல் போனின் விலை 256ஜிபி ஸ்டோரேஜ் (Storage) வசதியுடன் ரூ.1,49,900 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஐபோன் 17 புரோ மேக்ஸ் மொபைல் போனின் குறைந்தப்பட்ச விலை இதுவாகும். அதிகப்பட்சமாக, 2 டிபி ஸ்டோரேஜ் உடன் சுமார் ரூ.2,29,900 விலையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தொகையை விடக் குறைந்த விலையில் அல்லது அதே விலையில் சந்தையில் பல சிறந்த பைக்குகள் உள்ளன.

bikes which equally priced as apple iphone 17 pro max

பஜாஜ் பல்சர் என்160 (Bajaj Pulsar N160): இதன் டாப் வேரியண்ட் ரூ.1,30,500 விலையில் கிடைக்கிறது (எக்ஸ்-ஷோரூம், டெல்லி). இந்த மோட்டார்சைக்கிள், 164.82சிசி திறன் கொண்ட ஆயில்-கூல்டு என்ஜின் உடன் வருகிறது. இது 15.7 பிஎச்பி பவரையும், 14.65 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. அன்றாடப் பயன்பாட்டிற்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

bikes which equally priced as apple iphone 17 pro max

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி (TVS Apache RTR160 4V): இது ஒரு பிரபலமான அப்பாச்சி பைக் ஆகும். இதன் டாப்-எண்ட் வேரியண்ட் ரூ.1,32,000 விலையில் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) கிடைக்கிறது. இது 159.7சிசி சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு என்ஜினைக் கொண்டுள்ளது. 17.3 பிஎச்பி பவரையும், 14.73 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யக்கூடிய இந்த என்ஜின் உடன் உருவாக்கப்படும் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக்கின் ஸ்போர்ட்டியான தோற்றம் இளைஞர்களை ஈர்க்கிறது.

bikes which equally priced as apple iphone 17 pro max

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350): ராயல் என்பீல்டு நிறுவனத்தில் இருந்து கடந்த பல வருடங்களாகவே மக்கள் அதிகம் பேர் வாங்கும் மோட்டார்சைக்கிளாக கிளாசிக் 350 உள்ளது. இந்த பைக்கில் 349சிசி ஒற்றை சிலிண்டர், லிக்யூட் கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இது 20.2 பிஎச்பி குதிரைத்திறன் மற்றும் 27 என்.எம் டார்க் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.97 லட்சத்தில் தொடங்கி, ரூ.2.35 லட்சம் வரை செல்கிறது.

bikes which equally priced as apple iphone 17 pro max

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் (Hero Xtreme 160R): இந்த ஹீரோ மோட்டார்சைக்கிள் ரூ.1,30,000 விலையில் கிடைக்கிறது (எக்ஸ்-ஷோரூம், டெல்லி). இதில் 163 சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் உள்ளது. இது 15 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. சிறந்த மைலேஜுடன் தினசரி பயணங்களுக்கு இந்த பைக் உகந்தது.

bikes which equally priced as apple iphone 17 pro max

யமஹா எஃப்இசட்-எஃப்ஐ வி3 (Yamaha FZ-Fi V3): இந்த யமஹா மோட்டார்சைக்கிள் ரூ.1,16,000 விலையில் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) கிடைக்கிறது. இது 149சிசி ஏர்-கூல்டு என்ஜினைக் கொண்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 12.2 பிஎச்பி பவரையும், 13.3 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற இந்த மோட்டார்சைக்கிள், நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்றது.

bikes which equally priced as apple iphone 17 pro max

யமஹா ஆர்15 வி4 (Yamaha R15 V4): இந்தியாவின் பிரபலமான விலை குறைவான ஸ்போர்ட்ஸ் பைக்காக நீண்ட காலமாக ஆர்15 அறியப்படுகிறது. தற்சமயம் விற்பனையில் இருக்கும் தற்போதைய தலைமுறை ஆர்15 பைக்கில் செய்யப்பட்டுள்ள மேம்பாடுகள், அதனை மேலும் நடைமுறைக்கு உகந்ததாகவும், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டதாகவும் ஆக்கியுள்ளன. ஜிஎஸ்டி திருத்தத்திற்குப் பிறகு, யமஹா ஆர்15 பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.1.74 லட்சமாக உள்ளது.

bikes which equally priced as apple iphone 17 pro max

சுஸுகி ஜிக்ஸர் 150 (Suzuki Gixxer): இந்தியாவில் பெரிய அளவில் பிரபலமில்லாத இந்த ஜப்பானிய-ஸ்டைல் சுஸுகி பைக்கின் டாப்-எண்ட் வேரியண்ட் ரூ.1,41,000 விலையில் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) கிடைக்கிறது. இது 155சிசி ஏர்-கூல்டு என்ஜினுடன் வருகிறது. இந்த என்ஜின் 13.4 பிஎச்பி பவரையும், 13.8 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் இந்த மோட்டார்சைக்கிள்கள் அனைத்தும் ஐபோன் 17 புரோ மேக்ஸ் போனை விட குறைந்த விலையில் சிறந்த பயண அனுபவத்தை வழங்குகின்றன. ஐபோன் 17 மொபைல் போனை வாங்குவதற்கு பதிலாக இந்த பைக்குகளுள் ஒன்றை வாங்குங்கள் என சொல்லவில்லை. இருப்பதிலேயே விலையுயர்ந்த ஐபோன் எந்த அளவிற்கு விலையுயர்ந்ததாக உள்ளது என்பதையும், அதன் விலையில் எந்த அளவிற்கு பவர்ஃபுல்லான பைக்குகளை வாங்கலாம் என்பதை பற்றியும் தான் இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம்.

More from DriveSpark

Article Published On: Friday, September 12, 2025, 15:25 [IST]
English summary
Apple iphone 17 pro max costs more than some famous indian premium bikes
மேலும்... #iphone #bikes #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X