இந்த விலையில் ஒரு குட்டி காரையே வாங்கிடலாமே! பிரபல நடிகர் அறிமுகம் செய்து வைத்த பைக்

ஏப்ரிலியா (Aprilia), இத்தாலி நாட்டை சேர்ந்த பிரபலமான மோட்டார்சைக்கிள் நிறுவனங்களுள் ஒன்று. இந்தியாவிலும் இந்த நிறுவனத்தின் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், இந்திய சந்தையில் ஏப்ரிலியா நிறுவனத்தில் இருந்து புதியதாக 'டூனோ 457' (Tuono 457) என்கிற பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஏப்ரிலியா பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

இத்தாலிய நிறுவனமான ஏப்ரிலியாவில் இருந்து விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் நம் இந்திய மக்களால் சற்று விலையுயர்ந்தவை ஆக பார்க்கப்படுகின்றன. அந்த அளவிற்கு ஏப்ரிலியாவின் தயாரிப்புகள் தரமானவை ஆக உருவாக்கப்படுகின்றன. ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டூனோ 457 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.3.95 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

aprilia launches tuono 457 bike

ஏப்ரிலியா நிறுவனத்தின் புதிய நேக்டு ரக மோட்டார்சைக்கிளான டூனோ 457 -ஐ பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாம் (Bollywood Actor John Abraham) விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளார். இந்தியாவில் ஏப்ரிலியா நிறுவனத்தின் பிராண்ட் தூதர் நடிகர் ஜான் ஆப்ரஹாம் ஆவார்.

ஏப்ரிலியா நிறுவனத்தில் இருந்து 457சிசி என்ஜின் உடன் ஏற்கனவே ஆர்.எஸ்457 பைக் விற்பனை செய்யப்படுகிறது. அதனுடன் ஒப்பிடுகையில், புதிய டூனோ 457 பைக்கின் விலை ரூ.25,000 குறைவாகும். இந்த புதிய ஏப்ரிலியா பைக்கிற்கு இந்தியாவில் விற்பனையில் போட்டியளிக்கும் விதமாக கேடிஎம் 390 ட்யூக் மற்றும் யமஹா எம்டி-03 பைக்குகள் ஏற்கனவே விற்பனையில் உள்ளன.

aprilia launches tuono 457 bike

தோற்றத்தை பொறுத்தவரையில், வண்டு போன்றதான முகப்பு பகுதியின் மத்தியில் எல்இடி ஹெட்லைட்டையும், அதற்கு இரு புறங்களிலும் எல்இடி டிஆர்எல்-களையும் புதிய டூனோ 457 பைக் கொண்டுள்ளது. ஒரே துண்டாக ஹேண்டில்பாரை கொண்ட இந்த பைக்கில் பருத்த வடிவில் பெட்ரோல் டேங்க், அதற்கு இரு புறமும் பைக் கீழே விழுந்தால் சேதாரம் ஆகாமல் இருக்க தடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பைக்கின் பின்பக்கத்தில் எல்இடி விளக்கு வழங்கப்பட்டுள்ளது. எக்ஸாஸ்ட் குழாய் பைக்கிற்கு அடியில் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய டூனோ 457 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள லிக்யுடு-கூல்டு இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 46.9 பிஎச்பி மற்றும் 43.5 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

aprilia launches tuono 457 bike

என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய ஏப்ரிலியா பைக்கில் அதிக எண்ணிக்கையில் ரைடிங் மோட்கள், டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதி உடன் வண்ண நிறங்களில் டிஸ்பிளே உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 41மிமீ யுஎஸ்டி ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.3.95 லட்சம் என்பது புதிய ஏப்ரிலியா டூனோ 457 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் 1 லட்சம் வரையில் கூட அதிகமாக வரலாம். இவ்வளவு விலை கொடுத்து பைக் வாங்குவதற்கும் நம் நாட்டில் கஸ்டமர்கள் இருக்க தான் செய்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Monday, February 17, 2025, 23:59 [IST]
English summary
Aprilia launches tuono 457 in india price features all details here
மேலும்... #aprilia #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X