தெருக்கு ஒருத்தராவது இந்த வண்டிய வாங்கிடுவாங்க போல! இவ்வளவு சூப்பரா இருந்தா வாங்க தானே தோனும்!
அப்ரிலியா நிறுவனம் தனது எஸ்ஆரு்175 ஸ்கூட்டரை இந்திய மார்கெட்டில் விற்பவனவை செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் எஸ்ஆர் 160 என்ற ஸ்கூட்டருக்கு மாற்றமாக அறிமுகமாகியள்ளது. இதில் பிரபலமான ஆர்எஸ் 547 பைக்கில் உள்ள பல அம்சங்கள் இன்ஸ்பயர் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
அப்ரிலியா நிறுவனம் இந்தியாவில் தரமான டூவீலர்களை தயாரித்து விற்பனை செயஅது வரும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் ஏற்கனவே எஸ்ஆர்160 என்ற பெயரில் ஒரு ஸ்கூட்டரை விற்பனை செய்து வந்த நிலையில் அதற்கு மாற்றாக தற்போது எஸ் ஆர் 175 என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியள்ளது. இந்த ஸ்கூட்டர்கள் ஏற்கனவே டீலர்ஷிப்களுக்க வந்துவிட்டன.

இந்த அப்ரிலியா எஸ்ஆர் 175 ஸ்கூட்டரில் 174.7 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 3 வால்வு செட்டப் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 12.9 எச்பி பவரையும், 14.14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதற்க முன்னர் இருந்த எஸ்ஆர் 160 ஸ்கூட்டர் 11.27 எச்பி பவரையும் 13.44 என்எம் டார்க் திறனையும் மட்டுமே வெளியிட்டது. அதை ஒப்பிடும் போது எஸ்ஆர் 175 ஸ்கூட்டர் அதிக பவர் மற்றும் அதிக டார்க் திறன் கொண்ட ஸ்கூட்டராக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த எஸ்ஆர்175 ஸ்கூட்டரில் முக்கியமாக கலர் டிஎஃப்டி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளுது. இது ஆர்எஸ் 457 மற்றும் டியூனோ 457 ஆகிய பைக்குகளில் இருக்கும் டிஸ்பிளே போலவே பொருத்தப்பட்டுள்ளுது. இந்த ஸ்கிரினில் மல்டிபிள் லே அவுட் ஆப்ஷன்கள் உள்ளன. முக்கியமாக இதில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளது. அதை கொண்டு அப்ரிலியா ஆப் மூலம் கால் அலர்ட்கள், நோட்டிஃபிகேஷன் மற்றும் மியூசிக் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை பெற முடியும்.

எஸ்ஆர் 160 ஸ்கூட்டரில் உள்ள மெக்கானிக்கல் அம்சங்களான ஃபிரேம், சஸ்பென்சன், பிரேக், டயர்கள் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை. அதே 14 இன்ச் வீல் தான் வழங்கப்பட்டுள்ளுது. பிரேக்கிங்கை பொருத்தவரை முன்பக்கம் டிஸ்க், பின்பக்கம் டிரம் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி பொருத்தப்பட்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
விஷூவலாக பார்க்கும் போது எஸ்ஆர்160 ஸ்கூட்டரை போலவே இந்த எஸ்ஆர் 175 ஸ்கூட்டரும் இருக்கிறது. கலர் ஆப்ஷன்கள் ஆர்எஸ் 457 பைக்கிலிருந்து இன்ஸ்பயர் செய்யப்ப்டடு சிவப்பு மற்றும் பர்பிள் சிவப்பு ஆகிய கலர்களில் பெயின்ட் ஸ்கீம்கள் உள்ளன.
இதன் விலையை பொருத்தவரை ரூ1.26 லட்சம் என்ற விலையில் விற்பனைக்க அறிமுகமாகியள்ளது. இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் யமஹா ஏராக்ஸ் 155 மற்றும் ஹீரோ ஜூம் 160 ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பைக்கில் ஒப்பன் ஃபேஸ் ஹெல்மெட் வைக்கும் அளவிற்கு ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெரிய ரக ஸ்கூட்டர்களுக்கு தற்போது தான் மார்கெட் அதிகரித்து வருகிறது. இன்று பல்சர் பைக் வாங்கும் மன நிலையில் உள்ள மக்கள் பல்சர் என்160 பைக்கை விட இந்த ஸ்கூட்டரை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. இந்த ஸ்கூட்டர் நிச்சயம் பெரிய விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








