மூஞ்சி பூச்சி மாதிரி இருக்கேனே அசால்ட்டா நினைச்சுடாதீங்க! ரேஸ் பைக்குகளுக்கே டஃப் கொடுக்கற மாதிரி இருந்துச்சு!
அப்ரில்லா (Aprilia) நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமாக ட்யூவோனோ 457 (Tuono 457) பைக் மாடல் உள்ளது. கேடிஎம் ஆர்சி 390 (KTM RC 390) மற்றும் யமஹா ஆர்3 (Yamaha R3) ஆகிய பைக் மாடல்களுக்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் ஓர் டூ-வீலரே இந்த அப்ரில்லா ட்யூவோனோ 457 ஆகும். இது சாலை பயன்பாட்டிற்கு உகந்த ஸ்போர்ட்ஸ் வகை பைக் மாடல் ஆகும். தனது புகழ்பெற்ற ஆர்எஸ்457 மாடலை தழுவியே இந்த மோட்டார்சைக்கிளை அப்ரில்லா நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது.
இதன் நேக்கட் வெர்ஷனாகவே ட்யூவோனோ 457 உள்ளது. இந்த பைக்கையே சமீபத்தில் ஓட்டி பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு கிடைத்தது. அப்போது இந்த பைக்கில் கிடைத்த சுவாரஷ்யமான அனுபவத்தையே இந்த பதிவில் வீடியோவாக உங்களுக்காக வழங்கி இருக்கின்றது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்தியாவில் இந்த பைக் ரூ. 3.95 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த பைக்கில் 457 சிசி திறன் கொண்ட பாரல்லல் ட்வின் வகை எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 36.9 பிஎச்பி பவர் மற்றும் 43.5 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

6 ஸ்பீடு கியர்பாக்ஸே ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் குயிக் ஷிஃப்டர் ஆகிய அம்சங்களுடன் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த பைக்கில் மூன்று விதமான ரைடிங் மோட்களை அப்ரில்லா நிறுவனம் வழங்கி இருக்கின்றன. ஈகோ, ரெயின் மற்றும் ரேஸ் ஆகியவையே அவை ஆகும்.


Click it and Unblock the Notifications








