ஒரு பைசா கூட விலை ஏறல! இந்த வண்டிய வாங்க இது தான் சரியான டைம்!
இந்தியாவில் 350 சிசி பைக்கிற்கான விலை கணிசமாக அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி வரி மாற்றத்தில் பாதிக்கப்பட்டது. இந்த செக்மெண்ட் தான். ஆனால் அப்ரிலியா நிறுவனம் தனது பைக்கின் விலையை அதிகரிக்க விடாமல் தடுத்துள்ளது. இது? எந்தெந்த பைக்குகளின் விலை ஏறவில்லை? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நீங்கள் ஒரு ஸ்போர்ட்ஸ் ரக பைக்கை வாங்கும் எண்ணத்தில் இருக்கிறீர்களா? அப்பொழுது இது தான் சரியான தருணம். இந்தியாவில் கடந்த 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி மாற்றம் அறிவிக்கப்பட்டது. இதனால் 350 சிசிக்கு அதிகமான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு இனி 28 சதவீதத்திற்கு பதிலாக 40 சதவீதம் விரி செலுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த செக்மெண்டில் உள்ள பைக்குகள் எல்லாம் விலையேறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்ரிலியா நிறுவனம் தனது ஆர்எஸ் 457 மற்றும் டியேூனோ 457 ஆகிய பைக்குகளின் விலையை ஏற்றாமல் இதற்கு முன்பு விற்பனையாகி வந்த விலையிலேயே விற்பனை செய்கிறது. இது எப்படி அவர்கள் ஜிஎஸ்டி கட்டாமல் ஏமாற்றுகிறார்களா என நீங்கள் யோசிக்கலாம். ஆனால் அப்படியல்ல, ஜிஎஸ்டி ஏற்றத்திற்கு தகுந்தவாறு தனது விலையை குறைத்துள்ளது.
அப்ரிலியா டியூனோ 457 பைக்கை பொரத்தவரை ஜிஎஸ்டி வரி மாற்றத்திற்கு முன்பு ரூ3.95 லட்சம் என்ற விலையில் அறிவிக்கப்பட்டது. இந்த பைக் ஜிஎஸ்டிக்கு பிறகு ரூ4.15 லட்சத்திற்கு விற்பனையாக வேண்டும். ஆனால் இதை விலையேற்றத்தை செய்யாமல் அதே ரூ3.95 லட்சத்திற்கே இந்த பைக்கை விற்பனை செய்கிறது. விலையேற்ற பணத்தை விலையை குறைத்து பைக்கின் விலை ஏறாமல் அந்நிறுவனம் பார்த்துக்கொள்கிறது.

அதே நேரம் அப்ரிலியா ஆர்எஸ் 457 பைக்கை பொருத்தவரை ஏற்கனவே விற்பனையாகி வந்த ரூ4.35 லட்சம என்ற விலையில் தான் தற்போதும் விற்பனையாகிறது. இது மட்டுமல்ல இதுவரை இந்த பைக்கில் க்விக் ஸ்விஃப்ட்ர் ஆப்ஷன் வேண்டும் என்றால் ரூ20,500 கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. தற்போது அந்நிறுவனம் அதையும் மாற்றி இதை இலவசமாகவே ஸ்டாண்டர்டாக வழங்க முடிவு செய்துள்ளது.
இதனால் ரூ15,000 ஜிஎஸ்டி உயர்வு மற்றும் ரூ20,500 க்விக் ஸ்விஃப்டர் என மொத்தம் ரூ35,500 வரை பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதை விட ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்கை வாங்க என்ன சலுகைகள் வேண்டும்? இதனால் தான் சொல்கிறோம். பைக் வாங்க இதுவே சரியான தருணம்.

இது மட்டுமல்ல இந்நிறுவனம் இதுவரை வழங்கி வந்த 3 ஆண்டுகள் அல்லது 36,000 கி.மீ வாரண்டி என்ற பேக்கேஜை, மாற்றி 4 ஆண்டுள் அல்லது 48,000 கி.மீ வரை வாரண்டி பேக்கேஜை வழங்குகிறது. இது மட்டுமல்ல வாரண்டி காலத்தில் பைக் வேறு ஒருவருக்கு விற்கப்பட்டாலும் பைக்கின் வாரண்டி பாதிக்கப்படாது அது தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி உயர்வில் எந்த விலையேற்றம் இல்லாதது. ஆர்எஸ் 457 பைக்கில் க்விக் ஸ்விஃப்டரை இலவசமாக பெறுவது, வாரண்டியை நீட்டிப்பது மட்டுமல்லாமல் அதை மறு விற்பனையில் தொடரும் திட்டம் ஆகிய நல்ல பலன்களை தருகிறது. இது மட்டுமல்ல இது வாகனத்தின் ரீசேல் வேல்யூவையும் அதிகரிக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அப்ரிலியா நிறுவனம் இப்படியாக விலையை அதிகரிக்க விடாமல் தடுத்தது வாடிக்கையாளர்களுக்கு நல்ல பலனை தரும். இதனால் இந்த பைக்கை வாங்க நினைப்பவர்கள் உடனடியாக வாங்குவார்கள். தீபாவளி நெருங்குவதால் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









