161 கி.மீ போகலாம்! கம்மி விலையில் நீண்ட தூரம் செல்லும் ஏத்தர் ஸ்கூட்டர் வந்தாச்சு!
ஏத்தர் நிறுவனம் தனது 450எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.7kWh வெர்ஷனை அறிமுகப்படுத்தியள்ளது. இது முழு சார்ஜில் 161 கி.மீ வரை ரேஞ்ச் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முன்னர் உள்ள 2.9kWh வேரியன்டை விட அதிகம் ஆகும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஏத்தர் நிறுவனம் தனது வாகனத்தை அப்டேட் செய்து வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் அதில் ஒரு பங்காக 3.7kWh பேட்டரி பேக் கொண்ட ஏத்தர் 450 எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய மார்கெட்டில் இறக்கியுள்ளது. இ்நத ஸ்கூட்டர் 1.45,999 என்ற விலையில் விற்பனைக்காக அறிமகமாகியுள்ளது.

இந்த ஸ்கூட்டர் ஏத்தர் 450எஸ் 2.9kWh வெர்ஷன் மற்றும் ஏத்தர் 450 எக்ஸ் ஆகிய ஸ்கூட்டர்களுக்கு இடையே நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின மோட்டார் செட்டப்பில் எந்த மாற்றமும் இல்லை. இந்த ஸ்கூட்டர் 5.4KW மோட்டாருடன் 22 என்எம் டார்க் திறனை வெளியிடும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் 90 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. 0-40 கி.மீ வேகத்தை வெறும் 3.9 நொடியில் பிக்கப் செய்துவிடும்.
இந்த ஸ்கூட்டரில் ஸ்மார்ட் எக்கோ, எக்கோ, ரைடு, மற்றும் ஸ்போர்ட் ஆகிய மோடுகள் உள்ளது. இந்த ஸ்கூட்டரிங் சேஸிஸ் மற்றும் பாடி பேனலில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை. பார்க்கும் போது 3.7kWh பேட்டரி பேக் உடன் அதே ஷார்ப்பான எல்இடி ஹெட்லைட் உடன் அதே 2.9kWh வெர்ஷன் ஸ்கூட்டர் லுக்கிலேயே இருக்கிறது.

இதில் 7 இன்ச் டீப் வியூ விஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆட்டோ பிரைட்னஸ், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, நேவிகேஷன் சப்போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. இது போக ஏத்தர் ஸ்டாக் ப்ரோ மூலம் ஹில் ஹோல்டு, ஃபால் சேஃப், தெஃப்ட் அலர்ட், ஃபைன்டு மை ஸ்கூட்டர், ஆட்டோ டர்ன் இண்டிகேட்டர், எம்ர்ஜென்ஸி ஸ்டாப் சிக்னல், அமேஸான் அலெக்ஸா இன்டகரேஷன் உள்ளிட்ட அம்சங்கள்ள உள்ளன.
இந்த ஸ்கூட்டரை வீட்டில் உள்ள சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் ஏற்றினால் 80 சதவீத சார்ஜ் ஏற 4.5 மணி நேரம் வரை எடுத்துக்கொள்கிறது. இந்தியா முழுவதும் 3300 இடங்களில் இந்த ஸ்கூட்டருக்கான பொது சார்ஜிங் மையங்களும் உள்ளன. இந்த ஸ்கூட்டருக்கு 8 ஆண்டுகள் பேட்டரி வாரண்டி, அல்லது 80 ஆயிரம் கி.மீ வரை வாண்டி வழங்கிப்படுகிறது.

இந்தஸ்கூட்டரின் எக்ஸ் ஷோரூம் விலை ஊருக்கு ஊர் மாறபடும். இந்த ஸ்கூட்டரின் விலையாக முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது பெங்களூரு விலை தான். டில்லியில் இந்த ஸ்கூட்டர் ரூ1,48,047 என்ற விலையிலும், 1,48,258என்ற விலையிலும் சென்னையில், ரூ1,47312 என்ற விலையிலும் விற்பனையாகிறது. உங்கள் அருகில் உள்ள டீலர்ஷிப்பில் சரியான விலையை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏத்தர் நிறுவன தயாரிப்புகள் அதிக ரேஞ்ச் தரும் வாகன்ஙகள் இல்லை என்ற பேச்சு மக்கள் மத்தியில் எழுந்து வந்த நிலையில் அதை தீர்க்க இப்படியான ஒரு பேட்டரி ஆப்ஷனை வழங்கியுள்ளது. இது நிச்சயம் மார்கெட்டில் மிகப்பெரிய போட்டியை உருவாக்கும்.


Click it and Unblock the Notifications









