ஏத்தர் ஸ்கூட்டர் விலை பாதியாக குறையப்போகுது! இனி ஈஸியா வாங்கிடலாம்! எப்படி தெரியுமா?
ஏத்தர் நிறுவனம் இந்தியாவில் பேட்டரியை சர்வீஸ் முறையில் அறிமுகப்படுத்தும் புதிய திட்டத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது. இதனால் வாகனத்தின் விலை 40 சதவீதத்திற்கும் அதிகமாக விலை குறையும் என தெரிகிறது. இது எப்படி சாத்தியம், பேட்டரி அஸ் ஏ சர்வீஸ் என்றால் என்ன? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஏத்தர் நிறுவனம் இந்தியா எலெக்ட்ரிக் டூவீலர்களை தயாரிக்கும் முன்னனி நிறுவனமாக இருக்கிறது. ஏத்தர் நிறுவனம் தற்போது பிரிமியம் ரக எலெக்ட்ரிக் வாகனமாக விற்பனை செய்து வரும் நிலையில் தற்போது புதிய திட்டம் மூலம் வாகனத்தின் விலையை குறைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி எப்படி எம்ஜி நிறுவனம் தனது விண்ட்ஸர் இவி காருக்கு பேட்டரியை சர்வீஸ் முறையில் வழங்குகிறதோ அதே போல ஏத்தர் நிறுவனமும் வழங்க முடிவு செய்துள்ளது.

ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை பிஸ்னர் ஆஃபீஸ் ரெவ்நீத் போகேலா இந்த தகவலை உறுதி செய்துள்ளார். அந்நிறுவனத்திடம் உள்ள தரவுகளை பார்க்கும் போது 2 விதமான வாடிக்கையாளர்கள் இருப்பது தெரியவந்தது. ஒரு விதமான வாடிக்கையாளர்கள் முழுமையாக வாகனத்தை சொந்தமாக்குவதன் மூலம் கிடைக்கும் பலன்களை அனுபவிக்க விரும்புகின்றனர். மற்றொரு பக்கம் உள்ள வாடிக்கையாள்ரகள் முதலில் வாகனத்தை வாங்க அதிக முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.
முதலில் குரூப் வாடிக்கையாளர்கள் மொத்தமாக வாகனத்தை வாங்க முடியும். அடுத்த குரூப்பிற்காக பேட்டரியை சர்வீஸ் முறையில் விற்க முடிவு செய்தனர். வாகனத்தின் பேட்டரிக்கான விலையை வழங்க வேண்டியதில்லை. அதற்கு பதிலாக ஒவ்வொரு மாதமும் பேட்டரியை பயன்படுயதற்கு ஏற்ப அதற்கான கட்டணத்தை மட்டும் செலுத்த வேண்டும்.

அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரியை சர்வீஸ் முறையில் வாங்கினால் வாகனத்தின் கட்டணம் எவ்வளவு? பேட்டரிக்கான கட்டணம் எவ்வளவு என்ற விபரங்களை இதுவரை அந்நிறுவனம் வெளியிடவில்லை. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட பணத்தை சப்ஸ்கிரிப்ஷன் கட்டணமாக வழங்கலாம். அல்லது எவ்வளவு கி.மீ பயன்படுத்தியுள்ளோமோ அதற்கான கட்டணம் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
இந்த முறையில் வாங்கினால் வாகனத்தை வாங்குவதற்காக செலவு வெகுவமாக குறையும். தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களில் 30-40 சதவீதமான செலவு பேட்டரிக்காக இருக்கும் நிலையில் அந்த பணம் வெகுவாக குறையும். இதனால் இந்த வாகனத்தின் விற்பனை அதிகமாகும் என்ற ரீதியில் இந்த திட்டத்தை அந்நிறுவனம் கொண்டு வருகிறது.

இந்தியாவில் ஏகப்பட்ட எலெக்ட்ரிக் டூவீலர் நிறுவனங்கள் இருக்கிறது. இந்த நிறுவனங்களில் பேட்டரியை சர்வீஸ் முறையில் எடுக்கும் ஆப்ஷன் கொடுக்கும் நிறுவனங்கள் குறைவு. அப்படி இருக்கையில் ஏத்தர் நிறுவனம் இப்படியான வழிமுறையை கொண்டு வரப்போவது நிச்சயம் பாராட்டதக்கது தான். இந்த வாகனம் இதனால் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏத்தர் நிறுவனம் பேட்டரி அஸ் ஏ சர்வீஸ் என்ற திட்டம் மூலம் புதிய புரட்சியை செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் சப்ஸ்கிரிப்ஷன் விலை குறைவாக இருந்தால் நிச்சயம் பெரிய அளவில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









